Thenmozhi BA Serial: சுற்று வட்டார கிராமத்தில் யாரும் ரத்த தானம் பண்றதில்லை...!
சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் விஏவுக்கு தலையில் பலத்த காயம்.ரத்த விரயம் அதிகம்.காயத்துக்கு காரணம் தேன்மொழிதான்.
கிராமத்தில் ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் இருப்பது ஒருபக்கம் என்றாலும், ரத்த தானம் செய்பவர்களின் ரத்தத்தை பரிசோதித்து பின்னர் ரத்தம் எடுப்பது மருத்துவர்களின் கடமை என்கிற விழிப்புணர்வு மருத்துவர்களிடம் இருக்கிறதா?
ரத்த தானம்னு முகாம் வைக்கறது.. ரத்தத்தை எடுத்துக்கறது... எயிட்ஸ் வந்தவங்க ரத்தம் யாருக்காவது ஏற்றப்பட்டு அவர்கள் பாதித்த பின்னர் புலம்புவது...இதுவும் இன்னும் இருக்கத்தானே செய்கிறது.

ரத்தம் ஏபி நெகட்டிவ்
விஏஓ அரவிந்துக்கு ஏபி நெகட்டிவ் குரூப் ரத்தம் தேவைப்படுது. என்கிட்டே எவ்ளோ ரத்தம் வேணா எடுத்துக்கோங்க...அரவிந்த சாரை காப்பாத்துங்கன்னு கெஞ்சறா தேன்மொழி. லாரியிலடிப்பட இருந்தவரை தேனு தள்ளிவிட அவர் ஒரு காலில்விழுந்து மண்டையில் காயமாகிறது. அதிருக்கட்டும் உன்னோட பிளட் குரூப் என்னன்னு கேட்கறாங்க நர்ஸ். அதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு தேன்மொழி சொல்ல, அப்புறம் எப்படிம்மா ரத்தம் எடுக்க முடியும்னு சொல்றாங்க.

ரத்தம் டெஸ்ட்
சரி வா.. உன்னோட ரத்தம் என்ன குரூப்னு டெஸ்ட் பண்ணலாம்னு பார்த்தால், தேன்மொழியோடது பி பாசிட்டிவ். அப்போதுதான் சொல்றாங்க, நர்ஸ்... சுத்து வட்டார கிராமத்துல யாரும் ரத்த தானம் பண்றதே இல்லை. ரத்தம் வேணும்னா வெளியில இருந்து வரவழைக்க வேண்டி இருக்குதுன்னு.

தமிழ் குரூப்
உனக்கு தெரிஞ்சவங்க ரத்தம் என்ன குரூப்னு கேளு.. இது ரேர் ரத்த வகை...யாருக்காவது இருந்தா அரவிந்த் சாரை உடனே காப்பாத்தலாம்னு நர்ஸ் சொல்றாங்க. அப்பாவுக்கு போன் பண்ணி தகப்பா நீ என்ன குரூப்னு கேட்க, உனக்குத்தான் தெரியுமே.. நான் எந்த குரூப்லயும் இருக்க மாட்டேனே சொல்றார். ஐயோ தகப்பா ரத்த குரூப் என்னனு கேட்டேன்னு சொல்ல, எனக்கு எப்படிம்மா தெரியும்.. இதுவரைக்கும் டெஸ்ட் பண்ணினதே இல்லைன்னு சொல்றார்.

தமிழ் உன் குரூப்
தகப்பா போனை தமிழ்க்கிட்டே குடுன்னு சொல்லி அவ கிட்டே நீ என்ன குரூப்னு கேட்க, இப்போத்தானே டென்த் படிக்கறேன்..அடுத்த வருஷம் பயலாஜி குரூப் எடுக்கலாம்னு இருக்கேன். ஏன் அரவிந்த் சார் எதாவது சொன்னாரான்னு கேட்கிறாள். அட ஞான சூனியங்களான்னு சொல்றா தேனு.

அன்புவிடம் கேட்கலாம்
சரி அன்புகிட்டே கேட்கலாம்னு கேட்டால் அவனும் காமெடி பன்றான். இரு நம்ம ஐயாகிட்டே கேட்கலாம்னு அவளை அரசியலில் முன்னிறுத்தும் அரசியல்வாதிகிட்டே ஐயா நீங்க என்ன ரத்தம்னு கேட்கறான்.அவர் பாய் கடையில் ரத்தம் வாங்கி அண்ணி பொரிச்சா அவ்ளோ சூப்பரா இருக்கும்னு சொல்றார்.
உண்மையில் இந்த நிலைமையை காமெடியாக சொல்லி இருந்தாலும், இப்படி கிராமங்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது போலும்!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications