Thenmozhi BA Serial: ஹீரோ கட் அவுட்டை அடுப்பில் வைக்கறதா?
சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் கிராமத்தில் சாதாரணமாக இருக்கும் ஆர்வக் கோளாறு பெண் தேன்மொழி. இவள் தன் நிலையை உணர்ந்தவள்.
அதாவது விரலுக்கு ஏற்ற வீக்கம் என்பார்களே அது போல.அதிகம் ஆசைப்பட்ட மாட்டாள். மற்றபடி ஆர்வக் கோளாறு உள்ள பெண்களுக்கு வரும் பியூட்டி பார்லர் போகும் ஆசை, நல்ல புருஷன் கிடைச்சால் செட்டில் ஆகிடணும்னு ஆசை.. இதெல்லாம் உண்டு.
இவளுக்கு ஹீரோ என்றால், கிராமத்து பிரசிடெண்ட் மகன் அருள்வேல்தான் ஹீரோ. அதாவது சினிமா ஹீரோ மாதிரி. அவனை ரசிப்பாள், அவனை யாராவது திட்டினால் சப்போர்ட் செய்வாள். கட் அவுட் கிழிந்தால் மெனக்கெட்டு ஒட்டி வைப்பாள்.

தேன்மொழி அருள்வேல்
இப்போது அருள்வேலின் அப்பா எம்எல்ஏ வாக ஆசைப்படுவதால், இளைய மகன் அருள் வேலுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கலாம் என்று, அவனை வேட்பாளராக முன் நிறுத்த ஆசைப்படறார். அருள்வேல் அரசியலுக்குத் தயாராகி, கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்வது, தப்பு செய்தவர்களை அடித்துவிட்டு, அவர்களுக்கு பணமும் தருவது என்று தூள் பறத்துகிறான். இதை எல்லாம் அவ்வப்போது தேன்மொழி பார்த்து வியக்கிறாள்.

ஹீரோ இவர்தாண்டா
தன்னுடைய நண்பனிடம் இவர்தாண்டா ஹீரோ.அடிக்கவும் செய்யறார், பணமும் கொடுக்கிறார். உன்னால அடிக்க முடியும், பணம் கொடுக்க முயுமா? இவர்தாண்டா என்னோட ஹீரோன்னு சொல்றா. அன்றிலிருந்து அருள்வேல் கட் அவுட்டை யாரவது கிழிச்சால் கிழிக்கக் கூடாதுன்னு புத்திமதி சொல்றது.ஹீரோ சார், எங்க ஏரியா பொண்ணுங்க ஒட்டு உங்களுக்கு வேணும்னா எல்லார் வீட்டுக்கும் ஷவர் போட்டு குடுக்கறேன்னு சொல்லுங்க.உங்களுக்குத்தான் வயசுப் பொண்ணுங்க ஓட்டுன்னு சொல்றதுன்னு விளையாட்டுப் பெண்ணாகத்தான் இருக்கிறாள்.

கட் அவுட்
அருள்வேல் கட் அவுட்டை தூக்கிட்டு போறதை அருள்வேள் பார்த்துடறான்.அவனின் உதவியால் ஏம்மா பொண்ணு, அந்த கட் அவுட்டை எங்கே தூக்கிட்டு போறே...வீட்டில் வச்சு அடுப்பு எரிக்கவான்னு கேட்கிறான்.ஹீரோ சார், இவர் மாதிரி எடுபிடி எல்லாம் நீங்க பக்கத்துல வச்சுக்கிட்டீங்க ஜெயிக்கவே முடியாது.இந்த கட் அவுட் காத்துல கீழே விழுந்துருச்சு..மழை வந்தால் நனைஞ்சு போகும்.உங்க அழகான முகம் அசிங்கமா தெரியும்.அதுக்குத்தான் என் வீட்டுக்கு எடுத்துட்டு போயி பத்திரமா வச்சுக்கப்போறேன் ஹீரோ சார்னு சொல்றா.

முடியலை அலப்பறை
அப்பா இதோ பாருங்க இவளோட அலப்பறை தாங்க முடியலை.ஏதோ ஒரு நடிகரோட கட் அவுட்டை எடுத்துக்கிட்டு வந்து வீட்டில் வைக்கிறாள், முடியலைப்பான்னு சொல்றா தங்கச்சி. இது சினிமா நடிகர் கட் அவுட் இல்லைப்பான்னு தேன்மொழி சொல்ல, அப்போ யாருதுன்னு அப்பா கேட்க, அப்பா பிரசிடெண்ட் மகன் அருள்வேல் கட் அவுட்ப்பான்னு தேன்மொழி சொல்லறா, விடும்மா அவ வச்சுகிட்டு இருந்துட்டு போறா.எலக்ஷன் முடிஞ்சதும், அடுப்பு எரிக்க வச்சுக்கலாம்னு சொலலும், அப்பாவைப் பார்த்து ஒரு முறை முறைக்கறா தேன்மொழி.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications