Kalyana veedu serial: சினிமாவில் இப்படி ரொமான்ஸ் பண்ண முடியுமா திருமுருகன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இப்போது வீட்டின் வரவேற்பறைக்கே வரும் சீரியல்களிலும் ரொமான்ஸ் காட்சிகள் கண்களை கூச வைக்கின்றன.

அதுவும் ரொமான்ஸ் செய்பவர்கள் செய்தால்தான் எடுபடுகிறது. சன் டிவியில் கல்யாண வீடு சீரியலில் திருமுருகன் தனது ஜோடி சூர்யாவுடன் காவிரி ஆற்றங்கரையில் ரொமான்ஸ் செய்தது உண்மையில் பார்க்க முடியலைங்க.

வீட்டு வரவேற்பறைக்கே வந்து இப்படி கொஞ்சி கொடுமைப்படுத்தினால் எப்படி? நாங்கள் கொடுத்து இருக்கும் இடம்தான் காரணம்?

படத்தில் இப்படி

படத்தில் இப்படி

எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்று இரண்டு திரைப்படங்கள் எடுத்தார் திருமுருகன். இரண்டிலும் இவரே நடித்து இப்படி ரொமான்ஸ் செய்திருந்தால் படம் இப்படி ஓடி இருக்குமா? தியேட்டருக்கு போயி யாரும் படம் கூட பார்த்து இருக்க மாட்டார்கள்.

குடும்ப பெண்கள்

குடும்ப பெண்கள்

குடும்ப பெண்கள் திருமுருகன் மீது மரியாதை வைத்து அவரது சீரியலை விரும்பி பார்க்கிறார்கள். இவர் என்னடா என்றால் பெண்ணுக்கு இழுக்கு வருவது போல பாலியல் வன்கொடுமை காட்சிகள் வைப்பது, பெண்களை இழிவு படுத்துவது போல வசனங்கள் அரை கிழவி முக்கால் கிழவி என்று பேசுவது, இன்னொருத்தன் மனைவியாகிவிட்ட பெண்ணை தனது தோளில் கை போட்ட போஸ்டரை சுட்டிக் காண்பித்தாலும் மாற்றாமல் இருப்பது.. மீம்ஸ் போட்டாலும் கண்டு கொள்ளாமல் இருப்பது என்று அழிச்சாட்டியம் செய்கிறார்.

வரவேற்பறையில் வரவேற்கும்

வரவேற்பறையில் வரவேற்கும்

எங்கள் வீட்டு வரவேற்பறையில் உங்களை வரவேற்கும் பென்களுக்கு எப்போதாவதுதான் நீங்கள் மதிப்பு கொடுக்கிறீர்கள் திருமுருகன். ஆனால் , பல நேரங்களில் எங்கள் பெண்களுக்கு நீங்கள் இழுக்குத்தான் கொடுக்கிறீர்கள்,. உங்கள் வயதுக்கு நீங்கள் ரொமான்ஸ் செய்யவில்லை என்று உங்களை சீரியல் உலகம் வன்மையாக கண்டித்ததா என்ன?

கட்டிக் காப்பாற்றி

கட்டிக் காப்பாற்றி

எங்கள் வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்க எங்கள் வீட்டு பெண்கள் உங்களுக்கு கொடுத்து இருக்கும் மரியாதையை கட்டிக் காத்துக் கொள்ள நீங்கள் மற்றவர்களில் இருந்து கொஞ்சம் மாறுபட்டுத்தான் இருக்க வேண்டும். காரணம் உங்களுக்கும் வயதாகி விட்டது. என்னதான் நீங்கள் உங்களை வயது குறைந்தது போன்ற கதாபாத்திரத்தில் நடித்து உங்கள் வயதை குறைத்து காண்பித்துக் கொண்டாலும், ரொமான்ஸ் செய்வது போன்ற காட்சிகளையாவது தவிர்க்கலாமே! உங்கள் வயதில் சீரியல்களில் யாரும் ரொமான்ஸ் செய்யவில்லை என்பதை நினைவில் கொள்க. இப்போது சீரியல்களில் ரொமான்ஸ் செய்பவர்கள் சின்னஞ்சிறுசுகள்.

பார்த்து செய்யுங்க.. கண்ணெல்லாம் கூசுதுல்ல.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+