Thirumanam Serial: அட இது நவரச நாயகன் பூ வேலி படம் மாதிரி இருக்கே!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் ரொம்ப பொறுமையான குணம் உள்ளவங்க தாராளமாக உட்கார்ந்து நிதானமா பார்க்கலாம்ங்க.
காதலிச்சது ஒருத்தி, கல்யாணம் செய்துக்கிட்டது ஒருத்தின்னு சந்தோஷ் ஒரு நிலை இல்லாத புத்தி கொண்டவனா இருக்கான்.
ஆனா ,பூவேலி படத்தில் இப்படி இல்லைதான்.. ஆனா, காதலிச்ச ஹீராவை விட்டுட்டு, கவுசல்யா மேல கார்த்திக்குக்கு லவ் வந்துரும்.

ஜனனி சக்தி
சக்தியை காதலிச்ச சந்தோஷ்,ஜனனியை கல்யாணம் செய்துக்கறான்.ஜனனியை பொண்டாட்டியாக ஏத்துக்க முடியாத சந்தோஷ், ஜனனிகிட்டே சக்தியை லவ் பண்றேன்..உங்களை என்னால ஏத்துக்க முடியாது ஜனனின்னு குண்டைத் தூக்கிப் போடுறான். படிச்ச பொண்ணு அவ என்ன செய்வா பாவம்.வேணும்னா உங்க இஷ்டப்படி வாழ்ந்துக்கோங்க. நாம் விவாகரத்து பண்ணிடலாம்னு சொல்லிடறா.

விவாகரத்து ஏற்பாடுகள்
ஜரூரா யாருக்கும் தெரியாமல் ஜனனி சந்தோஷ் இருவரும் விவாகரத்துக்கு அப்ளை பண்றாங்க. நடுவுல ஜனனியை பிடிச்சு போகுது சந்தோஷுக்கு.ஒரு நாள் அவள் அருகில் சென்று முத்தமிட போகையில், சக்தி சிங்கப்பூரில் இருந்து போன் பண்றா. அப்போ சந்தோஷ் மீண்டும் சக்தியை கல்யாணம் செய்துக்கறதுன்னு திடமா முடிவெடுத்து வேலைகள் பார்க்கிறான்.

காதல் பைத்தியம்
சக்திக்கு காதல் பைத்தியம் முத்தி, சந்தோஷை அடைய குறுக்கு வழிகளை கையாள ஆரம்பிக்க இப்போது அவளுக்கு மன நிலை சரியில்லாமல் போகுது. எப்போதும் சந்தோஷ் சந்தோஷ்னு உளறிக் கொண்டு இருக்க, மாடியிலிருந்து கீழே விழுந்து அடிபட்டுப் போகுது.

நம்ம வாழ்க்கையை
ஜனனி நாம் நம்ம வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கலாம் ஜனனி என்று சந்தோஷ் சொல்ல சுர்ருன்னு கோவம் வருது ஜனனிக்கு. நான் எத்தனையோ சந்தர்ப்பங்கள் உங்களுக்கு கொடுத்து நீங்க இதை சொல்ல மாட்டீங்களான்னு எதிர்பார்த்தேன்.அப்போது நீங்கள் சொல்லலை. இப்போ சக்தி நல்லா இருந்து நீங்க இப்படி சொல்லி இருந்தால் கூட நான் சந்தோஷப்பட்டு இருப்பேன். அவளுக்கு மன நிலை சரி இல்லாத இந்த நேரத்துல இப்படி நீங்க சொல்றது உங்கமேல எனக்கு இருந்த மதிப்பை சுத்தமா குறைச்சுருச்சுங்கன்னு சொல்லிட்டு அழறா.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications