Thenmozhi BA Serial: இப்போதுதான் ஆரம்பிச்சுது.. அதுக்குள்ளே 100 வது எபிசோடாமே!
சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பிஏ ஊராட்சி மன்றத் தலைவர் சீரியல் இப்போதுதான் ஆரம்பிச்ச மாதிரி இருக்கு. இப்போ 100 வது எபிசோடை எட்டிருச்சாம்.
சீரியல் ஆர்வலர்கள் எவ்வளவு ஆதரவு தருகிறார்கள் பாருங்கள். சீரியல்களில் சன் டிவி, விஜய் டிவி ஓரளவுக்கு பார்வையாளர்களை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது.
ஜீ தமிழ் டிவி சீரியல்களில் அடுத்த இடத்தையும் அதற்கு அடுத்த இடத்தில் கலர்ஸ் தமிழ் டிவியும் உள்ளது.

தேன்மொழி பிஏ சீரியல்
தேன்மொழி பிஏ சீரியல் உள்ளாட்சி தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு முறைகள் நடந்தால் அதை காலம் காலமாக ஜெயிக்கும் வழிகளை எப்படி தன்வசம் இழுத்து தக்க வைத்துக் கொள்கினறனர் என்பது குறித்து எல்லாம் வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக இந்த சீரியலை எடுத்து இருக்கிறார்கள்.

காந்திநகர் கதை
காந்திநகர் கதை என்றால் என்ன என்பது எல்லாருக்கும் தெரியும். இதை அப்பட்டமாக சொல்லாமல், இந்த முறை உள்ளாட்சி தொகுதி காந்திநகருக்கு ஒதுக்கி இருக்கிறார்கள். என்று காண்பிப்பதும், அந்த காந்திநகர்க்காரியை எப்படி இந்த வீட்டு மருமகளாக ஏற்றுக் கொள்வது என்று மாமியார் புலம்புவதையும் வைத்து தீண்டாமை என்பதை உணரும்படி கதையை கொண்டு சென்று இருக்கிறார்கள்.

ஸ்டார் காஸ்ட்
சீரியலின் ஸ்டார் காஸ்ட் நடிகையாக ஜாக்குலின் கலக்கி இருக்கிறார். அப்பாவி தேன்மொழியாகவும் இருக்கிறார். அடாவடி தேன்மொழியாகவும் நடித்து இருக்கிறார். அரைகுறையாக படிச்சுட்டு எல்லாம் தெரிஞ்சது போல பேசும் கதாபாத்திரம் ஜாக்குலினுக்கு... நன்றாக நடிச்சு இருக்கார்.

நகைச்சுவை நன்றாக
ஜாக்குலினுக்கு நன்றாக நகைச்சுவை வருகிறது. அதனாலோ என்னவோ இந்த கதாபாத்திரமும் கனக் கச்சிதமாக ஜாக்குலினுக்கு பொருந்தி இருக்கிறது.ஆரம்பிச்ச வேகத்துக்கு நிஜமாகவே உள்ளாட்சித் தேர்தலும் வந்துவிட சீரியல் நிஜமாகவே களைகட்டி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
