Thenmozhi BA serial: பஞ்சாயத்து பிரசிடெண்ட் பையன்னு சொன்னதும்... ஜொள்ளு!
சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பி.ஏ சீரியல் இப்போதுதான் ஆரம்பமாகி இருக்கிறது. இதில் டாக்சி டிரைவரின் முதல் பெண்ணாக அதாவது தேன்மொழியாக நடிகை ஜாக்குலின் நடிச்சு இருக்காங்க.
நிகழ்ச்சித் தொகுப்பாளரா இருந்த போதே ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டு இருந்த ஜாக்குலின், சினிமாவிலும் நடிச்சு இருக்கார். இப்போது இவரை நம்பி தேன்மொழி என்கிற சீரியல் ஒளிபரப்பாகிட்டு வருது.
தேன்மொழி கெட் அப் ரொம்ப நல்லாருக்கு.கூலிங் கிளாஸ், பாவாடை தாவணி என்று பார்க்க நன்றாக இருக்கிறது. அப்பாவுக்கு செல்ல பெண், நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்று பெயருக்கு பின்னால் டிகிரி வேண்டும் என்று பாடுபடுகிறாள்.

படம் தனுஷ்
பரீட்சை நல்ல படியா பிட் அடிச்சு எழுதிட்டேன் தனுஷ் படம் வந்திருக்கு.அப்பா..வா எல்லாரும் சினிமாவுக்கு போகலாம்னு தேன் மொழி அப்பாவை கூப்பிடறா. ஏம்மா சவாரிக்கு ரெண்டு நாளா நீ படிக்கறே படிக்கறேன்னு சொல்லி போகலை. உனக்கு எக்சாம் இருக்குன்னு இன்னிக்கும் போகலை. இனிமேலாவது . போயிட்டு வரேன்ம்மா..உங்களை வீட்டில் விட்டுடறேன்னு சொல்றார். இல்லைப்பா சினிமாவுக்கு போகணும்னு பிடிவாதமா அழைச்சுட்டு போயிடறா.

சண்டை சூப்பர்
படம் பார்த்து கொண்டு இருக்கும் போதே, ஊர் பஞ்சாயத்து பிரசிடெண்ட் பையன், படம் பார்க்கணும் .திரும்ப முதலில் இருந்தே போடுங்கன்னு சொல்ல, தியேட்டரிலே சண்டை வந்துருது. பிரசிடெண்ட் பையன் ரொம்ப அழகா சண்டை போடறான்.இதை ரசிக்கும் தேன்மொழி விசிலடிச்சு சண்டையை ரசிக்கறா.

பிரசிடெண்ட் பையன்
காரில் வரும் போது கள்ளிப்பட்டிக்காரன் நல்லா சண்டை போடறான்...பிரசிடெண்ட் பையன் பத்தியே பேசி, புகழ்ந்துகிட்டு வர்றா. இந்த நேரத்துல பிரசிடென்ட் அவரது பையன் வந்த கார் நின்னு போகுது., வர்ற வண்டியை வழி மறிச்சு நிறுத்து. அவசரமா ஐயா பஞ்சாயத்து போர்டு ஆபீசுக்கு போகணும்னு சொல்றான். சரிங்க ஐயா வண்டியை நிறுத்தறேன்னு சொல்றான்.

தேன்மொழி அப்பா
தேன்மொழி வரும் காரை இடை மறிச்சு, எல்லாம் இறங்குங்க.. ஐயா பஞ்சாயத்து ஆபீஸ் போகணும்னு சொல்ல, இது எங்க சொந்த வண்டிங்க... சவாரி இல்லைன்னு சொல்றார் அப்பா. இல்லைங்க பஞ்சாயத்து பிரசிடெண்டும், அவர் பையனும் நடு ரோட்டில் நிக்கறாங்க. அதனாலதான்னு இவன் சொல்ல, பஞ்சாயத்து பிரசிடெண்ட் பையானான்னு தேன்மொழி காரிலிருந்து எட்டிப் பார்க்கிறாள்.
கூலிங் கிளாஸை கழற்றிவிட்டு... ஜொள்ளு... தேன் மொழிதான்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications