கில்லி திரைப்படத்திற்கு டப் கொடுக்கும் நம்ம ஊரு சீரியல்.. என்னமா யோசித்து இருக்காங்க
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னைத்தொடும் சீரியல் ப்ரோமோ தற்போது ரசிகர்களால் அதிகமாகத் கலாய்க்கப்பட்டு வருகிறது.
சீரியல்களில் திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு பல சீன்கள் இருந்து வருவது பார்க்கும் ரசிகர்களுக்கு விறுவிறுப்பை கூட்டியிருக்கிறதோ இல்லையோ கலாய்க்கும் நெட்டிசன்கள் கொண்டாட்டத்தை கொடுத்திருக்கிறது.

அனைவரையும் கவரும் புதுமை
பொதுவாக சின்னதிரையாக இருந்தாலும் சரி, வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி பார்க்கும் ரசிகர்களின் மனதை கவரும் விதத்தில் திரைப்படங்களும் கதையம்சமும் இருந்தால்தான் ரசிகர்கள் தொடர்ந்து அதனை பார்த்து வருவார்கள்.
அந்த வகையில் தான் தற்போது சீரியல்களின் கதைக்களமும் ரசிகர்களை அதிகமாக கவர்வதற்காக புதுமைகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு சில செயல்கள் ரசிகர்களை கவரும் விதத்தில் இருந்து வந்தாலும் ஒரு சில செயல்கள் ஏற்கனவே இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று சொல்லும் வகையில் இருந்து விடுகிறது.

150வது நாள் கொண்டாட்டம்
சீரியல்கள் பலவற்றில் கதைக்கு பஞ்சம் ஏற்பட்டு விட்டதா என்று நெட்டிசன்கள் கலாய்க்கும் வகையில் தான் தற்போது இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னைத்தொடும் சீரியல் ஆரம்பமாகும் போது அதிகமான எதிர்ப்புகளையும் பிரச்சனைகளையும் எதிர்கொண்டுதான் தொடங்கப்பட்டது. தற்போது நிகழ்ச்சி தொடங்கி 150 நாட்கள் முடிவடைந்த நிலையில் இந்த சீரியலின் ஒரு சில சீன்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. என்னதான் இது திரைப்படங்களில் வரும் சீன்களாக இருந்தாலும் சீரியலில் இதுவும் வேற லெவல் தான் என்று கூறி வருகின்றனர்.

திடீர் திருமணம்
தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் கதைப்படி கதாநாயகனும் கதாநாயகியும் வெவ்வேறு குணாதிசயங்களை பெற்றிருக்கின்றனர். கதாநாயகன் வெற்றி முரட்டுத்தனமான கேரக்டராக இருக்கும் நிலையில், கதாநாயகி அபிநயா வெளிநாடு சென்று படித்து இருந்தாலும் கலாச்சார மாறாத பெண்ணாக இருக்கிறார். கதாநாயகனும், கதாநாயகியும் முதல் சந்திப்பில் ஏற்பட்ட பிரச்சனையில் கதாநாயகன் கதாநாயகிக்கு அதிரடியாக தாலிகட்டி விடுகிறார். தாலிதான் தனக்கு முக்கியம் என்று குடும்பத்தையும் அனைவரையும் ஒதுக்கித் தள்ளி விட்டு தனது கணவர் வீட்டில் அபிநயா வந்து தங்கி விடுகிறார். அபிநயாவை வெற்றியின் தந்தை ஏற்றுக்கொள்ளாத நிலையில் வெற்றியின் அம்மா ஏற்றுக்கொள்கிறார். இந்தநிலையில் தற்போது வெற்றி ஒரு அரசியல் பிரமுகர் ஒருவரின் மகனை கொலைவெறியோடு தாக்கியுள்ளார்.

காப்பாற்றிய வளையல்
ரவுடியான வெற்றி தாலி கட்டியதை ஏற்றுக்கொண்ட அபிநயா, வெற்றி ஒருவரை அடித்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் வெற்றிக்கு எதிராக சாட்சி சொல்ல கிளம்பி விடுகிறார். ஆனால் வெற்றி மீது தவறு இல்லை என்பதை புரிந்து கொண்ட அபிநயாவின் தந்தை வெற்றிக்காக வாதாடி அவரை வெளியே கொண்டுவந்து விடுகிறார். இதனால் அந்த அரசியல்வாதி அபிநயாவை கடத்தி விடுகிறார். அபிநயாவை காப்பாற்றுவதற்காக வெற்றி எடுக்கும் முயற்சிகள் தான் தற்போது ரசிகர்களால் ரசிக்கப்பட்டும் நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டும் வருகிறது. அபிநயா மற்றும் வெற்றியின் இருவரின் கைகளையும் கயிற்றால் கட்டப் பட்டிருக்கும் நிலையில் அபிநயாவின் கையிலிருக்கும் வளையலால் அந்த கயிறை அறுத்து அபிநயா மற்றும் வெற்றி இருவரும் அங்கிருந்து தப்பிக்கின்றனர்.

என்னமா யோசிக்கிறாங்க
ஒற்றை வளையலை வைத்து வடம் போன்ற கையை அறுத்த வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் அபிநயாவை காப்பாற்றுவதற்காக காடு மலை என இவர்கள் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது சீரியலுக்கு சுவாரசியமாக இருந்தாலும், நெட்டிசன்கள் நன்றாக கலாய்த்து வருகின்றனர். திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு இவர்களுடைய சீன் இருக்கிறது என்பது பலருடைய கருத்தாக இருந்து வருகிறது. அதுவும் வெற்றியும் அபிநயாவும் புதருக்குள் ஒளிந்திருக்கும் போது அங்கே ரவுடி ஒருவன் கத்தியை வைத்து குத்தும்போது வெற்றி கையால் அதை பிடித்து விடுகிறார். வெற்றி கை வெட்டு பட்டு அந்த கத்தியில் இரத்தம் ஒட்டிக் கொண்டதும், அதை அபிநயா தனது புடவையால் துடைத்து விடுகிறார். இந்த சீன்களை ஏற்கனவே பார்த்திருந்தாலும் இது வேற லெவல் தான் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: கொடூரத்தின் உச்சத்துக்கு சென்ற விஜயா.. மயங்கி விழுந்த ரோகிணி! முத்து வீட்டுக்கு வந்த நபர் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு












Click it and Unblock the Notifications