thenmozhi BA serial: கவர்ன்மென்ட் மாப்பிள்ளைதான் தகப்பா... தேன்மொழி அலப்பற!
சென்னை: பொதுவா வயசு பொண்ணுங்க மாப்பிள்ளை இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும்னு கனவில் மிதப்பாங்க. தேன் மொழியும் அப்படித்தான். என்ன, இவ கனவு அடிக்கடி ரூட் மாறுது.
முதலில் நல்லா சம்பாதிக்கற பையனா எனக்கு மாப்பிள்ளை பாரு தகப்பான்னு சொல்ல, அப்பா சுப்பையாவும் பாவம் மெனெக்கட்டுகிட்டுத்தான் இருக்கார்.
இப்போ என்னடானா கவர்ன்மென்ட் மாப்பிள்ளையா பாரு தகப்பான்னு தேன்மொழி கண்டிஷன் போட்டுட்டா. விழி பிதுங்கி நிக்கறாரு தகப்பன்.

தேன்மொழி பிஏ
விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில், கிராமத்து வயசுப் பெண்கள் போலவே தனக்கும் கல்யாண கனவு வந்துருது. மாப்பிள்ளை அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும்னு ஆயிரத்தெட்டு கனவு கண்டு தகப்பனிடம் சொன்னவள் இப்போது புதிதாக தகப்பா எனக்கு கவர்ன்மென்ட் வேலை பார்க்கற பையன்தான் வேணும்னு கேட்கிறாள்.

வரதட்சணை எப்படி
என்ன தேனு திடீர்னு இப்படி சொல்றே.. அவங்கள் கேட்கற வரதட்சணை நம்மால தர முடியுமான்னு தகப்பன் திரும்பி கேட்கிறார். அதுதான் ஸ்கூட்டி இருக்குல்ல தகப்பான்னு தேனு சொல்ல, கவர்ன்மென்ட் வேலை பார்க்கற மாப்பிளைக்கு ஸ்கூட்டி எல்லாம் பத்தாது தேனுன்னு சொல்றார் அப்பா.

திடீர்னு என்ன
ஆமாம் என்ன திடீர்னு கவர்ன்மென்ட் வேலை பார்க்கற மாப்பிள்ளை கேட்கறேன்னு அப்பா கேட்க, ஆமாம், வயசாகற வரைக்கும் வேலை. வயசாச்சுன்னா பென்சன். ஒருவேளை மண்டைய போட்டுட்டா பொண்டாட்டிக்கு வேலை.. இல்லை பென்ஷன்னு எத்தனை வசதி இருக்கு தகப்பா. இது புரியாம என்னை எவனுக்கோ கட்டி வைக்கப் பார்த்தியேன்னு புலம்பறா.

விஏஓவிடம் இதையே
விஏஓவிடம் இதையே சொல்லி, சார் என் தகப்பன் என்னை ரொம்ப ஏமாத்திபுட்டார் சார்னு சொல்றா. என்னாச்சுன்னு கேட்க, எனக்கு கவர்ன்மெண்டு மாப்பிளை பார்க்காம பாழும் கிணத்துல தள்ள பார்த்துட்டாரு சார். நீங்கதான் எனக்கு கவர்ன்மென்ட் வேலை பார்க்கற மாப்பிளை பார்க்கணும் சார்னு சொல்றா.

நான் ஆஃபீஸர்
தேனு நான் விஏஓ புரோக்கர் இல்லைன்னு இவர் சொல்ல, என்ன சார் நீங்க புருஷன் செத்துப் போனவங்க எல்லாருக்கும் பென்சன் வாங்கித் தரீங்க. எனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து தரக் கூடாதான்னு கேட்கறா. சரி அதென்ன உனக்கு கவர்ன்மென்ட் வேலை பார்க்கறவங்கள் மேல ரொமன்ஸ் திரும்பி இருக்கும் கேட்க, எவ்ளோ வசதி சார்..இப்போ நீங்களே இருக்கீங்க.. திடீர்னு புட்டுக்கிட்டா , உங்க பொண்ணுக்குத்தானே வேலை கிடைக்கும்,. இல்லை பென்சன் கிடைக்கும்னு சொல்ல ரெண்டு பேரும் ஷாக்காகிடறாங்க.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications