திருமணம் சீரியல் அனிதா.. சித்தி 2 சீரியலில் வெண்பா ஆக்கிட்டாங்க!
Recommended Video
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் ஹீரோயின் ஜனனியின் தங்கை அனிதாவை சித்தி 2 சீரியலின் வெண்பாவாக நடிக்க அழைச்சுட்டு வந்துட்டாங்க. உண்மையில் இந்த பெண்ணின் பெயர் ப்ரீத்தி.
ப்ரீத்தி திருமணம் சீரியலில் கல்லூரி பெண்ணாக நடித்து வந்தார். அந்த சீரியலில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ப்ரீத்தி.
திருமணம் சீரியல் கதையின் மிக முக்கியமான கட்டத்தில் இவர் சித்தி 2 சீரியலுக்கு வெண்பாவாக நடிக்க வந்துவிட்டாரா. இவருக்கு பதில் அவசர அவசரமாக வேறு ஒரு பெண்ணை திருமணம் சீரியலில் நடிக்க வைத்தும் ஒன்னும் எடுபடவில்லை.

சீரியலுக்கு ஃ பிரெஷ்
சித்தி 2 சீரியலுக்கு மிக ஃபிரெஷான முகமாக ப்ரீத்தி இருக்கிறார். சின்ன பெண்ணாக வேறு இருப்பதால், சித்தி 2 சீரியலுக்கு ரொம்ப ஆப்டாக இருக்கிறார். கதையின் நாயகி கதாபாத்திரம் என்று நல்ல ரோல் கிடைத்து இருக்கிறது. சித்தி 2 மற்றும் திருமணம் சீரியல்களுக்கு தேதிகள் சரியாக ஒத்து வராததால்தான் திருமணம் சீரியலில் இருந்து விலக நேர்ந்தது என்றும் கூறியுள்ளார்.

கல்லூரி தேவதை
ப்ரீத்திக்கு 26 வயது ஆகிறதாம். பார்க்க அதைவிட வயது குறைவாக மிகவும் ஃ ப்ரெஷாக இருக்கிறார். கல்லூரி படிப்பை முடித்து மாடலிங் நடிப்பு என்று களம் இறங்கி இருக்கிறார் லக்னோவில் இருந்து கோயம்புத்தூருக்கு குடி பெயர்ந்த குடும்பம் ப்ரீத்தியினுடைய குடும்பம். பின்னணி பாடகியாக ஆசையில் இருந்த இவருக்கு எதிர்பாராத விதமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திலும் மகிழ்ச்சிதான் என்கிறார்.

படிப்பும் நடிப்பும்
படிப்பும் முக்கியம்,நடிப்பும் முக்கியம் என்று கூறும் ப்ரீத்தி மிக நன்றாக தமிழ் பேசுகிறார். படிப்பு முக்கியம் என்பதால்தான், ஒரே சீரியலில் தனது கவனத்தை செலுத்த திட்டமிட்டு, அடுத்தடுத்த வாய்ப்புக்களை ஒப்புக்கொள்ளாமல் இருப்பதாகவும் கூறுகிறார். சன் டிவியின் சித்தி 2 சீரியலில் நடிப்பது தனக்கு பெரும் புகழைத் தேடித் தரும் என்று நம்புவதாகவும் கூறுகிறார்.

நவீன் அனிதா
அனிதா, நவீன் என்று திருமணம் சீரியலில் இந்த ஜோடிக்கு என்று ஒரு பார்வையாளர்கள் இருந்தனர். அனிதாவாக நடிக்கும் ப்ரீத்தி அதில் இருந்து விலகியதும்,. இந்த ஜோடிக்கு வேறு ஒரு நடிகை நடித்து வருகிறார். என்றாலும், அப்போது இருந்த மவுசு இப்போதைய ஜோடிக்கு இல்லை என்றே கூறலாம். இது குறித்து கருத்து கூற மறுத்துவிட்டார் ப்ரீத்தி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications