எவ்வளவு நேரம்தான்.. ஆத்தாடி.. என்ன மேடம் இப்படி கவுச்சியா பேசுறாங்க.. மிரண்டு போன புதுப் பையன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அந்த நடிகை இப்படியும் கெட்ட வார்த்தையில் பேசுவாரா. பரபரத்துப் போய்க் கிடக்கிறது டிவி சீரியல் வட்டாரம்.

ஒரு பெரிய தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிப்பு நிறுவனம். அதுல ஒரு தொடர்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சு, அதுல தாக்குப் புடிச்சுட்டா நாம வேற லெவல். கூடவே, இதைவிட எவ்ளோ பெரிய கஷ்டம் வந்தாலும் தாங்கற பக்குவமும் வந்துரும். காரணம் அந்த மேடமின் டிரீட்மென்ட் அப்படி கடுமையா இருக்குமாம்.

இப்படித்தான் அந்த தயாரிப்பு நிறுவன மேடம் நடிக்கும் தொடரின் ஷூட்டிங் நடந்துகிட்டு இருந்துச்சாம். சமீபத்தில்தான் விஷூவல் கம்யூனிகேஷன் படிச்ச ஒரு இளைஞர் அதில் இன்டர்ன்ஷிப்பாக சேர்ந்துள்ளார்.

மேடமுக்கு மயக்கம்

மேடமுக்கு மயக்கம்

அது மேடம் மயக்கும் போட்டு விழுவதைப் போன்ற காட்சி. டேக் ஆக்ஷன் என்று சொல்ல மேடமும் மயங்கி விழுந்தார். ஆனால் டேக் போய்க் கொண்டே இருந்தது. நாலு டேக் போய் விட்டதாம்.

கெட்ட வார்த்தை

கெட்ட வார்த்தை

இப்படியே டேக் போய்க் கொண்டிருந்ததால், கடுப்பான நடிகை டக்கென எழுந்து கெட்ட வார்த்தைகளில் ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்து விட்டாராம். இதைப் பார்த்து ஷூட்டிங் ஸ்பாட்டில்.. அதிர்ச்சி ஏற்படவில்லையாம். மாறாக, இன்னிக்கு நாம தப்பிச்சோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனராம்.

பயந்துட்டியா?

பயந்துட்டியா?

ஸ்பாட்ல எல்லாரும் ஸ்தம்பித்தது போல நடித்து நிற்க, 'வேலை பார்க்காம புடுங்குறியா? எவ்ளோ நேரம் படுத்து கிடக்குறதுன்னு கத்தினாராம்.பாவம் நம்ம ஸ்டூடன்ட். நல்ல ஆச்சாரமான குடும்பத்துல பிறந்த பையன் வேற. அ லங்க மலங்க விழித்து நிற்பதை பார்த்த நடிகை.. 'பயந்துட்டியா? எங்க குடும்பத்துல இப்படி பேசியே வளர்ந்துட்டோம். நீ கண்டுக்காத"ன்னாராம்.

நமக்கென வந்துச்சு

நமக்கென வந்துச்சு

ஒரு மாசம்தானே நமக்கு இன்டெர்ன்... நமக்கு என்ன வந்துச்சுன்னு பையன் வந்த வேலையாய் பார்க்க ஆரம்பிக்க, இப்போ நிறுவனம் தயாரிக்கும் சீரியல்களில், முக்கிய பொறுப்பில் இருக்கார் என்கிறார்கள்.

சுளை இனிப்பு

சுளை இனிப்பு

மேடம் பார்க்க பலாப்பழம் போல சொரசொரப்பா இருந்தாலும், உள்ளே சுளை போல இனிப்பான மனசு. கெட்ட வார்த்தை என்ன கெட்ட வார்த்தை. அவரை, அவர் கணவரே சகிச்சுக்கிட்டு இருக்கார். நமக்கு என்ன என்று அந்த யூனிட்டார் கூறுகிறார்களாம். சரி யார் அந்த இடம் என்பதையெல்லாம் நீங்களே கெஸ் பண்ணிக்கங்க.. ஆனால் பப்ளிக் பப்ளிக்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+