Thenmozhi BA Serial: ஆமா அது யாரு.. தேவதையா?.. ஓ தேன்மொழியா.. வாவ்!
சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் அடிக்கடி சினிமா காட்சிகளை உல்டா செய்து சுவையாக கோர்த்துவிட்டு விடுவார்கள். இன்றைய எபிசோடில் அழகி படத்தில் வரும் ஒளியிலே தெரிவது தேவதையா பாடலுக்கு தகுந்த மாதிரி ஒரு காட்சியை இன்றைக்கு பார்த்து ரசிக்கலாம்.
ஹீரோ அருளு ஒளியிலே தெரிவது தேன்மொழியா என்று பாடும் ரேஞ்சில்தான் இன்றைய சுட்ட காட்சி.. சுடாத காட்சிகளாய் அருளும் தேன்மொழியும் காதல் செய்வார்களா என்று பார்த்துவிடுவோம்.
அப்பத்தா போட்டுக் கொடுத்த பிளான்படி எல்லாம் நடக்க.. இது எதிர்பாராத விதமாக நடக்கிறது போலும்...மதர் இன் லா தேன்மொழியை வீட்டுக்குள் விட்டு லாக் டவுன் செய்துவிட்டுப் போக...தேனுவுக்கு லக்கி பிரைஸ்!

தேனு லாக் டவுன்
தேன்மொழியை வீட்டுக்குள் வச்சு பூட்டிட்டு...எல்லாரும் வெளியில் போயிடலாம்னு மதர் இன் லா பிளான் பண்றாங்க. அதன் படி, தேனுவை மட்டும் வீட்டுக்குள் விட்டுட்டு, மின்சாரம், தண்ணி எல்லாத்தையும் கட் பண்ணி விட்டுட்டாங்க. இன்னிக்கு நீ காத்து கூட இல்லாம வீட்டுக்குள்ள கிடடீன்னு கருவிகிட்டுஎல்லாரையும் அழைச்சுக்கிட்டு கிளம்பிட்டாங்க.

மாட்டிக்கொண்ட அருள்வேல்
வீட்டில் அருள் இருந்ததை அம்மா பார்க்கலை.. அப்பத்தா பிளான் போட்டுட்டாங்க. அருளுக்கு தன் அம்மா வேணும்னு தேன்மொழியை மட்டும் வீட்டுக்குள் வச்சு பூட்டிட்டாங்கன்னு தெரியலை. அம்மா.. அப்பத்தான்னு ஜன்னலை பார்த்து கத்தறான். அப்போது அறைக்குள் வெளிச்சம் பரவுது. மெல்ல திரும்பிப் பார்க்கிறான்.

தெரிவது தேன்மொழியா
ஒளியிலே தெரிவது என்கிற அழகி பட பாடல் பாடல் ஒலிக்க தேன்மொழி எரியும் மெழுகு வர்த்தியுடன் தேவதையாய் காட்சி தருகிறாள். இது தேவதையா தேன்மொழியா என்று அருள் குழம்பி நிற்க.. என்ன ஹீரோ சார் அப்படி பார்க்கறீங்க என்று தேன்மொழி கிறங்கிய குரலில்.. அவ குரலுக்கு இது கொஞ்சம் கஷ்டம்தான்... இருந்தாலும் கேட்கிறாள்.

காத்து நல்லா வருது
ஒளியில் தெரியும் தேன்மொழியின் முகத்தை அருள் பார்க்க.. என்ன ஹீரோ சார் அப்படி பார்க்கறீங்க என்று தேன்மொழி கிறக்கமாக கேட்க.. அவனுக்கு பேச்சு வரலே.. வெறும் காத்துதான் வருது.. லேசா ஒன்னும் இல்லேன்னு தலையை மட்டும் ஆட்டறான்...என்ன நடக்கப் போகுதோ... லக்கி தேன்மொழி!
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications