Thenmozhi BA Serial: தேன்மொழி ஹீரோவை கரப்பான் பூச்சி கணக்கா கவுத்துப்புட்டாளே!
சென்னை: காந்தி நகர்னா நகரத்தில் வளர்ந்தவங்களுக்கு தெரியுமோ தெரியாதோ கிராமத்தில் இருப்பவர்களுக்கு நன்றாகவே அதன் அர்த்தம் புரியும்.
இது புரிந்தும் புரியாத மாதிரியே இருக்கட்டும் என்றுதான் விஜய் டிவியின் தேன்மொழி பிஏ ஊராட்சி மன்றத் தலைவர் சீரியலை ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி.
இந்த முறை தாழ்த்தப்பட்ட பெண்களுக்குத்தான் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக நிற்க வாய்ப்பு என்று அரசு அறிவிக்கிறது.

அருள்வேல் குடும்பம்
பரம்பரை பரம்பரையாக அருள்வேல் குடும்பம்தான் தேர்தலில் நின்னு ஜெயிப்பார்கள், இந்த முறை இந்த வாய்ப்பை விடக்கூடாது என்று, அருள்வேல் அப்பா தனது தோட்டத்தில் வேலை செய்யும் ஒருவரின் மனைவியை நிற்க வைத்து தங்கள் இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கலாம் என்று வேட்பாளராக நிற்க வைக்கிறார்கள்.

மற்றொரு சாரார்
இன்னொரு சாரார் இவர்களை எதிர்த்து நாம் இன்னொரு பெண்ணை நிற்க வைத்தே ஆக வேண்டும் என்று தேன்மொழியை நிற்க வைக்க ஒரு மனதாகத் தீர்மானிக்கிறார்கள். ,தேன்மொழியும் இல்லாத அலப்பறை எல்லாம் காண்பித்து ஒரு வழியாக தேர்தலில் நிற்க சம்மதிக்கிறாள்.

கை எழுத்து
கை நாட்டு வைக்க வேண்டிய இடத்தில் கை எழுத்துதான் போடுவேன்னு அடம் பிடிக்கிறா, நான் தேன்மொழி பிஏ சார்..என்னை போயி கை நாட்டு வைக்க சொல்றீங்கன்னு கேட்கிறாள். விஏஓ ஒரு அதட்டல் போட பிறகு கை நாட்டு வைக்கிறாள். இவளை நாலு பெண்கள் சேரில் உட்காரவைச்சு வேட்பு மனு தாக்கல் செய்ய அழைச்சுட்டு வர்ராங்க .அதே போல அழைச்சுக்கிட்டு போறாங்க.

அருள்வேல் வீட்டுக்கு
இந்த சமயத்தில்தான் அருள்வேல் வீட்டுக்கு விஷயம் தெரியுது.நம்ம வேட்பாளரை எதிர்த்து காந்திநகர் தேன்மொழி போட்டி போடப் போறான்னு. அருள்வேல் தனது நண்பனுடன் தேன்மொழி வீட்டுக்கு போறான். இவனைத்தான் சொல்லணும்னு தேன்மொழி அப்பாவை அருள்வேல் சட்டையைப் பிடித்து இழுத்து அடிக்கப் போக.
தட்டி விடுகிறாள் தேன்மொழி. பார்க்கறதுக்குத்தான் நான் விளையாட்டு பொண்ணு.என் குடும்பத்துக்கு எதாவது ஒண்ணுன்னா நான் சும்மா இருக்க மாட்டேன் ஹீரோன்னு சொல்லி அருள்வேலை கரப்பான் பூச்சி மாதிரி கவுத்துட்டா தேன்மொழி.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications