Thenmozhi BA Serial: வீரம்...விவேகம் ...விசுவாசம் எல்லாம் ஹீரோவுக்குத்தானே!
சென்னை: எப்படி இளம் கன்று பயமறியாது என்று சொல்வார்கள். அது உண்மைதான் என்று தெரிய வைக்கிறது விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியல்.
சீரியலைப் பார்க்கையில் நம்ம வீட்டில் ஒரு விளையாட்டுப் பெண் தேன்மொழி மாதிரி இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஜாலியாக இருக்கிறது.
இன்னும் கதையில் ஒரு சீரியஸ்னெஸ் காண்பிக்கப் படவில்லை. அதுவும் ஒரு நல்லதுக்குத்தான் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

சினிமாவில் வரும் பன்ச்
சினிமாவில் வரும் பன்ச் வசனங்களை உதாரணத்துக்கு சொல்வது... அதாவது மன்னிச்சுக்கோங்கன்னு சொல்லிட்டு மன்னிப்பு எனக்கு பிடிக்காத வார்த்தைன்னு மட்டும் சொல்லிடாதீங்கன்னு சொல்றது... மன்னிக்க தெரிஞ்சவன் மனுஷன்..மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் மாமனுஷன்னு சொல்றது என்று எல்லாமே வேடிக்கையாக இருக்கிறது.

உலக நாயகன்
சூப்பர் ஸ்டார், உலக நாயகன், தல, தளபதி.. விஜயகாந்த் என்று யார் பேசும் பன்ச் வசனத்தையும் விட்டு வைக்கவில்லை தேன்மொழி. இவள் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் மகன் அருள்வேலை வம்புக்கு இழுத்து பேச, இவளை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கணும்னு தேன் மொழியை கடத்தறான் அருள்.

நீங்களா ஹீரோ
ஹீரோ சார்.. நீங்க என்னை கடத்தற அளவுக்கு நான் ஒர்த்தே இல்லை. வேட்டையாடு விளையாடு படத்துல பிக்பாஸ் கண்ணு வேணும்னு கேட்பார் அதுபோல ஏதாவது கேட்க போறீங்களா ஹீரோ சார்னு தேன்மொழி பயம் இல்லாமல் பேசறா. நீ பஞ்சாயத்து தலைவி தேர்தலில் நில்லு.இல்லை தெருவோரம் நில்லு.என் குடும்பத்தை இழுத்து இனிமேல் பேசாதேன்னு சொல்றான்.

ஹீரோ சார்
ஹீரோ சார்.. நீங்க என்னை கடத்தற அளவுக்கு நான் ஒர்த்தே இல்லை. வேட்டையாடு விளையாட்டு படத்துல பிக்பாஸ் கண்ணு வேணும்னு கேட்பார் அதுபோல ஏதாவது கேட்க போறீங்களா ஹீரோ சார்னு தேன்மொழி பயம் இல்லாமல் பேசறா. நீ பஞ்சாயத்து தலைவி தேர்தலில் நில்லு.இல்லை தெருவோரம் நில்லு.என் குடும்பத்தை இழுத்து இனிமேல் பேசாதேன்னு சொல்றான்.
சீரியல் ரொம்ப ஜாலியா இருக்கு.. யதார்த்தமான வசனங்கள் இந்த சீரியலுக்கு பிளஸ்.












Click it and Unblock the Notifications