Thenmozhi BA serial: கல்லுப்பட்டி கிராமத்தில் இதெல்லாம் பெரிய விஷயம்தான்...!
சென்னை: கிராமத்தில் மட்டும் இல்லை, நகரத்தில் கூட இன்னும் தங்களது பிளட் குரூப் வகை தெரியாமல் ஒரு சிலர் இருக்கிறார்கள் என்பது உண்மை.
இதே போலத்தான் கிராமத்திலும் ஒரு சிலர் இருப்பார்கள் என்று பார்த்தால் விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் பிளாட் குரூப்னா என்னவோ வாட்சாப் குரூப் மாதிரி கேள்வி கேட்கறாங்க.
வாட்சாப் குரூப் கூட கல்லுப்பட்டி கிராம மக்களுக்கு தெரியுது. பிளட் குரூப் வகை தெரியலையாம் பாருங்க. இதனால், அந்த ஊர் ஊராட்சி மன்றத் தலைவி தேர்தலுக்கு நிற்கும் தேன்மொழி ரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்கிறாள்.

தேன்மொழி பிஏ
கல்லுப்பட்டி கிராமத்தின் ஊராட்சி மன்றத் தேர்தலில் தலைவியாக நிற்கும் தேன்மொழிக்கு, ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவது மிக நல்ல விஷயமாக இந்த சீரியலில் இருக்கிறது. விஏஓ சாருக்கு மண்டையில் அடிபட அப்போதுதான் அவரின் அரிய வகை ரத்தம் கிடைக்க தாமதமாகிறது.

ரத்த தான முகாம்
ரத்த தான முகாம் நடத்த வேண்டும் என்று தேன்மொழி, கிராமத்தின் விஏஓவிடம் உதவி கேட்க, அவரும் அனைத்து உதவிகளையும் செய்கிறார். ரத்த தான முகாமில் உங்களின் ரத்தம் கொடுத்தால் ரத்த வகை என்ன என்று நாங்கள் சொல்கிறோம்.. ஜூஸ்..பிஸ்கெட், அரிசி என்று எல்லாமுண்டு என்று தேன்மொழி மைக் பிடித்து பேச கூட்டம் குவிகிறது.

கூட்டத்தில் முதியோர்
குறிப்பாக மூதாட்டி ஒருவரும் வரிசையில் நிற்க.. அவரிடம் போயி பேசுகிறாள் தேன்மொழி.அதுவும் ரத்தம் கொடுக்க வந்தவர் என்கிற முறையில்.. அத்துடன் ஒரு டயலாக் வச்சு இருக்கலாம். வயதில் மூத்தவர்கள் ரத்த தானம் கொடுக்க கூடாது. வேண்டும் என்றால் என்ன வகை ரத்தம்னு தெரிஞ்சுக்கிட்டு போங்கன்னு

கல்லுப்பட்டி கிராமத்துக்கு
கல்லுப்பட்டி கிராமத்து கதைக்கு இந்த விழிப்புணர்வு எபிசோட் தேவையானதாக கூட இருக்கலாம். இப்பொதெல்லாம் படித்த பிள்ளைகள் தமிழகத்தில் அதிகம். பட்டி தொட்டி எங்கிலும் இருந்து நகரங்ககளில் படிக்கிறார்கள்.இவர்கள் மூலம் ரத்த தானம் குறித்த விஷயங்கள் வீட்டில் படிக்காதவர்களுக்கும் தெரிந்து இருக்கும். அப்படி தெரியவில்லை என்றாலும், இது போன்ற சீரியல்கள் மூலம் சென்றடையும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications