Thenmozhi BA serial: தேன்மொழி விளையாட்டு பொண்ணா வினையானவளா?.. ஆனா சூப்பருங்கோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியல் கதையின் நாயகி தேன்மொழி மிக யதார்த்தமான பெண்ணாக இருக்கிறார். சமயோசித புத்தி அதிகமாக இருக்கிறது. சின்ன மேடம் மாதிரி அரசியல் ஐடியாக்கள் பொங்கி வருது.

அருள்வேல் இப்போதுதான் பஞ்சாயத்து எலெக்ஷனில் நிற்கப்போவதாக அறிவித்து இருக்கிறான்.இன்னும் பிரச்சாரம் கூட ஆரம்பிக்கவில்லை. அதற்குள் செம ஐடியாக்கள் கொடுக்கிறாள் தேன்மொழி.

கிராமத்தில் ஆண் பிள்ளைகளுடன் கிரிக்கெட் ஆடுவது, கில்லி விளையாடுவது என்பதெல்லாம் கிராமத்திலும் பெண்களுக்கு சுதந்திரம் இருக்கிறது என்பதையே காண்பிக்கிறது.

கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டர்டா

கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டர்டா

அக்கா எடுத்ததுமே பேட்டிங்கா.. உனக்கு அடிக்க தெரியுமான்னு கிண்டல் பண்றான் ஒரு பொடியன். டேய் அக்கா கிரிக்கெட்டில் ஆல் இன் ஆல் அழகு ராணிதான்னு ஸ்டைலாக கூலிங் கிளாஸை போடுகிறாள் தேன்மொழி. அக்கா அது ஆல் ரவுண்டர்.இதுவே தெரியலைன்னு சிரிக்கிறான்.

போடுடா பந்தை

போடுடா பந்தை

சரி சரி பந்தை போடுடான்னு பேட்டை ஓங்குகிறாள். எங்கடா பந்தை காணோம்னு தேட பந்தை காணோம். பார்த்தியா சிக்ஸர்னு பந்தா பண்ண,ஆமா சிக்ஸர் காலுக்கிட்ட பாரு பந்துன்னு சொல்றான் பொடியன். அதுக்குள்ளே சிக்ஸர் அடிச்ச பந்தை எடுத்துட்டு வந்துட்டீங்களாடா? அசிங்கம்தான் விட்டு விடுன்னு தேத்திக்கறா. நடிப்பு பிரமாதம்.

 சீக்கிரம் கலெக்ஷனுக்கு

சீக்கிரம் கலெக்ஷனுக்கு

கலெக்ஷனுக்கு போகணும்க்கா சீக்கிரம் விளையாடுங்கன்னு கேட்கிறார்கள் பசங்க.என்னடா மாரியம்மனுக்கு கூழ் காய்ச்சி ஊத்த போறீங்களான்னு தேன்மொழி கேட்க, இல்லக்கா.. டோர்னமெண்ட் வச்சு இருக்கோம். அதுக்கு பணம் வேணும்..கடை கிடைன்னு போயி கேட்க வேண்டியதுதான்னு சொல்றாங்க.

கட் அவுட் வீட்டில்

கட் அவுட் வீட்டில்

டேய் எங்க வீட்டுக்கு போ..அங்கே பிரசிடெண்ட் ஐயா கட் அவுட் இருக்கும்.அதை எடுத்துக்கிட்டு உடனே வான்னு சொல்றா. ஐயோ பிரசிடெண்ட் ஐயாவுதா நான் மாட்டேன்னு சொல்றான்.டேய் நம்ம அருள்வேல் ஹீரோ சார் கட் அவுட் டா.. இனிமேல் அவர்தான் நமக்கு பிரசிடென்ட்டா வருவார். போயி எடுத்துட்டு வான்னு சொல்றா.

பத்தாயிரம் பாலாபிஷேகம்

பத்தாயிரம் பாலாபிஷேகம்

கட் அவுட்டுக்கு பால் வாங்கி வந்து பாலாபிஷேகம் செய்ய, அருள்வேல் பார்த்துடறான்.பார்த்துட்டு வண்டியை எடுக்க, ஹீரோ சார் நில்லுங்க. நம்ம பசங்க அவங்க செலவில் பால் வாங்கி உங்க கட் அவுட்டுக்கு அபிஷேகம் பண்ணி இருக்காங்க. அடுத்த வாரம் டோர்னமென்ட் நடக்குதாம்.அதுக்கு பணம் வேணும்னு கேட்கறாங்க ஹீரோ சார்னு தேன்மொழி கேட்கிறாள்.

இதுதான் ஹீரோ சார்

இதுதான் ஹீரோ சார்

எவ்ளோ வேணும்னு அருள்வேல் கேட்க, பத்தாயிரம் ரூபாய் வேணுமாம் ஹீரோ சார்னு சொல்ல , ஆத்தாடி அம்புட்டு பணமான்னு அல்லக் கை வாயைப் பிளக்க, எடுத்து குடுடான்னு சொல்றான் அருள்வேல். இதுதான் ஹீரோ சார்னு சொல்றது.கட்டாயம் நீங்க ஜெயிச்சுருவீங்க சார்னு சொல்றா தேன்மொழி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+