கட்டிலுக்கு அடியில் இந்த பொருளை முதல்ல தூக்கி எறியுங்க! யானை போட்டோ வீட்டுல வெக்கலாமா? வாஸ்து டிப்ஸ்
சென்னை: நம்முடைய வீட்டில் ஒவ்வொரு பொருளை பற்றியும் வாஸ்துவில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.. எனவே, வீட்டிலுள்ள பொருட்கள் வாஸ்துப்படி இருந்தால், அந்த வீடு செல்வ செழிப்புடனும், மகிழ்ச்சி ஆரோக்கியத்துடனும் இருக்கும் என்பார்கள்.. அந்தவகையில், வீட்டில் என்னென்ன போட்டோக்களை வைக்கலாம்? எந்த திசையில் வைக்கலாம்? மாடிப்படி வாஸ்து, படுக்கையறை வாஸ்து போன்றவற்றை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
வீட்டின் தென்மேற்கு திசையில் நிலத்தடி நீர் தொட்டியை அமைக்கக்கூடாது என்பார்கள்.. அப்படி வைத்தால், அது வீட்டில் வாஸ்து தோஷத்தை உருவாக்கிவிடும்..

எப்போதுமே மாடிப்படிக்கு கீழே எந்த பொருட்களையும் சேமித்து வைக்கக்கூடாது.. இது குடும்பத்தில் சிக்கலை, நஷ்டத்தை உண்டுபண்ணிவிடும்.. அதேபோல மாடிப்படிக்கு கீழேயுள்ள இடம் பாதுகாப்பாக உள்ளது என்பதற்காக லாக்கரை, பணப்பெட்டியை வைத்துவிடக்கூடாது.. அப்படி வைத்தால் லட்சுமி தேவியை அவமரியாதை செய்வது போலாகிவிடும்.. வறுமையும் பீடித்து கொள்ளும்.
மாடிப்படிக்கு அடிப்பகுதியில் குளியலறை அல்லது கழிவறை, அல்லது பூஜையறையை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் அப்படி அமைந்தால், நீர்க்கசிவு இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டுமாம். மாடிப்படிக்கு கீழே குப்பை தொட்டி, செருப்புகளை வைக்கக்கூடாது..
ஃபீனிக்ஸ் பறவை படங்கள்
வீட்டில் வாஸ்துப்படி சில போட்டோக்களை வைப்பது நல்லதாக கருதப்படுகிறது. அந்தவகையில், ஃபீனிக்ஸ் பறவை போட்டோவை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானது.. இதனால் வீட்டிற்குள் செழிப்பு தோன்றும்..
எப்போதுமே ஃபீனிக்ஸ் போட்டோவை ஹாலில்தான் தொங்கவிட வேண்டும்.. அதிலும் தெற்கு திசையில்தான் வைக்க வேண்டும்.. இது வீட்டிலுள்ள எதிர்மறை ஆற்றல் அனைத்தையும் வெளியேற்றி, வீட்டை செல்வ செழிப்போடு வைத்திருக்கும்.
போட்டோக்கள் அல்லது ஓவியங்களை வைப்பதாக இருந்தால், தாஜ்மஹால் நினைவு சின்னத்தை தவிர்க்க வேண்டும்.. இது கல்லறையாகவே கருதப்படுகிறது.. எனவே, தாஜ்மஹாலைக் குறிக்கும் சிறிய உருவங்கள் மற்றும் ஓவியங்கள் கொண்ட எதையும் வீட்டில் வைக்க வேண்டாம்..
அதேபோல, மகாபாரதம் மற்றும் ராமாயணத்தில் உள்ள போர் காட்சிகளை கொண்ட போட்டோக்களை வீட்டில வைக்கக்கூடாது. இது உறவுகளிடையே விரிசலை தந்துவிடுமாம்.. அதாவது அழிவைக் குறிக்கும் எந்த ஒரு போட்டோக்களையும் வீட்டில் வைத்திருக்கக்கூடாது என்பார்கள்..
ஆனால், ராமர் பட்டாபிஷேக போட்டோவை வீட்டில் வைக்கலாம்.. அதாவது ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் ஆகியோர் சேர்ந்து இருக்கும்படியான ராமர் பட்டாபிஷேக போட்டோவை வீட்டில் வைத்திருந்தால், நேர்மறை ஆற்றல் பெருகும்..
பட்டாபிஷேக போட்டோ
வாஸ்துப்படி, ராமர் பட்டாபிஷேக போட்டோவை வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசைகளைப் பார்த்தவாறு வைக்கலாம்.. ஆனால், இந்த போட்டோ உள்ள இடத்தை சுத்தமாகவும், பளிச்சென்றும் வைத்துக் கொள்ள வேண்டும்.
வீட்டில் பூஜை அறையிலும் இந்த போட்டோவை வைக்கலாம்.. பட்டாபிஷேக போட்டோவை வீட்டின் ஹாலிலும் வைக்கலாம்.. இதனால் குடும்ப உறவுகள் இணக்கமாவார்கள்.. படுக்கையறையிலும் ராமர் பட்டாபிஷேக போட்டோவை வைக்கலாம்.. இதனால், தெய்வீக பாதுகாப்பு மற்றும் மனதில் அன்பை அதிகரிக்கும். தம்பதிகளின் படுக்கையறையில் வைக்க ஏற்ற போட்டோக்களுள், இதுவும் ஒன்று என்பார்கள்.
கட்டிலுக்கு அடியில் இரும்பு பொருட்கள்
படுக்கையறையில் கட்டிலுக்கு அடியில் இரும்பு பொருட்களையும், பிளாக்ஸ்டிக் பொருட்களையும் வைக்கக்கூடாது. இதனால் தோஷம் ஏற்பட்டு, பண பிரச்சனையை அதிகமாக சந்திக்க நேரிடும். செருப்புகளையிம் படுக்கைக்கு அடியில் வைத்தால், வீட்டில் பலவிதமான பிரச்சனைகளை வரவழைக்குமாம்.
எலக்ட்ரானிக் பொருட்களையும் படுக்கைக்கு அடியில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.. அப்படி வைத்தால், ஒருவரது மனநலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
படுக்கையறை போட்டோக்கள்
படுக்கையறையை பொறுத்தவரை, நீர்வீழ்ச்சி, மழை மற்றும் கடல் போன்ற போட்டோக்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைத்தால், அது நிதி இழப்பை ஏற்படுத்துவதோடு, பல இழப்புக்களை சந்திக்க வைக்கும். தவிர்க்க முடியாத சூழலில் வைக்க நேர்ந்தால், வடக்கு திசையில் வைக்கலாம்..
அதேபோல, விலங்குகளின் போட்டோக்கள், புறாக்கள், பாம்புகள் போன்றவற்றின் சிலைகளை கொண்டு வீட்டை அலங்கரிக்கக்கூடாது. வாஸ்துப்படி, இந்த விலங்குகள் வீட்டினுள் எப்போதும் எதிர்மறை ஆற்றல் சூழ்ந்திருக்கச் செய்யும்..
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications