Thirumanam Serial: பொண்டாட்டிகிட்டேயே உன் புருஷனை தாலி கட்ட சொல்லுன்னு சொல்றாளே சக்தி!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் சக்தியை காதலிச்சுட்டு, ஜனனியை கல்யாணம் செய்துகிட்டு சந்தோஷ் படும் கஷ்டம்தான் கதை.
சக்தியை கல்யாணம் செய்துகொள்ள இருந்த நேரத்தில், ஜனனியுடன் கல்யாணம் ஏற்பாடு செய்துடறார் சந்தோஷின் அப்பா. சக்தியை காதலிக்கும் விஷயத்தை ஜனனியிடம் சொல்ல நினைக்கையில் அது முடியாமல் போகிறது.
ஆனால், கல்யாணம் முடிந்த அன்றே சக்தியை காதலிக்கும் விஷயத்தை சந்தோஷ் சொல்லிவிட, இப்போது இருவரும் டிவோர்ஸ் செய்ய முடிவு செய்து இருக்கிறார்கள்.

ஜனனி சக்தி
சக்தி குடும்பத்தோடு மலேசியா போய்விட, இங்கு ஜனனியும், சந்தோஷும் டிவோர்ஸுக்காக அலைகிறார்கள். ஆனால், சந்தோஷின் அப்பா, தம்பி தங்கை இவர்களுக்கு எல்லாம் ஜனனியை ரொம்ப பிடித்து போகிறது. கல்யாணமாகி ஆறு மாதத்துக்கு மேல் ஆகிவிட்ட நிலையில்,, ஜனனியை சந்தோஷுக்கு பிடிக்கும் நிலையில் சக்தி மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்துட்டேன்னு போன் பண்றா.

சக்தி மீண்டும்
சந்தோஷ் பழைய நிலைமைக்கு போயி, மீண்டும் சக்தியை சந்திச்சு, விவாகரத்து கிடைக்கட்டும் சக்தி.. அப்புறம் நாம் கல்யாணம் செய்துக்கலாம்னு சொல்றான். சக்தி சந்தோஷுக்காக காத்திருந்தவள் சந்தோஷின் அண்ணி மாயாவின் சூழ்ச்சி வலையில் சிக்கி, அவங்க சொல்ற வேலைகளை சந்தோஷுக்கு எதிராக செய்ய ஆரம்பிக்கிறாள்.

சக்தி மலேசியா
சக்தி மலேசியாவுக்கு அவசரமாக போக வேண்டும் என்கிற சூழ்நிலையில், அவளை அனுப்ப ஜனனி, சந்தோஷ், நண்பன் கோபிகிருஷ்ணன் மூவரும் போயிருக்கிறார்கள். பாஸ்போர்ட் இதெல்லாம் எடுத்து வச்சுக்கோ சக்தின்னு சந்தோஷ் சொல்ல, திடீரென்று தாலியை எடுத்து கையில் தொங்கவிட்டு சந்தோஷ் முன்னால் நீட்டுகிறாள். மூவரும் அதிர்ச்சியாகி நிற்கிறார்கள்.

சந்தோஷ் கட்டு
சந்தோஷ்..இந்த தாலியை என் கழுத்துல கட்டு சந்தோஷ்... நான் சந்தோஷமா மலேசியா போறேன். அங்கே போயி என் குடும்பத்துக்கிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கிறேன்.. எனக்கு இந்த தாலி வேணும் சந்தோஷ்.. நீ மனசு மாறிடுவே..என்னால இனியும் பொறுமையா இருக்க முடியாதுன்னு அழறா சக்தி.

தாலி சந்தோஷ்
சந்தோஷ் அந்த தாலியை வாங்கி கையில் வச்சுக்கிட்டு, சக்தி என்னால்; உன் கழுத்துல தாலி கட்ட முடியாது சக்தி. இது எந்த மாதிரி சூழ்நிலை.. இன்னும் டிவோர்ஸ் கிடைக்கலை. இன்னொரு பொண்ணு கழுத்துல நான் கட்டின தாலி இருக்குது. இப்படி இருக்கும்போது உனக்கு தாலி கட்டுவது சாதாரண விஷயமா போச்சா உனக்கு? என்னால முடியாது சக்தின்னு சந்தோஷ் சொல்லிடறான்.
ஜனனி சந்தோஷை என் கழுத்துல தாலி கட்ட சொல்லு ஜனனின்னு கட்டின பொண்டாட்டியிடமே கேட்கும் இந்த சக்தி எப்படிப்பட்ட பெண்ணாக இருப்பாள்? கட்டின புருஷனை காதலித்தவளுக்கே விட்டு கொடுக்க நினைக்கும் ஜனனி தியாகியா?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications