இதுதான் சரியான சமயம்...போட்டா போட்டியில் தொலைக்காட்சிகள்!
சென்னை: டிடி நேஷனல் சானல் கோவிட் 19 தொற்று லாக்டவுன் ஆரம்பித்த சில நாட்களில் ராமாயணம் இதிகாசத் தொடரை ஒளிபரப்ப ஆரம்பித்து, ராமாயணம் ஒளிபரப்பியதால் சானல் ரேட்டிங்கில் கிடுகிடுவென்று உயர்ந்து முதலிடத்தில் உள்ளது.
அடுத்து மகாபாரதம், விஷ்ணுபுரம், ஸ்ரீகிருஷ்ணா என்று பக்தி காவியங்கள், இதிகாசத் தொடர்களை ஒளிபரப்பி, தூர்தர்ஷனை அடிச்சுக்க முடியாது என்கிற நிலையில் இப்போது டிடி நேஷனல் சானல் உள்ளது.
விஜய் டிவியும் ஆரம்பத்தில் மகாபாரத்தை ஒளிபரப்பு செய்து வந்தது. அடுத்து வருகிற திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ராமாயணம் சீரியலை தமிழில் ஒளிபரப்ப உள்ளது. இதிகாசத் தொடர்களுக்கான வரவேற்புக்கு இதுதான் சரியான சமயம் என்று தொலைக்காட்சிகள் போட்டாபோட்டியில் இறங்கியுள்ளன.

ராமாயணம் தொடர்
ராமாயணம் தொடரில் கூனி கிழவியின் சகுனித் தனமாக கெட்ட குணங்கள் தவிர மற்ற அனைத்து விஷயங்களும், அனைவரும் தெரிந்துக்கொள்ளும் வண்ணமே இருக்கும். சீதை கொண்ட பதி பக்தி, ராமன் மீது தம்பிகள் கொண்டு இருக்கும் சகோதரத்துவ பாசம், அனுமனின் எல்லையில்லா பக்தி என்று அனைத்துமே மனதை பரவசம் அடையச் செய்யும் விஷயங்கள்.

ராமாயணம் வரவேற்பு
இப்படிப் பட்ட அற்புத நிகழ்வுகளைக் கொண்ட ராமாயணத்துக்கு என்றென்றும் மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. வயதான காலத்தில் கூட் அனைவரும் நாடி படிப்பது ராமாயணம் காவிய புத்தகத்தைத்தான். இதை கருத்தில் கொண்ட தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு ராமாயணத்தை ஒளிபரப்பி வருகின்றன.

விஜய் டிவி ராமாயணம்
விஜய் டிவியில் ராமாயணம் பக்தி காவியம் தமிழில் ஒளிபரப்பப் படுவது, கூடுதல் பிளஸ். குழந்தைகளும் பெரியவர்களும் ஆவலாக ராமாயணத்தை பார்ப்பார்கள். நேரமும் மாலை 6 மணிக்கு என்பதால், அது பெரும்பாலானவர்கள் வீட்டில் பக்தி நேரம். அனைவரும் குடும்பமாக உட்கார்ந்து பார்க்கும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.

லாக்டவுன் சீரியல்
கோவிட் 19 தொற்று லாக்டவுனில் சக்கை போடு போட்ட சீரியல் என்றால் அது ராமாயணம்தான்.ராமாயணம் காவியம் ஒளிபரப்ப பட்டதாலேயே, டிடி நேஷனல் சானலை ராமாயணம் முதலிடத்துக்கு சரசரவென்று தூக்கிச் சென்று நிறுத்தி இருக்கிறது. இது வரவேற்கத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications