Thenmozhi BA Serial: அடப்பாவி மதர் இன் லா...அல்வாவை மிதிக்கிறீங்க..பூவை வீசறீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் மாமியார் மல்லிப் பூவை தூக்கி எரியறாங்க..

மகன் அருள், தேன்மொழிக்கு வாங்கித் தந்த அல்வாவை வாங்கி காலால் மிதிக்கறாங்க...

இதெல்லாம் தப்பான செயல் இல்லையா? வாங்கினதை பேசாம எடுத்துட்டு போயிட வேண்டியதுதானே...!

 சீரியல் பிளஸ்

சீரியல் பிளஸ்

தேன்மொழி பிஏ ஊராட்சி மன்றத் தலைவர் ஆனாலும், அவளோட பவர் அவளுக்கு தெரியாம இன்னும் மாமியார் கொடுமையில் அகப்பட்டுக்கிட்டு திண்டாடுவது இப்போதைக்கான கதை. அவள் பதவியின் பவர் தெரிந்து விழித்துக் கொள்ளும்போது என்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்பு கூடுவதுதான் தினம் தினம் பார்க்கத் தூண்டும் சீரியலின் பிளஸ்.

 எல்லா சீரியல்களிலும்

எல்லா சீரியல்களிலும்

எல்லா சீரியல்களிலும் பெரியவர்கள் அதாவது வீட்டுக்கு பெரிய பெண்மணிகள் செய்யக் கூடாத செயல்களை செய்வதை பெரிதாக காண்பிக்கிறார்கள். கோவத்தில் பூவை தூக்கி எறிவது.. உணவுப் பொருட்களை தூக்கி எறிவது என்று. இந்த சீரியலிலும் மகன் மருமகள் தேன்மொழிக்கு வாங்கித் தந்த பூவை தூக்கி எறிவது.. அல்வாவை காலால் மிதிப்பது என்று செய்யும்போது பார்க்க எரிச்சலாக வருகிறது.

 உணவுப் பொருளை

உணவுப் பொருளை

உணவுப் பொருளை வீணாக்குவது, மல்லிகைப் பூவை வீசுவது இதெல்லாம் தவறு என்று குழந்தைகளுக்கு சொல்லித் தரும் நாம் இப்படிப்பட்ட காட்சிகளை தொடர்ந்து வைப்பது சகஜமாக போய்விட்டது. இதை நாம் திருத்திக்கொள்ள முயற்சிப்பதே இல்லை. கோவத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டோம்.

 ஆக்ஷன் இல்லை

ஆக்ஷன் இல்லை

தேன்மொழி பிஏ ஊராட்சி மன்றத் தலைவர் பதவி என்னவோ ஏத்துக்கிட்டாச்சு. இன்னும் ஆக்ஷனில் இறங்கின பாடில்லை. மதர் இன் லா.. ஃ பாதர் இன் லா என்று ஆங்கிலம் பேசுவதும், ஹீரோ சார் ஹீரோ சார் என்று வழிவதுமாகத்தான் கதை நகர்ந்துக்கொண்டு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+