ஜிம்பா சிங்கம் சித்தார்த்... சித்தப்பா சிங்கம் அரவிந்த் சாமி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஸ்னி+ ஹாட் ஸ்டார் ப்ரிமியமில் ஊர் உலகமே சேர்ந்து லைவா பார்த்த தி லைன் கிங் படத்தில் ஜிம்பாவுக்கு நடிகர் சித்தார்த் டப்பிங் கொடுத்து இருக்கார். வில்லன் சிங்கம் சித்தப்பாவுக்கு குரல் கொடுத்து இருக்கார் அரவிந்த் சாமி.

தி லைன் கிங்.. கதை என்ன...சிறு பிள்ளைகள் மட்டும் இல்லாமல் பெரியவர்களும் மிக ஆவலாக பார்த்த தி லைன் கிங் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்ததா? கடந்த வருடத்தில் வெளியான தி லைன் கிங் படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ப்ரிமியம் கடந்த வெள்ளி அன்று லைவாக ஒளிபரப்பியது.

இந்த லைவை பாலிவுட் ஸ்டார்ஸ் உங்களுடன் சேர்ந்து பார்க்கிறார்கள் என்று தமிழில் விஜய் டிவி விளம்பரம் செய்து வந்தது.பலரும் ஆசையோடு பிரிமியம் தொகை கட்டி ஆப் டவுன்லோட் செய்தார்கள்.

 கேத்ரினா கைஃப் ஷ்ரத்தா கபூர்

கேத்ரினா கைஃப் ஷ்ரத்தா கபூர்

ஹ்ருதிக் ரோஷன், டைகர் ஷெராஃப், கேத்ரினா கைஃப் ஷ்ரத்தா கபூர் போன்ற பாலிவுட் நட்சத்திரங்களுடன் நம்ம ஊர் நட்சத்திரம் வாணி போஜன் உட்பட பலரும் நேரலையில் தி லைன் கிங் படத்தை லைவாக கண்டுகளித்ததை தங்களது இன்ஸ்டாவில் பதிவிட்டனர். இப்படி ஒரே நேரத்தில் உலக மக்களே கண்டு களித்த தி லைன் கிங் 13 லட்சம் கோடி வசூல் என்று சொல்கிறார்கள்.

 ஜிம்பா சிங்கம் சித்தப்பா சிங்கம்

ஜிம்பா சிங்கம் சித்தப்பா சிங்கம்

குட்டி சிங்கம் ஜிம்பா.. இந்த குட்டி சிங்கத்தின் சித்தப்பா சிங்கம் இருவருக்கும் இடையே நடக்கும் அதிகார போட்டிதான் கதை. ஜிம்பா சித்தப்பாவிடம் சென்று , நான்தான் இந்த காட்டுக்கு அடுத்த ராஜா.. அப்பா சொன்னார். இன்னிக்கு காட்டை எல்லாம் எனக்கு காட்டினார் என்று சொல்வதில் ஆரம்பிக்குது பகை.

 டப்பிங் குரல்கள்

டப்பிங் குரல்கள்

ஜிம்பாவுக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்து இருக்கிறார். சித்தப்பா சிங்கத்துக்கு நடிகர் அரவிந்த் சாமி குரல் கொடுத்து இருக்கார். ராஜ தூத பறவையாக இருக்கும் மரங்கொத்தி பறவைக்கு மனோ பாலா குரல் கொடுத்து இருக்கார். தி லயன் கிங் படத்தில் பாப்புலர் கதாபாத்திரங்கள் காட்டு பன்றிக்கு ரோபோ ஷங்கர், பூனைக்கு சிங்கம் புலி குரல் கொடுத்து உள்ளனர்.

 ஜிம்பா ஆட்சி

ஜிம்பா ஆட்சி

கழுதை புலிகளை உடன் வைத்துக்கொண்டு ஆட்சியை பிடித்த சித்தப்பா சிங்கத்தின் குள்ள நரித் தனத்தை ஜிம்பா வென்று விட... காட்டில் ஜிம்பாவின் ஆட்சி அமைவதுதான் கதை. அனிமேஷன்...கிராபிக்ஸ் என்று தத்ரூபமாக அனிமல்ஸ் உலவ தி லைன் கிங் ஸ்டோரி பலருக்கும் பிடித்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+