Thenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குளிக்க ஷவர் வேணும்..பாத் டப் வேணும்.. சைக்கிள் போட்டியில ஏமாத்தியாவது ஜெயிச்சு ஸ்கூட்டியை பரிசாக வாங்கிடணும்..

அது மட்டுமா? ஹேண்ட் வாஷ் வேணும்.. ஃபேஸ் வாஷ் வேணும்..கவர்ன்மென்ட்ல வேலை பார்க்கற மாப்பிள்ளை வேணும்... இப்படி எல்லாம் கனவு கண்டு கொண்டு இருந்த தேனு...

பாத் டப்புக்காக ஊராட்சி மன்றத் தலைவியா தேர்தலிலும் நிக்க சம்மதிக்கறா பாருங்க. இதுதான் கொஞ்சம் ஓவரா இருக்கு தேனு!

விஜய் டிவி சீரியல்

விஜய் டிவி சீரியல்

விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் தேன்மொழியாக ஜாக்குலின் நன்றாக நடிச்சு இருக்கார்.அடிக்கடி சினிமாவில் தல பேசின வசனம், தளபதி பேசின வசனம்.நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் பேசிய வசனம், உலக நாயகன் பேசிய வசனம் என்று எதையாவது பேசி அந்த சூழ்நிலையின் உண்மைத் தன்மையை விளக்குவது நன்றாகவும், வித்தியாசமாகவும் இருக்கு.

தேன்மொழியை தலைவியாக

தேன்மொழியை தலைவியாக

தேன்மொழியை ஊராட்சி மன்றத் தலைவியாக நிற்க வைக்க அவளின் அப்பாவிடம் ஊரார் பேசும்போது, அது ஒரு விளையாட்டு பொண்ணுங்க... அதுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு நடிகர் வடிவேலுவுக்கு ஆளாளுக்கு வசனம் பேசின மாதிரி அப்பா சொல்றார்.

தேன்மொழியிடம் பேசி

தேன்மொழியிடம் பேசி

இருந்தாலும் தேன்மொழியிடம் ஒரு வார்த்தை பேசிட்டு சொல்றேங்கன்னு சொல்லிட்டு வீட்டுக்கு வர்றார் அப்பா.அப்போதுதான் பாத் டப் கொடுத்தால்நான் தேர்தலில் நிக்கறேன்னு சொல்றா தேன்மொழி.பாவம் தேனுவை ஒன் சைடாக காதலிக்கும் அன்புதான் மாட்டு கழுநீர்த் தொட்டியை எடுத்து வந்து அலங்கரிக்கறான்.

அன்பு அப்பா

அன்பு தேன்மொழியின் ஹீரோ சார் அருள் வீட்டில் மாட்டுத் தொழுவத்தில் இருந்த தொட்டியை திருடிக்கிட்டு வந்து, அதற்கு அழகாய் பெயின்டிங் வரைந்து இதுதான் பாத் டப்புன்னு தேன்மொழிகிட்டே ஒப்படைக்கறாங்க. அவ அங்கே அதில் தண்ணீர் ஊற்றி ஆனந்தமாய் குளிச்சுகிட்டு இருக்க, இங்கே முன்னாள் பிரஸிடெண்ட் அருளின் பாட்டி, எனக்கு சீதனமா ரெண்டு பசு மாடும் கழனி தொட்டியும் குடுத்தாங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+