Kalyana Veedu Serial: திருமுருகன் தொடர்ந்து தப்பு செய்றார்.. சானலுக்கு தெரியலையா?
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் போஸ்டரில் தொடர்ந்து திருமுருகன் தவறு செய்து வருகிறார் இது சானலுக்கும் தெரியவில்லையா? சுட்டிக் காட்டினாலும் திருமுருகன் தெனாவெட்டாக இருக்கிறார் என்றாலும், சானல் கண்டுக் கொள்ளாமல் இருப்பது ஏன்?
அடுத்தவன் பொண்டாட்டி தனது தோளில் கைப்போட்டபடி நிற்கும் போஸ்ட்டரை கல்யாண வீடு சீரியலில் இருந்து திருமுருகன் இன்னும் மாற்றவில்லை. இது பார்க்கவே அருவெறுப்பாக இருக்கிறது... குடும்ப சீரியல் என்று மார்தட்டிக் கொள்ளும் திருமுருகன் இதை விரும்பி வைத்து இருக்கிறார் போலும்.
சூர்யாதான் தனது ஜோடி என்று உறுதியான நிலையில், ஸ்வேதாவுடன் இருக்கும் போஸ்டர் எதற்காக என்று ஒவ்வொரு நாளும் எபிசோட் ஒளிபரப்பும்போது, ஒரு இயக்குநராக திருமுருகனுக்கு தோன்றாமல் போனது ஏன்?

கண்மணி அப்டேட்
கண்மணி சீரியலின் ஆரம்ப போஸ்டர் என்பது சவுந்தர்யா நடுவில் நிற்பாள், கண்ணனும் ஆகாஷும் மாலையுடன் இரு பக்கத்திலும் நிற்பார்கள். அடுத்து கண்ணன்தான் சவுந்தர்யாவுக்கு என்று வந்ததும், போஸ்டரை மாற்றி விட்டார்கள். இது கதையில் அப்டேட்டான விஷயங்களை ஒரு போஸ்டர் மூலம் உணர்த்துவதற்காகவும்தான். இந்த அப்டேட்டுக்காகவாவது திருமுருகன் அந்த போஸ்ட்டரை மாற்ற வேண்டாமா?

அடுத்தவன் பொண்டாட்டி
கதைப்படி ஸ்வேதா கோபிக்கு அடுத்தவன் பொண்டாட்டி.. அப்படி இருக்கும்போது அவள் கோபியின் தோளில் கைப்போட்டபடி போஸ்டரில் நிற்பது என்பது நன்றாகவா இருக்கும்? எத்தனை வருஷம் ஆனாலும் சூர்யாதான் என் பொண்டாட்டி என்று கோபியே டிக்ளேர் பண்ணிய பிறகும் இப்படியான போஸ்டர் முகம் சுளிக்க வைக்கிறது.

சன் டிவி சானல்
சன் டிவி ஒரு புரடக்ஷன் கம்பெனிக்கு அரை மணி நேர ஸ்லாட்டை ஒதுக்கினார்கள் என்றாலும், அத்துடன் அவர்கள் ஒதுங்கிக் கொள்வதில்லை. இது வேண்டும், அது வேண்டும்.. இப்படி கதையை நகர்த்துங்கள் .. டிஆர்பி எகிற இதை முயற்சி செய்யுங்கள் என்று தலையிட்டுக்கொண்டே இருக்கும். சன் டிவிக்கு ஒவ்வொரு வினாடியும் வியாபார நேரம்தான்.அதற்கேற்ப அந்த சானல் செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.

கண்டுக்கொள்ளாதது ஏன்?
அப்படி இருக்கும் சன் டிவி திருமுருகன் போஸ்டர் விஷயத்தில் இப்படி ஏனோதானோ என்று இருப்பதை கண்டுக்கொள்ளாமல் இருப்பது ஏன்? ஸ்வேதா சந்தேகம், சண்டை என்று இருந்த கதை போயாச்சு. அவளும் புருஷனும் சுமூகமாகி கதைப்படி டெல்லிக்கே போயும் விட்டார்கள். இன்னும் கல்யாண வீடு போஸ்டரில் நடுவில் கோபி ஒரு பக்கம் சூர்யா, இன்னொரு பக்கம் ஸ்வேதா என்று கோபியின் தோளில் கைப்போட்டபடி இருப்பது அவமானம்! இதை சன் டிவி கண்டுக்கொள்ளாமல் இருப்பது எதனால்?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications