பயபுள்ள நம்மள மாதிரியே சேட்டை பண்ணி இருக்குப்பா...சர்வைவருக்கு குவியும் 90ஸ் கிட்ஸ்களின் பாராட்டு
சென்னை: முதல்முறையாக ப்ரோமோ வில் இடம்பிடித்த உமாபதி தன்னுடைய அனுபவங்களை கூறி அனைவரின் மனதையும் பறித்து விட்டார்.
அடடா நம்ம செஞ்ச சேட்டைகளை எல்லாம் இவர் கூறுவதை கேட்கும் போது மனசுக்குள்ள ஒரு ஆனந்தம் பற்றிக் கொள்கிறதே என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
போரடிக்காத கதையை கேட்டதும் குதூகலமாக இன்றைய எபிசோடுக்கு பார்ப்பதற்காக ரசிகர்கள் ரெடி ஆகி விட்டார்கள்.

மிரளவைத்த டாஸ்க்
நேற்றைய டாஸ்க் பார்த்து அதிசயித்து போன சர்வைவர் ரசிகர்களின் இன்றைய ப்ரோமோவை பார்த்ததும் என்ஜாய் பண்ணி வருகின்றனர். இப்படி ஒரு நிகழ்ச்சியை தான் நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம் என்றும் இந்த மாதிரி நிகழ்ச்சி போய்க்கொண்டிருந்தால் போரடிக்காது என்றும் ரசிகர்கள் கமெண்ட் மழைகளை பொழிந்து வருகிறார்கள். ப்ரோமோவை பார்த்ததுமே இவ்வளவு பூரிப்பு என்றால் மெயின் பிக்சர்ஸ் இன்று இரவு செமையாக இருக்கப் போகிறது என்று தீவிரமான சர்வைவர் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்றே இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மாற்றாக இருக்கிறது என்று முதல் நாள் எபிசோட் டிலே பார்த்ததும் ரசிகர்கள் கூற ஆரம்பித்துவிட்டனர். நான்கு நாட்கள் முடிவடைந்து இன்று ஐந்தாவது நாளுக்காக மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதுதான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

வித்தியாசமான நிகழ்ச்சி
ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் சர்வைவர் நிகழ்ச்சி இதுவரைக்கும் இல்லாத ரியாலிட்டி ஷோவாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பொதுவாக சீரியல்களை பிடிக்காத ரசிகர்கள் கூட இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்துவிட்டனர். காரணம் இது வெளிநாடுகளில் அழகை அற்புதமாக காட்டிக் கொண்டிருப்பதும் பல பிரபலமான நபர்கள் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருப்பதும் ஒரு காரணம் தான். நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒன்னுக்கு ஒன்னு சளைத்தவர்கள் அல்ல
சர்வைவர் நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் அதிகமான போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்கள் தான். அவர்களில் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு காடர்கள் வேடர்கள் என்று இரண்டு டீம் ஆக பிரிக்கப்பட்டு அவர்களுக்குள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த டீம் கடைசி வரைக்கும் இப்படித்தான் இருப்பார்களா??அல்லது குழுக்கள் பிரிந்து தனி நபர்களாக தங்களது திறமையை நிரூபிக்குமா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தாலும் இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை என்று அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் முதல் நாளிலேயே இவர்களுக்கு டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் மிரட்டி விட்டது சர்வைவர்.

பக்கா 90ஸ் கிட்ஸ் உமாபதி
அத்தியாவசிய பொருள்களை பெறுவதற்காக அல்லல் பட்டுக் கொண்டிருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் ஜாலியாக பொழுதை போக்கி கொண்டிருக்கும் காடர்கள் டீமின் லேட்டஸ்ட் ப்ரோமோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வேடர்கள் டீம் ஒருபுறம் செண்டிமெண்ட் அட்டாக் பண்ணிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்குள் சிறுசிறு புகைச்சலும் பார்த்து சலித்துப்போன ரசிகர்களுக்கு காடர்கள் டீமின் ஒற்றுமையும் ஜாலியான கேரக்டர் தான் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. அப்படித்தான் இன்று உமாபதி தான் சிறுவயதில் செய்த சேட்டைகளையும் தன்னுடைய நண்பர்களைப் பற்றியும் சுவாரசியமாக பேசிக்கொண்டு இருக்கிறார். இவர்கள் அனைவரும் அமர்ந்து இருக்கும் இயற்கைச் சூழலும் அனைவரின் கண்களுக்கு புதுமையைப் புகுத்தி வருகிறது. அதுவும் உமாபதி கேரக்டரை பார்த்து அசந்துபோன ரசிகர்கள் 'இது நம்ம புள்ளப்பா" என்று அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications