Thenmozhi BA Serial: தலைங்க எல்லாம் படிச்சு பார்த்துட்டு கை எழுத்து போடுங்கப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பிஏ ஊராட்சி மன்றத் தலைவர் சீரியலில், தேன்மொழி ஊராட்சி மன்றத் தலைவியா இருந்தாலும் கொஞ்சமும் பொறுப்பு இல்லாம இருக்கா. இந்த சீரியலை பார்க்கும் மக்கள் இதை பார்த்து திருந்தினால் நல்லது. ஊராட்சி மன்றத் தலைவர் பதவி எத்தனை சிறப்பு வாய்ந்த பதவி என்று புரிந்துக்கொள்ள வேண்டும்.

படிக்காதவங்களை விவரம் இல்லாதவங்களை தேர்தலில் நிக்க வச்சு ஜெயிச்ச உடன் பதவிக்காக அவர்களை செல்வாக்கு வாய்ந்தவர்கள் பயன்படுத்திக்கறது என்பது சினிமாவில் மட்டும் அல்ல நிஜத்திலும் நடப்பதுதான். இதை வெளிச்சம் போட்டு தெரியாதவர்களுக்கும் தெரிய வைக்கற மாதிரி ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் தேன்மொழி பிஏ சீரியல்.

ஹீரோ சார் ஹீரோ சார் என்று புருஷன் மேல் பைத்தியமாக இருக்கும் தேன்மொழிக்கு இன்னும் உண்மை புரியாமல் இருப்பதுதான் இப்போதைக்கான கதை. ஆனால், போகப் போக தேன்மொழி பிஏ எப்போது தேன்மொழி பவர்ஃபுல் ஆவாள் என்கிற எதிர்பார்ப்புத்தான் எழுந்துள்ளது.

தேன்மொழி காந்திநகர்காரி

தேன்மொழி காந்திநகர்காரி

தேன்மொழி காந்திநகர்காரியாக இருந்தாலும், ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிச்சுட்டா. இப்போது இந்த பதவி அரசியல் வாழ்க்கைக்கு பெரும் உதவியா இருக்கும்னு ஐடியா பன்றார் அந்த ஊரு பெரும் தலை. மகனுக்கு கல்யாணம் செய்து வச்சு, தேன்மொழியை மருமகளாக்கி எம்எல்ஏ சீட்டும் வாங்கிடறார் மாமனார். தேன்மொழிக்கு பெரிய வீட்டு மருமகளாகிட்டோம், ஹீரோ சாரை கல்யாணம் செய்துகிட்டோம் என்கிற மிதப்பு மட்டும்தான் இருக்கிறது.

ஊருக்கு நல்லது

ஊருக்கு நல்லது

தேன்மொழியை என்ன கொடுமை படுத்தினாலும் அவள் அடங்கித்தான் போகணும். தங்களுக்கு கீழ்தான் இருக்கணும்னு ஐடியா பண்ணி, அவளிடம் ஊருக்கு நல்லது செய்ய என்று சொல்லி ஒரு பேப்பரில் கை எழுத்து வாங்கிக்கறாங்க. தேன்மொழியும் படிக்காமல் கை எழுத்து போட்டுத் தந்து விடுகிறாள். ஊருக்கு நல்லது நடக்கணும்னா நான் எத்தனை இடத்தில் வேணும்னாலும் கை எழுத்து போடுவேன்னு வேற சொல்றா.

ராஜினாமா கடிதம்

ராஜினாமா கடிதம்

கடிதத்தில் தேன்மொழி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்பது போல எழுதி இருக்கான் அந்த வீட்டு மாப்பிள்ளை. அதாவது நாம் செய்யும் கொடுமை தாங்காமல், அவள் வீட்டை விட்டு போயி, எதாவது சொல்லிட்டான்னா, அவள் ராஜினாமா செய்தது போல தங்கள் எழுதிய கடிதத்தை விஏஓ அலுவலகத்துக்கு அனுப்பி விடுவது என்று பிளான் போட்டு இருக்காங்க.

அதுக்குத்தான் படிக்கணும்

அதுக்குத்தான் படிக்கணும்

அதுக்குத்தான் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியில் இருக்கறவங்க யரையம் நம்பாமல் எதுவாக இருந்தாலும் ஒரு முறைக்கு இரு முறை படிச்சு அர்த்தம் தெரிஞ்சுக்கணும். பிறகு தங்களது சக்தி வாய்ந்த கை எழுத்தை போடணும்னு சொல்றது. இதை அலர்ட் பண்ணுவது போலத்தான் இந்த சீரியலும் இருக்கிறது.தேன்மொழியின் இன்னொரு அவதாரத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கினறனர் சீரியல் ஆர்வலர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+