திரு அனன்யாவுக்கு ஓகே சொன்னா ஆனந்தி கதி...?
சென்னை: சன் டிவியின் நாயகி சீரியல் சன் டிவியின் ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கு.
சீரியல் ஆரம்பிச்ச புதிதில் ஏகப்பட்ட குளறுபடிகள்... சீரியல் தப்பிக்குமா.. ரேட்டிங் குறைஞ்சு பிரைம் டைமில் பின்னுக்கு போயிருமோன்னு கூட நினைக்க வேண்டியதா இருந்துச்சு.
முதலில் ஆனந்தியாக நடிச்ச நடிகை ஒதுங்கினார். அடுத்து அனன்யா வில்லி கதாபாத்திரத்துக்கு ரெண்டு நடிகை மாறினாங்க.

சோதனை
விகடன் டெலிவிஸ்டாஸுக்கு சோதனையான காலமா இருந்துச்சு. ஒரு வழியா எல்லாம் செட்டானதும் இப்போ ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கு.
ஆனந்தியை கல்யாணம் செய்துகிட்டது.. அவளோடு வாழ்ந்தது எல்லாமே திருவின் மண்டையில் அடி பட்டதால் அவனுக்கு மறந்துருது.

முதல்லேர்ந்தா
வடிவேலு மறுபடியும் முதல்லேர்ந்தான்னு சொல்ற மாதிரி, அனன்யா மறுபடியும் திருவை தன் ரூமுக்கு அழைச்சுட்டு போயி, திருவின் உருவத்தை தன் அறையில் எப்படி எல்லாம் வச்சு இருக்கான்னு காமிக்கறா. திருவை அடைய அனன்யா வேணும்னே பக்தியா இருக்கற மாதிரி நடிக்கறா. திரு வேணும்னு பக்தியா காலில் ஆணி செருப்பு போட்டுக்கிட்டு கோயிலை வலம் வர்றா.

என்ன பதில்
அதை பார்த்து திரு ரொம்ப நெகிழ்ச்சி ஆகிடறான், அனன்யா அப்பா உடனே உன் பதிலை சொல்லுன்னு வற்புறுத்தறார். திரு ஒரு நாள் டைம் கேட்கறான்.
வீட்டில் வந்து ஆனந்திகிட்ட, அம்மாகிட்ட அபிப்ராயம் கேட்கறான். அவங்க என்னத்த சொல்லுவாங்க....அனந்தி அழறா...ரெண்டு பேருமே உன் விருப்பம்னு சொல்லிடறாங்க

ஐயர் சீட்டு
கோயிலில் சீட்டுல எழுதிப்போட்டு வாக்கு கேட்பீங்களே..அது மாதிரி பண்ணலாம்னு இருக்கேன். ஆனந்தி நீங்க என் கூட வர முடியுமான்னு கேட்கறான். பொண்டாட்டியையே இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சீட்டு எழுதிப்போட்டு பார்க்க கூப்பிடறீங்ககளே திருன்னு அழறா பாவம். திருவின் அம்மா நானும் உங்க கூட வர்றேன் ஆனந்தி. தெய்வம் உன் பக்கம்தான் இருக்கும் கவலைப் படாதேன்னு சொல்றாங்க.

ஆனந்திக்கு பயம்
மறுநாள் கோயிலில் சீட்டு எழுதி ஐயரை எடுத்து தர சொல்றாங்க. கல்யாணம் செய்ய சம்மதம் சொல்லலாம்னு வருது. திருவுக்கு குழப்பம் தீர்ந்துருச்சு.ஆனந்திக்கு பயம், குழப்பம் அதிகமாகுது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications