சின்னத்திரை நடிகை லதா ராஜ்கமல் வீட்டில் திருட்டு.. மதுரவாயல் ஷூட்டிங் ஹவுஸில் திருடியோருக்கு வலை
சென்னை: சின்னத்திரை நடிகை லதா ராஜ்கமல் வீட்டில் ரூ 1 லட்சம் மதிப்புள்ள டிவி திருடு போயுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
நடிகர் ராஜ்கமல்... இவர் இயக்குநர் கே பாலசந்தரால் அறிமுகம் செய்யப்பட்டவர். இவர் தமிழ் சீரியல்களில் நடித்திருந்தார். சண்டிக்குதிரை, மேல்நாட்டு மருமகள் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்திருந்தார்.

இவர் சஹானா எனும் டிவி சீரியலிலும் நடித்திருந்தார். இவர் ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் நடனம் ஆடியிருந்தார். இவருடன் நடிகையும் மனைவியுமான லதா ராவ் கலந்து கொண்டார்.
ராஜ்கமல் ரஜினி நடித்த லிங்கா படத்திலும் நடித்திருந்தார். மனைவி லதா ராவ் பெங்களூரை சேர்ந்தவர். இவர் 30 க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இவர் விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இவர்களுக்கு இரு மகள்கள்- லாரா மற்றும் ராகா. லதா தில்லாங்கடி படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்திருந்தார்.

அது போல் கோட்டிகோப்பா 2, அதிசய உலகம் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். இவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு மதுரவாயலில் ஒரு வீட்டை கட்டியுள்ளனர். அதற்கு Rajkamal (RK) Shooting House என பெயரிட்டுள்ளனர். இங்கு ஷூட்டிங் நடத்திக் கொள்ள வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. அது போல் விளம்பர படங்களையும் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த நிலையில் இந்த வீட்டில் திருட்டு போயுள்ளதாக லதா புகார் அளித்துள்ளார். இந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ 1 லட்சம் மதிப்பிலான டிவியை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர் என தெரிவித்துள்ளார். போலீஸார் புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். அங்கு பணிபுரியும் பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அது போல் கிருஷ்ணா நகரில் உள்ள பாஜக பிரமுகர் பொன் பிரபாகர் வீட்டிலும் கார் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications