Thenmozhi BA Serial: ஆகஸ்ட் 26 முதல் தேன்மொழி வரப் போறாளாமே!
சென்னை: விஜய் டிவியில் வரும் திங்கள் 26 ம் தேதி முதல் மதியம் 1:30 மணிக்கு தேன்மொழி பிஏ சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது என்று விஜய் டிவி அறிவித்துள்ளது.
இந்த சீரியலுக்காக பொண்ணுக்கு தங்க மனசு உள்ளிட்ட சில சீரியல்களின் நேர மாற்றத்தை அறிவித்து வருகிறது.
விஜய் டிவியில் சனிக் கிழமைகளில் சீரியல்கள் ஒளிபரப்பவதில்லை. ஆனால், தேன்மொழி சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவித்துள்ளது.

ஜாக்குலின் நடிகை
முதலில் விஜய் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர்தான் ஜாக்குலின். நல்ல நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த ஜாக்குலினுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்து நடிப்பிலும் அசத்தி இருந்தார் ஜாக்குலின்.

விஜய் டிவி சீரியல்
கோலமாவு கோகிலா படம் வெளியாகி ஒரு வருடத்துக்கு மேலான போதும், அடுத்து எந்த படமும் புக் ஆகவில்லை. விஜய் டிவியிலும் தலை காட்டவில்லை. எப்போதுமே விஜய் டிவி தன்னை நம்பி வந்தவர்களை, தங்களால் புகழ் பெற்றவர்களை கை விடாது. அப்படி ஒரு வாய்ப்பு போலத்தான், அவர் நடிக்கும் தேன்மொழி சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

ப்ரோமோ ஒரு மாதம்
கடந்த ஒரு மாதமாக தேன்மொழி சீரியலின் ஒரே ஒரு ப்ரோமோ மிக விரைவில் தேன்மொழி பிஏ என்று வந்துகொண்டே இருந்தது. ஒரு வழியாக இன்று தேன்மொழி சீரியல் ஒளிபரப்பாக உள்ள தேதி, நேரத்தை அறிவித்து இருக்கிறார்கள். ப்ரோமோவில் ஜாக்குலின் ஊராட்சி மன்றத் தலைவியாக நடிச்சு இருக்கார்.

ரசிகர்கள் ஜாக்குலின்
ஜாக்குலின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த போதே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்தனர். இந்த நிலையில் கோலமாவு கோகிலா படத்தில் வேறு நடித்து புகழோடு வந்திருக்கார். இவரை தூக்கி வாரி அணைத்துக் கொள்ள விஜய் டிவிக்கு கசக்குமா என்ன?
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications