Thenmozhi BA Serial: சித்தி.. யாருகிட்ட... தேனுகிட்டேயேவா?
சென்னை: தேன்மொழி தன் அப்பாவை உரசியபடி நடந்து வந்த சித்தியைப் பார்த்து அதிர்ச்சியாகி அப்பாவை விலக்கி விட்டு சித்தி பக்கத்தில் போகிறாள். அப்போதுதான் யாருகிட்ட அப்படீன்னு வசனத்தை பேசறா.
விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் கதையும் இருக்கு.. அதே சமயம் ரொம்ப யதார்த்தமா ஜாலியாவும் எபிசோட் நகருது.
இது போன்ற சீரியல்கள் தொலைக்காட்சிகளில் பார்ப்பது என்பது அரிதாகி உள்ளது. அதனால் தேன்மொழி பிஏ ஊராட்சி மன்றத் தலைவர் சீரியல் பார்க்க பார்க்க நன்றாக இருக்கிறது.

அப்பா சித்தி
அம்மா இல்லாத பெண் தேன்மொழி. அதாவது அப்பா மனைவி இல்லாமல் வாழ்கிறார் என்கிற சென்டிமென்ட் பிழியும் காட்சிகள் எல்லாம் இல்லாமல் சீரியல் ஜாலியா போகுது. கல்யாணமான சித்தி அவங்க வீட்டில் இருந்து யதார்த்தமாக வீட்டுக்கு வந்தாலே சித்தி இதை சாக்கா வச்சு அப்பாவை சைட் அடிக்கிறியான்னு பளிச்சுன்னு தேனு கேட்பது சிரிப்பை வரவழைக்குது.

ஓட்டுக்கு மோர்
தேன்மொழி, அவளின் நண்பன் அன்பு, சித்தி, அப்பா, தங்கை தமிழ், தம்பி எல்லாரும் ஓட்டு கேட்டுகிட்டே நடக்கறாங்க. எதிர்க்கட்சிக்காரங்க ஜனங்களுக்கு மோர் கொடுத்து கொண்டு இருக்க, என்ன அன்பு மோர் கொடுத்து ஓட்டு கேட்கறாங்கன்னு சொல்றா. நம்ம கூடத்தான் ஜூஸ் குடுத்தோம்னு அன்பு சொல்றான். நாமும் ஓட்டுக்குத்தானே ஜூஸ் குடுத்தோம்னு தேனு சொல்றா. இப்படி பப்ளிக்கா பேசாத தேனுன்னு சொல்லிட்டு நடக்கறாங்க.

உரசும் சித்தி
நடக்கும் போது அப்பாவின் பக்கத்தில் நடக்கும் சித்தி அப்பாவின் தோளில் உரசி உரசி நடக்க, பார்த்துட்டு உடனே அப்பாவை இந்த பக்கமாக இழுத்து விட்டு தான் தன் சித்தி அருகில் நடக்கிறாள்..அப்போதுதான் ஒரே டயலாக்.. யாருகிட்ட அப்படின்னு சித்தியைப் பார்த்து கேட்கிறாள். சித்தியும் இதற்கு பெரிதாக ரியாக்ட் செய்யாமல் வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக்கறது யதார்த்தம்.

கிராமத்து மக்கள்
கிராமத்தில் இப்படித்தான் மக்கள் எதையும் மனசில் வச்சுக்காம யதார்த்தமா வெள்ளந்தியா இருப்பாங்கன்னு அழகா காண்பிச்சு இருக்கார் இயக்குநர். இந்த மாதிரி சீரியல்கள் பார்ப்பதில் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.மாறாக ஜாலியா சிரிக்க வைப்பதாவும் இருக்கு ஜாக்குலின் ரோல்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications