Thenmozhi BA Serial: இது அதைவிட கொடுமையாவுல்ல இருக்குது...!
சென்னை: முதலில் பண ஆசையை காட்டின தேவராஜ் ஐயா...அடுத்து தேன்மொழியை மருமகளா ஆக்கிக்கறேன்னு சொல்றது அதைவிட கொடுமையாவுல இருக்குது.
விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் இந்த முறை காந்தி நகர் பெண்களுக்குத்தான்ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புன்னு அரசு அறிவிக்குது.
காந்தி நகர்னா.. உங்களுக்குத்தான் தெரியுமே... காலம் காலமாக ஊராட்சி மன்றத் தலைவரை இருந்த தேவராஜ் ஐயாவின் எதிர்க்கட்சி தலைவர் தேன்மொழியை தேர்தலில் நிற்க வைக்கிறார்.

மக்களுக்கு தேன்மொழி
காந்தி நகர் மக்களுக்கே தேன்மொழியை ரொம்ப பிடிச்சு போகுது. அவள் ஜெயித்து விடுவாள் என்கிற சூழல். எந்த ஊராட்சி மன்றத் தலைவரா இருந்தாலும் நம்ம வீட்டில் இருந்துதான் போகணும்னு எண்ணம் தேவராஜ் ஐயாவுக்கு. ஒன்னு வீட்டுல வேலை செய்யணும்.. இல்லை வீட்டுக்கு மருமகளா இருக்கணும்னு முடிவு பண்ணிடறார்.

ஹீரோ ஆவேசம்
தேவர் ஐயா முதலில் தேன்மொழி வீட்டுக்கு போயி பணம் மாசம் ஒரு லட்சம் குடுத்துடறேன். உன் பொண்ணு சும்மா பேருக்கு ஊராட்சி மன்றத் தலைவியா இருந்தா போதும்னு சொல்றார் . அது தப்புய்யா.. காந்தி நகர் மக்களே தேன்மொழியை நம்பி ஒட்டு போட்டு இருக்காங்க. அவளால என்ன செய்ய முடியுமோ அதை செய்யட்டும்னு அப்பா சுப்பையா சொல்றார். இங்கே ஹீரோ அருள் அப்பா என்னை காந்தி நகர்க்காரிக்கு விலை பேசறாரான்னு குதிக்கறான்.

தேவர் ஐயா கொக்கி
உடனே அடுத்த கொக்கி போட தயாரான தேவராஜ் ஐயா, எனக்குத் தெரியும் சுப்பையா.. நீ என்னை மாதிரி நேர்மையானவன். நேரடியா விஷயத்துக்கு வரேன். என் பையன் அருள் உன் பொண்ணை எங்கியோ பார்த்துட்டு கட்டினா தேன்மொழியைத்தான் கட்டுவேன்னு சொல்லிட்டான். அதான் பொண்ணு கேட்க வந்தேன்னு சொல்றார்.

கொடுமையாவுல்ல இருக்கு
சுப்பையா மனசுக்குள்ளே நினைக்கறார்.. இது அதைவிட கொடுமையாவுல்ல இருக்கு என்பது போல. தவிர தேன்மொழிக்கு அருளை ரொம்ப பிடிக்கும்னு வேற சுப்பையாவுக்குத் தெரியும். ஹீரோ சார் ஹீரோ சார்னு அந்த ரேஞ்சில் வச்சுத்தான் தேன்மொழிக்கு பிடிக்கும். இதை தேன்மொழிகிட்டே எப்படி சொல்வது என்று தவிக்கறார் சுப்பையா.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications