விஜய் குடும்ப பிரச்சனை கையெழுத்து போட்டு முடிஞ்சாச்சு.. பெற்றோர் நிலை! தப்பா காட்டுறாங்க.. SAC ஆதங்கம்
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, அவரைச் சுற்றி குடும்பம் முதல் தனிப்பட்ட வாழ்க்கை வரை பல விவகாரங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வரும் சூழலில், தற்போது அவரது தந்தையும் இயக்குநருமான சந்திரசேகர் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. குறிப்பாக, மகனை ஆதரித்து அவர் எமோஷனலாக பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.

அப்பாவின் வேதனை
சமீபத்திய பேட்டியில் சந்திரசேகர், "விஜய் அரசியலுக்கு வந்த பிறகு தான் அவரைப் பற்றி இப்படி பேச ஆரம்பிச்சிருக்காங்க. அவருடைய கேரக்டர்ல குறை சொல்ல முடியாததால், வேறு வழியில்லாமல் தவறாக காட்டுறாங்க" என்று கூறியுள்ளார்.
மேலும், "அப்பா அம்மாவை கவனிக்க மாட்டாராம்... குடும்பத்தை பார்த்துக்கொள்ள மாட்டாராம்... பெண்களுக்கு எதிரானவர்... இப்படி பல விஷயங்கள் சொல்லப்படுது. இதெல்லாம் உண்மை இல்ல" என்று அவர் மனவேதனையுடன் தெரிவித்தார்.
குடும்ப பிரச்சனை
விஜய்யின் குடும்ப வாழ்க்கை குறித்து கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக, விஜய் மனைவி விவாகரத்து வழக்கு கடந்த வருடத்திலேயே கொடுத்திருந்த நிலையில் அது திடீரென சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் ஒரு நடிகையுடன் விஜய்க்கு தொடர்பு இருப்பதாகவும் தான் என்னதான் சொன்னாலும் அவர் அந்த நடிகை விட்டு பிரிவதில்லை, அந்த நடிகை எங்களை வெறுப்பேற்றுவதற்காக அவருடன் எடுக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார். இது எங்களுடைய குடும்பத்திற்கு அவமானமாக இருக்கிறது என்றெல்லாம் அந்த மனுவில் கூறி இருந்தது.
அதோடு தனக்கு பண நெருக்கடி மன நெருக்கடி கொடுக்கிறார் வெளியே செல்வதற்கு அனுமதிக்கவில்லை என்றெல்லாம் அந்த மனுவில் சொல்லப்பட்டிருந்தது. இதனால் பலரும் விஜயை விமர்சிக்க தொடங்கி விட்டனர். விஜய்யின் ரசிகர்கள் கூட அவருக்கு எதிராக பல வீடியோக்களையும் வெளியிட்டு இருந்தனர்.
ஏற்கனவே விஜய் சொந்த அப்பா அம்மாவை கவனிக்காதவர் அப்பா அம்மாவின் கல்யாண நாளுக்கு கூட செல்லாதவர், ஆனால் ஒரு நடிகையின் கல்யாணத்திற்கு கோவா வரைக்கும் போனவர் என்றெல்லாம் பலரும் அவரை ட்ரோல் செய்ய தொடங்கியிருந்தனர். அதுபோல நேற்று விஜய்யின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது அதில் விஜய் விவாகரத்திற்கு சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.
எந்த குடும்பத்துல பிரச்சனை இல்லை
இந்த எல்லா விமர்சனங்களுக்கும் பதிலாக சந்திரசேகர் ஒபனாக பேசினார். "எந்த குடும்பத்துல பிரச்சனை இல்லாம இருக்குது? அப்பா-மகன், கணவன்-மனைவி... யாருக்காவது கசப்புகள் வரலாம்.
ஆனா அது எல்லாம் ஒரு நேரத்துக்கு பிறகு சரியாகிடும். எங்க குடும்பத்துல எப்பவோ நடந்து கையெழுத்து போட்டு முடித்த பிறகு அந்த விஷயங்களை இப்போ பெரிதுபடுத்தி பேசுறாங்க" என்று அவர் விளக்கினார்.
அரசியல் வந்த பிறகே அதிக கவனம்
சந்திரசேகர் கூறிய முக்கியமான விஷயம் என்னவென்றால், "விஜய் அரசியலுக்கு வந்த பிறகு தான் இந்த விஷயங்கள் எல்லாம் பெரிதாக பேசப்படுகிறது" என்பதுதான். அதாவது, முன்பு அமைதியாக இருந்த விஷயங்கள் கூட இப்போது அரசியல் காரணமாக பெரிதாக்கப்படுகின்றன என்ற கோணத்தில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம் அரசியல் பயணம், மற்றொரு பக்கம் குடும்ப சர்ச்சைகள்... இரண்டுக்கும் நடுவில் சிக்கியுள்ள விஜய்யை ஆதரித்து, அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் வெளிப்படையாக பேசிய இந்த பேட்டி தற்போது பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications