Thenmozhi BA Serial: ஏன்டா அருளு..ஏம்மா தேனு.. எங்கம்மா ஒளிச்சு வச்சிருக்கீங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் வீட்டுக்குள் மாட்டிக்கொண்டார்கள் தேன்மொழியும்.. அருள்வேலுவும். அம்மாவுக்கு போன் பண்ணலாம் போனை குடுன்னு கேட்கறான் அருளு.

என்கிட்டே எங்கே போன் இருக்குன்னு இவள் கேட்கிறாள்... என்கிட்டே எங்கே போன் இருக்குன்னு அவனும் கேட்கிறான். ரெண்டு பேருகிட்டேயும் போன் இல்லேன்னா போனை யார்தான் ஒளிச்சு வச்சது?

தேனுவை திட்டமிட்டு மதர் இன் லா வீட்டில் பூட்டி வைக்க...அருளு எதேச்சையா வீட்டில் மாட்டிக்க.. என்னங்கடா நடக்குது அங்கேன்னு மண்டை காயுது.

 மதர் இன் லா பழி

மதர் இன் லா பழி

தேன்மொழியை பழிவாங்கணும்னு மதர் இன் லா, தேனுவை வீட்டிலேயே கிடடீ.. உனக்கு அன்னம் தண்ணி ஆகாரம் கிடையாது...மின்சாரமும் கிடையாது.. கிடந்து சாவுன்னு சொல்லிட்டு வீட்டை பூட்டி குடும்பமா கிளம்பிட்டாங்க. ஃபாதர் இன் லாவும் தேன்மொழியை பழிவாங்க இதுக்கு கூட்டு களவாணி.

 பட்டப்பகலில் ஒளியிலே

பட்டப்பகலில் ஒளியிலே

பட்ட பகலில் தேனுவை வீட்டில் விட்டு பூட்டிட்டு போறாங்க. அருளு வீட்டுக்குள்ளே தெரியாத் தனமா மாட்டிகிட்டான். அம்மா.. அம்மா என்று கதவைத் தட்ட.. அப்போது வீட்டில் வெளிச்சம் நிறையத்தான் இருக்கு.ஆனா, பாருங்க நம்ம தேன்மொழி அழகி படத்துல ஒளியிலே தெரிவது தேவதையா என்கிற பாடலுக்கு மெழுகு வர்த்தி ஏத்தி எடுத்து வருவது போல் ஒரு காட்சியை கிளு கிளுப்புக்காக சேர்த்துட்டாங்க.

 தேனு தலைக் குளிச்சு

தேனு தலைக் குளிச்சு

தேனு தலைக்கு குளிச்சு.. சும்மா ஃபிரஷா வந்து நின்னு...ஹீரோ சார்...நம்ம ரெண்டு பேர் மட்டும்தான் வீட்டில் இருக்கோம். சும்மா சும்மா அப்படி பார்க்காதீங்க..இங்கே எது நடந்தாலும் நம்ம ரெண்டு பேருக்கு மட்டும்தான் தெரியும்ன்னு நினைக்காதீங்க. நம்ம மனசாட்சிக்குத் தெரியும்னு ரொம்ப மொக்கையா பேசறா.

 போனை குடு

போனை குடு

அருளு அய்யே என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டவனாக என் போனை குடுன்னு கேட்கிறான். என்ன ஹீரோ சார் நீங்க..உங்க போன்... என் போன் ரெண்டு போனையும் காணோமே...என்று சொல்றா. இந்த பக்கமா திரும்பி நீங்களே போனை ஒளிச்சு வச்சுட்டு தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா ஹீரோ சார்..அவ்ளோ காதல் என் மேல என்று மறுபடியும் தப்புக்கு கணக்கு போட்டுட்டா.

 எப்போ வருவாங்க

எப்போ வருவாங்க

ஹீரோ சார் போனவங்க எப்போ வருவாங்க என்று கேட்க..ம்ம்.. ராத்திரி ஆகும்னு சொல்றான் அருளு. அய்யா ஜாலி ஜாலி என்று அவன் பார்க்காதபோது டான்ஸ் ஆடுகிறாள் தேன்மொழி. இவனோ போனை ஒளிச்சு வச்சுக்கிட்டு என்னை டார்ச்சர் பண்ணலாம்னு நினைக்கிறியா.. அது நடக்காதுடின்னு நினைக்கிறான்... என்னதான் நடக்கப் போகுதோ.. பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+