Thenmozhi BA Serial: என்னதான் விளையாட்டு பெண் என்றாலும்.. இப்படியா தேனு?
சென்னை: நாம் பார்க்கும் சில விஷயங்கள், நமக்கு தெரியாததையும் தெரிவிப்பதாக இருக்கிறது. அது நம்மை அறியாமல் நம் மனதில் பதிந்து, இதை நாமும் செய்தால் என்ன என்கிற அளவுக்கு யோசிக்க வைக்கிறது.
சிலரை அந்த விஷயத்தை செய்யவும் வைத்து விடுகிறது. இப்படித்தான் பலரும் வம்பில் மாட்டிக்கொண்டு வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள்.
சின்ன சின்ன விஷயமாக இருந்தாலும், பார்த்து பார்த்து மிக கவனமாக செய்ய வேண்டும். ஒன்றுமே இருக்காது, சின்ன தவறு கூட பெரும் பிரச்சனையில் மாட்டிவிட்டு விடும்.

பிஏ படிச்ச தேன்மொழி
விஜய் டிவியின் தேன்மொழி சீரியலில், தேன்மொழியை நம்பி சின்ன குழந்தையை விட்டுட்டு போகிறார் விஏஓ அரவிந்த். ஆனால், தல படத்துக்கு போக முடியாமல் போய்விட்டதே என்று கவலைப்பட்ட விளையாட்டு பெண் தேன்மொழி ஒரு காரியம் செய்கிறாள்.

அதிகமாய் மிளகாய்
அரவிந்தின் குழந்தைக்கு நல்ல குலாப் ஜாமூன் கொடுத்துவிட்டு, அரவிந்த் சாப்பிடும் குலாம் ஜாமூனில் கடைசியில் சிரிஞ் வாங்கி வர சொல்லி, தண்ணீரில் மிளகாய்த் தூளைக் கொட்டி கரைச்சு அந்த தண்ணீரை குலாப் ஜாமூனில் செலுத்திடறா ஆனால், அதை சின்ன குழந்தை சாப்பிட்டு அதுக்கு ரொம்ப வீசிங் வந்துருது.

சொல்லவில்லை அவர்கள்
குலாப் ஜாமூனில் மிளகாய்த் தூள் கரைசல் செலுத்தியதை சொல்லும்போது அந்த இடத்தில் டேஷ் விட்டு விடுகிறார்கள். ஆனால், பார்ப்பவர்களுக்கு புரிகிறது. இப்படி பயம் இருந்தும், இந்த காட்சியை எடுத்துதான் ஆக வேண்டுமா?

ஓரளவுக்குத்தான் சகிச்சுக்க
என்னதான் விளையாட்டு பெண் என்றாலும், நீங்கள் காண்பிக்கும் எல்லா காட்சியையும் சகிச்சுக்கிட்டு பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா? ஊர் உலகத்தில் கெட்டுப் போக கெடுதலை செய்ய எத்தனையோ வழி முறைகள் இருக்கின்றன.
நாமும் இதில் சேர்ந்து கொண்டால் எப்படி?












Click it and Unblock the Notifications