Thenmozhi BA serial: மக்களுக்கு நல்லது செய்யறவர்தான் ஹீரோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: படித்த இளம் பெண்ணாக இருந்தாலும், அவர்களுக்கு ஹீரோயிசம் என்பது ரொம்ப பிடித்துத்தான் போகிறது. அதில் உள் நோக்கம் என்ன இருக்கிறது என்பதை சிந்திச்சு பார்க்க நினைப்பதில்லை.

பாட்டியை கட்டி பிடிச்சு, குழந்தையை கொஞ்சி, மக்களுடன் மக்களாக செல்பி எடுத்துக்கொண்டு, அடிப்பது, கண்டிப்பது, பின்னால் அவர்களுக்கு பணத்தை தருவது இதெல்லாம்தான் ஹீரோயிசம்.

அந்த வகையில் அருள்வேல் இப்போது தேன்மொழியின் ஹீரோ. அவ்வளவு மட்டுமே! சினிமா ஹீரோவை பிடிக்கும், ரசிப்பார்கள். காதலிக்க மாட்டார்கள்..அப்படித்தான் இந்த கதையும் இப்போதைக்கு போகிறது.

விஜய் டிவி சீரியல்

விஜய் டிவி சீரியல்

தேன்மொழி பிஏ என்று விஜய் டிவியின் சீரியலில் நடிகை ஜாக்குலின் தேன்மொழியாக நடிக்கிறார். கிராமத்தில் நமது பக்கத்து வீட்டில் கல்லூரியில் படித்து, விளையாட்டுத் தனமாக இருக்கும், எந்தவித குறிக்கோளும் இல்லாமல் கல்யாணம் செய்துகொண்டு செட்டிலாகி விட வேண்டும் என்கிற மைண்ட்செட்டில் இருப்பவள். அப்பா பார்க்கும் வரன் எல்லாம் தட்டிப் போகுதே என்கிற கவலையில் இருப்பவள்.

அருள்வேல் ஹீரோ

அருள்வேல் ஹீரோ

ஊர் பிரசிடென்ட் மகன் அருள்வேல் அடிக்கவும் செய்வது, பின்னால் பணத்தையும் கொடுப்பது என்று தேன்மொழியின் கனவு ஹீரோ மாதிரியே இருக்க, அவனை ஹீரோ சார் ஹீரோ சார் என்று அழைத்து நெகிழ்ந்து போவாள் தேன்மொழி. அவனின் கட் அவுட்களை வீட்டில் வைத்து அழகு பார்க்கிறாள் என்றால் பாருங்களேன். அவளின் கள்ளம் கபடம் இல்லாத அன்பு இதில் தெரிகிறது.

ஸ்கூட்டி பரிசு

ஸ்கூட்டி பரிசு

ஊரில் சைக்கிள் போட்டி நடக்கிறது. மொபட் ஓட்ட தெரிந்த தேன்மொழிக்கு சைக்கிள் ஓட்ட தெரியவில்லை.சைக்கிள் கத்துக்கலாம் என்றால் சைக்கிளும் இல்லை.ஒரு வழியாக நண்பன் அன்பு சைக்கில் கொண்டு வர கத்துக்கலாம் என்று போனால், அருள்வேல் ஜீப்பில் மோதி, சல்லி சல்லியா போயிருது இவளின் சைக்கிள்.என்ன ஹீரோ சார் இப்படி பண்ணிபுட்டீங்க. எல்லாம் போச்சு..சைக்கிள் ரேஸில் கலந்துக்கிட்டு, ஸ்கூட்டியை பரிசா வாங்கி கல்யாணம் செய்துக்கலாம்னு பார்த்தேன்.சீதனம் இல்லாம எந்த மாப்பிள்ளை ஹீரோ சார் என்னை கல்யாணம் செய்துக்குவான்னு புலம்பறா.

ஆர்யா சைக்கிள்

ஆர்யா சைக்கிள்

அடுத்த நாள் பார்த்தால் புத்தம் புது சைக்கிள் வீடு தேடி வருகிறது. யார் அனுப்பியது என்று பார்த்தால் அருள்வேல்.இதுதான் ஹீரோன்னு சொல்றது. பழைய சைக்கிளை உடைச்சதுக்கு புத்தம் புதுசா ஆர்யா ஓட்டற சைக்கிள் மாதிரி வாங்கிக் குடுத்துட்டாரு. இவ்ளோ அழகா சைக்கிள் பெல்.. வீல்...ஆஹா ஆஹா என்று புகழ்கிறாள்.

வெள்ளந்தியான கிராமத்து பெண்ணின் கதைதான் இது. தேன்மொழி எப்படி பிரசிடெண்ட் ஆகிறாள் என்பதை வரும் வாரங்களின் கதை சொல்லும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+