Thenmozhi BA Serial: காந்தி நகர் என்றால் இப்படியும் எடுத்துக்கலாம்!
சென்னை: தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று அரும்பாடு பட்டார் தேசப்பிதா காந்தி. இருந்தாலும் இன்னமும் கிராமங்களில் தீண்டாமை என்பது இருக்கத்தான் செய்கிறது.
இப்படி வசிப்பவர்களின் தொகுத்திக்கு அந்த நாட்களில் காந்தி நகர், காமராஜ் நகர் என்று பெயர் வைத்து இருப்பார்கள். இப்போதும் அந்த பகுதி அப்படியே இருந்தாலும், முன்னேற்றம் என்பது வேகமாக இருக்கிறது.
பெண் கல்வி, சம வேலை வாய்ப்பு என்று இன்று அவர்கள் எங்கோ சென்று கொண்டு இருக்கிறார்கள். விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் காந்தி நகர் பொண்ணுதான் நம்ம ஹீரோயின் தேன்மொழி.

பூடகமாக சொல்லி
காந்தி நகருக்கு ஏண்டா போனே.. அங்கே போயிட்டு வந்தாலே குளிக்கணுமே என்று ஹீரோவோட அம்மா வசனம் பேசுவதை பார்த்தல், ஓ.. அந்த காந்தி நகரில் வசிப்பவள்தான் தேன்மொழியா என்று நாமே புரிந்து கொள்ள வேண்டியதுதான். ஊராட்சி மன்றத் தலைவியாக இந்த முறை ஒதுக்கப்பட்ட பகுதி பெண்களுக்குத்தான் வாய்ப்பு என்றதும், காந்தி நகரைத் தேடி ஊர் பெரியவர்கள் செல்வது நடப்பு முறையை காண்பிக்கிறது.

தலைவராக இருந்தவர்
ஏற்கனவே பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். இந்த முறை ஊராட்சி மன்ற எலெக்ஷனில் ஜெயிப்போம் என்று கனவு கண்டுகொண்டு செலவு செய்ய, திடீரென்று இந்த முறை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்குத்தான் பஞ்சாயத்துத் தலைவராக நிற்க வாய்ப்பு என்று அரசு அறிவிக்கிறது.

செய்யும் பெண்ணை
முன்பு இருந்த தலைவர் குடும்பம், இந்த முறை சம்பாதித்தே ஆக வேண்டும் என்று தனது தோட்டத்தில், வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண்ணை நிறுத்த வேலை பார்க்கிறார். இதுவும் நாட்டில் நடப்பதாகத்தான் இருக்கிறது.ஆனால், இது போல எல்லா ஊர் மக்களும் இருப்பதில்லை. அவர்களில் பிடித்தவரை நிறுத்தி தங்கள் வளர்ச்சிக்கு தேவையானதை செய்கிறார்கள்.

தலைவர் வேட்பாளர்
இந்த முறை முன்னாள் தலைவர் நிறுத்தும் வேட்பாளர் ஜெயிக்கக் கூடாது என்று எதிர்க்கட்சியாளர் நினைக்கிறார். அதனால், காந்தி நகரில் யாரை நிறுத்துவது.அதுவும் நம் பேச்சை கேட்பது போல வேட்பாளர் இருக்க வேண்டும் என்று யோசிக்கிறார்கள்.அப்படி அவர்கள் நினைவுக்கு வருபவள்தான் தேன்மொழி பிஏ..மேல ஒரு கோடு.
ஏற்கனவே தேன்மொழியாக நடித்து இருக்கும் ஜாக்குலின் ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டு இருப்பவர்.இந்த சீரியலில் நடிப்பதன் மூலம் இன்னும் அதிக ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications