Thenmozhi BA Serial: எத்தனை நாளைக்கு தேனு கனவு வாழ்க்கை..சோ சேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் ஊராட்சி மன்றத் தலைவி பதவிக்கு வந்தும் தேன்மொழிக்கு இன்னும் பொறுப்பு வராத மாதிரியே காண்பிச்சுகிட்டு இருக்கீங்களே.. இவ்ளோ இழுவை தேவையா?

நீங்க தேன்மொழியை பொறுப்பா காமிக்கறதுக்குள்ள அடுத்த உள்ளாட்சி தேர்தலும் வந்துரும் போலிருக்கே...சோ சேட் ஜாக்குலின் ரசிகர்கள். வழக்கமான இழுவைக்கா ஜாக்குலினை நடிக்க வச்சீங்கன்னு கொந்தளிக்கறாங்க.

எங்க தலைவி நகைச்சுவை செய்யறதே பெரிய வேலை..அவங்களை ஏன் இப்படி கஷ்டத்துல அலைக்கழிச்சு அழ வைக்கிறீங்க...அழுகாச்சி சீரியல் எங்க தலைவிக்கு வேணாம்னு சொல்றாங்க ரசிகர்கள்.

 அனைத்தும் கலந்த

அனைத்தும் கலந்த

நகைச்சுவை, நக்கல், நையாண்டி என்று அனைத்தும் கலந்த கலவையா ஜாக்குலின் தேன்மொழி பிஏ சீரியலுக்கு கிடைத்த நல்ல நடிகை. தகப்பா தகப்பான்னு கவுண்டமணி பாணியில் பேசுவது...அதோடு மதர் இன் லா.. ஃபாதர் இன் லா.. சிஸ்டர் இன் லா என்று ஆங்கிலத்தில் உறவு முறையை அழைப்பது என்று வித்தியாசமான ஹீரோயின் என்றுதான் ஜாக்குலினை தேன்மொழி பிஏ சீரியலில் களம் இறக்கி இருக்காங்க.

 இருந்தாலும் இப்படியே

இருந்தாலும் இப்படியே

இருந்தாலும் ஒரு ஊராட்சி மன்றத் தலைவியா தில்லா செயல்படற தேன்மொழியை இன்னும் காட்டாமல் ஃபெயிலியர் தேன்மொழியா காண்பிச்சுகிட்டே இருந்தால் ரசிகர்கள் கடுப்பாகறாங்க. சீரியல் ஆரம்பிச்சு 6 மாசம் ஆச்சு. தேன்மொழி பதவி ஏற்றும் கிட்டத்தட்ட 5 மாசம் ஆகிப் போச்சு. அதிரடியா ஒன்னும் காண்பிக்கலேன்னா போர் அடிக்குதுல்ல.

 காதல் கனவு

காதல் கனவு

கனவு சீன்.. காதல் மயக்கம் என்று இப்படியே இருந்தால் ஜாக்குலினை ஊராட்சி மன்றத் தலைவியா எப்போதுதான் பார்க்கறது. மக்கள் தண்ணீர் பஞ்சம் போக்க தண்ணி லாரியில் ஒயிலா படுத்துக்கொண்டு, அதே பந்தா கூலிங் கிளாஸ் போஸ் கொடுத்தபடி வருகிறாள் தேன்மொழி. ஆஹா.. தேன்மொழி ஆட்டம் ஆரம்பமாயிருச்சுன்னு நினைச்சா அதுவும் புஸ்..

 ஓவர் இழுவை

ஓவர் இழுவை

ஓவர் இழுவை கண்ணுக்கு ஆகாதுன்னு சொல்ற மாதிரி இந்த இழுவை சீன்களை பார்க்க முடியலை..அவ்வப்போது தமிழ் படங்களில் சுட்ட உல்டா காட்சிகள் வேறு கதையில்... ஊராட்சி மன்றத் தலைவர் தேன்மொழியை சீக்கிரம் தலைவரா காமிங்க...உட்கார்ந்து பார்க்கறோம்.. தலைவிய சாக்கா வச்சு ஜவ்வு கணக்கா இழுத்தீங்க... ரசிகர்கள் தாங்க மாட்டாங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+