தேவிகாவின் வாழ்க்கையில் நடந்த மர்மம்.. உச்சத்தில் இருந்து வீழ்ந்த சினிமா தேவதையின் அதிர்ச்சி பின்னணி
சென்னை: முதலாளி பட வெற்றிக்கு பிறகு, ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் படம்தான் தேவிகாவை உச்சத்தில் கொண்டுபோனது.. எம்ஜிஆருடன் ஆனந்த ஜோடி என்ற ஒரு படத்தில்தான் இணைந்து தேவிகா நடித்தார். அதேபோல சிவாஜி கணேசன், ஜெமினி கணேசனுடன் தேவிகா இணைந்து நடித்த படங்கள் எல்லாம் ஹிட் என்று மறைந்த மூத்த நடிகை தேவிகா குறித்து பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் டாக்டர் காந்தராஜ்.
BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ், "கனகா அம்மா தேவிகாவை எனக்கு நன்றாக தெரியும்..

பிரமிளா என்பதுதான் தேவிகாவின் பெயர். நடிகை பானுமதி எடுத்த மணமகள் தேவை என்ற படத்தில் 2ம் கதாநாயகியாக நடித்திருந்தார்.. அவருக்கு ஜோடியாக அப்போதைய காமெடி நடிகர் ஏ..கருணாநிதி நடித்தார்.. கருணாநிதிக்கு ஜோடியாக அப்போது யாருமே நடிக்க மாட்டார்கள்.. ஆனால் தேவிகா நடித்திருந்தார்.
ஏரிக்கரை மேலே போன தேவிகா
அதற்கு பிறகு சேலத்தில் எடுக்கப்பட்ட முதலாளி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.. எஸ்எஸ் ராஜேந்திரனுடன் தேவிகா இணைந்து நடித்திருந்தார்.. முதலாளி படம் சூப்பர் ஹிட்டாகிவிட்டது. முழுக்க முழுக்க சேலம் ரத்னா ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட படமாகும்..
அதில் ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே என்ற பாடல் அப்போது பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸ் ஆனது.. பனைமரத்துப்பட்டி ஏரிக்கரையில் தேவிகா நடந்து செல்ல, பின்னாடியே சைக்கிளில் எஸ்எஸ்ஆர் பாடி வருவார்.. வெறும் புடவை அணிந்து, தேவிகா சாதாரணமாகத்தான் நடந்து செல்வார். அந்த ஒரு காட்சியே பல்லாயிரக்கணக்கான லவ் சீன்களை அடித்து நொறுக்கிவிட்டது.
உச்சத்துக்கு போன தேவிகா
முதலாளி படத்துக்கு பிறகு, ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் படம்தான் தேவிகாவை உச்சத்தில் கொண்டுபோனது.. எம்ஜிஆருடன் ஆனந்த ஜோடி என்ற ஒரு படத்தில்தான் இணைந்து தேவிகா நடித்தார். அதேபோல சிவாஜி கணேசன், ஜெமினி கணேசனுடன் தேவிகா இணைந்து நடித்த படங்கள் எல்லாம் ஹிட்.
இந்த அளவுக்கு உச்சத்தை தொட்ட தேவிகாவின் சொந்த வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை.. உதவி இயக்குனரான தேவதாஸ் என்பவரை தேவிகா திருமணம் செய்து கொண்டார்.. டிஎம் சவுந்தரராஜன், ஏஎல் ராகவனுக்கு உறவினர் ஆவார்.. சௌராஷ்டிராவை சேர்ந்தவர்.. சினிமாவில் வாய்ப்பு இல்லால், மனைவியின் வருமானத்தை நம்பியிருந்தார்.. வெகுளிப் பெண் என்ற படத்தை எடுத்தார். அந்த படம் விருதும் பெற்றது. தேவதாஸுக்கான அடையாளமே அவ்வளவுதான்.
தேவிகாவின் சொத்தில் பெரும்பகுதியை கணவர் எடுத்து சென்றுவிட்டதாக தேவிகாவே என்னிடம் ஒருமுறை சொன்னார்.
அதிசய பிறவி - தோல்வி
தேவிகா-தேவதாஸ் தம்பதியின் ஒரே மகள்தான் கனகா.. கரகாட்டக்காரன் யாருமே எதிர்பார்க்காத வெற்றியை தந்துவிட்டது..
அதற்கு பிறகு ரஜினியுடன் நடித்த அதிசய பிறவி சரியாக போகவில்லை.. அந்த கதை, ரஜினிக்கான கதையாக அமையவில்லை.. மேலும், கனகா ஹீரோயினாக இருக்கும்போது 2வது ஹீரோயினாக மாற்று மொழியை சேர்ந்த ஒருவரை அந்த படத்தில் நடிக்க வைத்தார்கள்.. ஆனால் அந்த படம் காலியாக காரணமே அந்த 2வது ஹீரோயின்தான்.
மன அமைதியின்றி கனகா
ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்த பிறகுகூட, கனகாவுக்கு சரியான படங்கள் அமையவில்லை.. குடும்பத்தில் சம்பாத்தியமும் இல்லை.. அம்மா தேவிகாவும் உடல்நலக்குறைவால் படுத்துவிட்டார்..
அப்பாவின் ஆதரவும் இல்லாமல், அம்மாவை பார்த்து கொள்ள முடியாமல், ஷூட்டிங்குக்கும் போக முடியாமல் தவித்தார்.. கடைசியில் பரிதாபமாக தனித்து நின்றுவிட்டார்.. பணத்துக்கு பஞ்சமில்லை என்றாலும், அவரது மனதில் அமைதி இல்லை, பாவம் கனகா" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications