Thenmozhi BA Serial: தேன்மொழி சீரியஸாகிட்டா... அவளுக்கு கோவம் வந்துருச்சு...!
சென்னை: தேன்மொழி விளையாட்டு பொண்ணு அவளுக்கு எது செய்தாலும் கண்டுபிடிக்க தெரியாதுன்னு நினைச்சவங்களுக்கு பதிலடி கொடுக்கற மாதிரி கோவம் வந்து சீரியஸாகிட்டா.
விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் தேன்மொழியாக நடிக்கும் ஜாக்குலின் நன்றாக நடிச்சு இருக்கார்.இவருக்கு ஏத்த கதாபாத்திரமே இவருக்கு அமைஞ்சது இவருக்கு ஒரு லக்குன்னு சொல்லலாம்.
விளையாட்டு பொண்ணை ஊராட்சி மன்றத் தலைவியா நிக்க வச்சு, தேவர் ஐயாவுக்கு எதிர்க் கட்சித் தலைவர் கோபத்தை சம்பாதிச்சுக்கறார்.

தேனுவை பழிவாங்க
தேவர் ஐயா தனக்கு எதிராக தேர்தலில் நிற்கும் தேனுவை பழி வாங்க, அந்த ஊரின் விஏஓவுடன் தேனுவை இணைச்சு போஸ்டர் ஒட்டி தேனுவை மக்கள் வெறுக்கும்படி செய்துட முயற்சிக்கறாங்க. தேனுவை ஊர்க்காரங்களும் இழிவாக பேச துடிச்சு போகிறாள் தேனு.

அடுத்த நொடி
உடனடியா விழிச்சுக்கிட்ட தேன்மொழி, இந்த ஊரில் போஸ்டர் ஒட்டறவன் ஒருத்தன்தான் இருப்பான்.. அவன் யாருன்னு உடனே கண்டுபிடிச்சு கூப்பிட்டுக்கிட்டு வா அன்புன்னு சொல்லி அனுப்பறா. அன்பு அவனை கண்டுபிடிச்சு இழுத்துட்டு வர்றான்.

ஜனங்க முன்னால்
அவனை ஜனங்க முன்னால் தள்ளி விட்டு, யாருடா இப்படி இணைச்சு போஸ்டர் ஓட்ட சொன்னதுன்னு கேட்க, தேவர் ஐயாவை காட்டிக் குடுத்தா உயிரே போயிரும்னு நினைச்ச அவன் பொய் சொல்றான்.அதாவது தேனு உன்னை நான் ஒரு தலையா காதலிச்சேன்.நீ கண்டுக்கவே இல்லை.அதனாலதான் இப்படி பழி வாங்கினேன்னு சொல்றான்.

காதலிச்ச தறுதலையா
ஒரு தலையா காதலிச்ச தறுதலையா நீ..உன்னை என்னதான் செய்யறதுன்னு தேனு நிற்க..தேனு உன்னை இப்படி கெட்ட பெயருக்கு உள்ளாக்கினவனை சும்மா விடக் கூடாது தேனுன்னு ஊர்க்காரங்க சொல்றாங்க. அவனை விடுங்க..நீங்க என்னை கொஞ்ச நேரத்துக்கு முன்னால அந்த போஸ்ட்டரை நம்பி என்னென்ன பேசுனீங்க.எங்க குடும்பத்தையே அழ வச்சீங்களே.. உங்களை என்ன பண்றதுன்னு கேட்கறா.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவுன்னு அவ்வையார் சொல்லி இருக்கார்னு தேனு சொல்ல,தேனு அது ஔவையார் இல்லை.திருவள்ளுவர் சொன்னதுன்னு சொல்றா தங்கச்சி.இப்படி ஜாலியாகவும் அர்த்தத்துடனும் கதை போகுது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications