நீங்க கர்ப்பமா இருக்கீங்களா.... திரு ஆனந்தியிடம் கேட்கிறான்...பாவம் அவ என்ன சொல்லுவா?
சென்னை: சன் டிவியின் நாயகி சீரியல் கதையில் புதிது எதுவும் இல்லை என்றாலும், ஒரு வில்ல கூட்டமே ஆனந்திக்கு எதிரா விதம் விதமாக சதி செய்வது கொஞ்சம் வித்தியசம்தான்.
இதில் அனன்யாவாக நடிக்கும் சுஷ்மா நல்ல அழகு விதம் விதமாக உடை தேர்ந்தெடுத்து அணியும் நேர்த்தி இவரின் பிளஸ்.
அதிலும் எந்த மாதிரி உடையானாலும் அதில் இடையில் பெல்ட் போடுவது போல உடை அணிவதுதான் சின்ன வயசிலிருந்தே இவரது பழக்கம் என்றும் சொல்கிறார்.

சுஷ்மா கேரளா பொண்ணு
அக்மார்க் கேரள பெண்ணான சுஷ்மா தமிழ், கன்னடம், தெலுங்கு ,மலையாள, ஹிந்தி ஆங்கிலம் என்று ஐந்து மொழிகள் பேசுவாராம். மிக அழகான குட்டிப்பொண்ணு அனன்யாவாக நடிக்கும் சுஷ்மா வில்லத்தனத்தை விதம் விதமாக ஐடியா சொல்லுவது எரிச்சலாக இருந்தாலும் இவரது நடிப்பில் கோவம் வருபவர்களுக்கும் கோவத்தை வராதபடி செய்து விடுகிறார் இந்த அழகு அனன்யா.
எப்படியாவது ஆனந்தியிடம் திருவை எப்படியாவது மாத்திலைளைகள் பார்ப்பது என்று அசத்துகிறார்.

கர்ப்பம் திருவின் மனைவி
திருவின் மனைவி ஆனந்தி கர்ப்பமாக இருக்கா. ஆனால், மண்டையில் அடிபட்டு அமெரிக்காவில் நடந்த ஆபரேஷனில் திரு கடந்த ஐந்து வருட கால நினைவுகளை மறந்துடறான். இதனால், அப்பாவுடன் சண்டை போட்டுகொண்டு ஆனந்தியை திருமணம் செய்துகொண்டது, அவளுடன் உறவிலிருந்து எல்லாத்தையும் மறந்துடறான்.

ஆனந்தியின் கர்ப்பம் இதனால்
இதனால் ஆனந்தியின் கர்ப்பம் கேள்விக் குறி ஆகிறது.திரு மண்டையை போட்டு குழப்பிக் கொண்டாலும் அவனது உயிருக்கு ஆபத்து என்பதால், இதை சொல்ல முடியாத நிலை. ஆனந்தியை துரத்திவிட்டு, திருவுக்கு அனன்யாவை விரைவில் திருமணம் செய்து வைக்க திருவின் அப்பா,அனன்யாவின் அம்மா அப்பா ரொம்ப ஆசைப்படறாங்க.

கல்யாணம் மிக அவசரமாக
அனன்யாவுக்கு,திருவுக்கும் அவசர அவசரமாக கல்யாணம் செய்து வைக்க நாள் குறிச்சுடறாங்க. சித்த மருந்து குளிகை சாப்பிடுவதால் திருவுக்கு பழைய நினைவுகள் வந்தாலும் வந்துரும்.. அதுக்குள்ள தாலி கழுத்தில் ஏறிடணும் என்பது அனன்யாவின் ஆசை

கண்டு பிடிச்சுடறார் திருவின் அப்பா
திருவின் அப்பா ஆனந்தி கர்ப்பமாக இருப்பதை கண்டு பிடிச்சுடறார். இதை அனன்யாவின் வீட்டில் போயி சொல்ல, இதுதான் சாக்கு என்று திருவிடம் சொல்றார். திரு நம்பாமல் வீட்டுக்கு வந்து அனன்யா மோசமாக சொன்ன ஆனந்தியின் கேரக்டரை பத்தி ஆனந்தியிடம் கேட்கிறான்.

யார் காரணம்
உண்மையை சொல்லுங்க ஆனந்தி நீங்க கர்ப்பமாக இருக்கீங்களான்னு கேட்க அவளும் ஆமாம் என சொல்ல, சரி போகட்டும், இந்த கர்ப்பத்துக்கு யார் காரணம்... ஒரு நண்பனா கேட்கிறேன்..என்கிட்டே மட்டும் தனியா சொல்லுங்க ப்ளீஸ்னு இவன் கேட்க, அவள் ப்லீஸ் திரு அதை மட்டும் என்கிட்டே கேட்காதீங்கன்னு கெஞ்சறா.

என்ன செய்வாள் ஆனந்தி
கட்டின புருஷனே உன் கர்ப்பத்துக்கு யார் காரணம்னு கேட்டால் அவள் என்ன செய்வாள்பாவம்...இதனால்தான் தாய்க்குலங்களுக்கு நாயகி பிடிச்ச சீரியலா இருக்கு.ரேட்டிங்க்ல நம்பர் ஒன்லயும் இருக்கு.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications