இந்த லவ் புதுசா இருக்கே... பொண்ணு வெவரம்தான்... பொழச்சுக்கும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் ஒருவிதமா சமூக கருத்து சொல்ற மாதிரிதான் போயிகிட்டு இருக்கு. அஞ்சலி அழகா பொறந்த பொண்ணு.இவளை ஆசைப்பட்டு தேடி ஒரு மாப்பிள்ளை வர்றான்.

அக்கா முதல் தாரத்து பொண்ணு கண்ணம்மா. கருப்பா இருக்குது. இதனால சித்திக்கு, தங்கச்சிக்கு புடிக்கலை.அது மட்டுமா, தங்கச்சிய கட்டி குடுக்கப்போற இடத்துல, அந்த வருங்கால மாமியாருக்கு கருப்புன்னாலே ஆகாது.

அஞ்சலி அழகா இருக்கான்னு தன்னோட சின்ன பையன் ஆசைப்பட கல்யாண ஏற்பாடுகளும் நடக்குது. ஆனா, அஞ்சலிக்கு தம்பி அகிலனை விட அவன் அண்ணன் பாரதியைத்தான் புடிக்குது.

எடுபிடி

எடுபிடி

பொண்ணு மாப்பிள்ளை ரெண்டு வீட்டிலும் எடுபிடிங்கன்னு சொந்தத்துலயே இருப்பாங்க பாருங்க... அப்படித்தான் பொண்ணு வீட்டுல அஞ்சலி அம்மாவோட தம்பி தாய்மாமன் கணபதி. மாப்பிள்ளை வீட்டுல ஏதோ ஒண்ணுவிட்ட தங்கச்சி முறையில் அவளோட பொண்ணு எஜமானி அம்மாவை சித்தி சித்தின்னு கூப்பிட்டுக்கிட்டு அறிவழகின்னு அங்க ஒரு எடுபிடி.

பார்க்கலாம்னு

பார்க்கலாம்னு

அஞ்சலியை பார்த்ததில்லைன்னு அகிலனோட அக்கா சொல்ல, கூட்டமா அவளை பார்க்க எஜமானி அம்மா தவிர எல்லாரும் கிளம்புறாங்க. சொல்ல மறந்துட்டேனே..அந்த அறிவழகியும்தான். அஞ்சலி வீடு கூட மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஏழை சம்பந்திக்கு பரிசா குடுத்த அழகிய வீடுதான்.

மனசு டப்பு டப்பு

மனசு டப்பு டப்பு

எல்லாரும் காரை விட்டு இறங்க, அறிவழகி கடைசியா இறங்கறா.. கார் கதவை சாத்த செல்ல, நம்ம எடுபிடி கணபதி என்ட்ரி ஆகறார். அவரை அறிவழகி பார்க்க, கணபதி அறிவழகியை பார்க்க..இருவரும் கண்களை சிமிட்டிக்கறாங்க. சார் நீங்க எவ்ளோ ஹேண்ட்சம் தெரியுமான்னு கேட்கறா.. அப்படியான்னு அவன் கேட்க.. ஆமாங்க உங்களை பார்த்த உடனே கண்ணு டுப்பு டுப்புன்னு அடிச்சுக்குது.மனசு டப்பு டப்புன்னு அடிச்சுக்குதுன்னு சொல்றா.

வெட்கத்துக்கு வெல்கம்

வெட்கத்துக்கு வெல்கம்

மொத்தமா சொல்லனும்னா உங்களை பார்த்ததும்தாங்க வெட்கத்துக்கே வெல்கம் சொல்லி இருக்கேன்.. ஆத்மார்த்தமா சொல்லனும்னா ஐ லவ் யூங்கன்னு சொல்றா.

கமிட்டட்

கமிட்டட்

நீங்களும் அழகு பீசா இருக்கீங்க... உங்களை மிஸ் பண்ண மனசு வரலைங்க... ஆனா, அல்ரெடி நான் கமிட்டெட்.னு சொல்லி இந்த பக்கம் திரும்பி ஃபீல் பண்றான். இதுக்கெல்லாம் நான் அதிர்ச்சி ஆக மாட்டேன்..அந்த லவ்வுக்கு பிரேக்-அப் குடுத்து எண்டு கார்டு போட்டுருவோம்னு சொல்றா.

அறிவழகி

அறிவழகி

வீட்டுக்கு வந்து எஜமானி சவுந்தர்யா போனில் அறிவழகி கணபதி அக்காவுக்கு போன் செய்யறா. என்ன கணபதி சார் இருக்காங்களான்னு கேட்கறா.என்ன சம்பந்தி நீங்க.. அவன் ஒரு எடுபிடி பய.. தண்டத்துக்கு என் கூட பொறந்த தம்பி.. எதுனாச்சும் வேலை இருந்தா சொல்லுங்க..மாங்கு மாங்குன்னு செய்வான்.. அனுப்பி வைக்கவான்னு கேட்கறாங்க.

கணபதி தண்டமா

கணபதி தண்டமா

என்னது கணபதி தண்டமா.. நான் சம்பந்தி சொல்றேன்.. இனிமே கணபதி சாருக்கு வேலை எதுவும் வைக்க கூடாது.நல்லா கவனிச்சுக்கணும். மரியாதை குறைவா நடத்துனீங்க.. உங்க மக அஞ்சலிக்கும், என் மகன் அகிலனுக்கு நடக்கற கல்யாணம் நின்னு போயிரும்னு சொல்றா.

தம்பி சார்

தம்பி சார்


கணபதி வெளியில் போயிட்டு களைப்புடன் வர.. வாங்க தம்பி சார், களைப்பா இருக்கீங்களே.. மோர் எதுவும் குடிக்கறீங்களா, இல்லை ஜூஸ் தரட்டுமா தம்பி சார்னு அக்கா கேட்கறாங்க.என்னக்கா இது திடீர்னு தம்பி சார்னு சொல்றேன்னு கேட்க உனக்கு தெரியாதா, கூட பொறந்த தம்பியை தம்பி சார்னு கூப்பிடறதுதான் இப்போ டிரண்டாம்னு சொல்றாங்க.

உண்மையில் இந்த காட்சி எல்லாருக்கும் சிரிப்பை வரவழைச்சு இருக்கும். அறிவழகியா நடிக்கும் பொண்ணு இன்னொரு மைனா நந்தினியா வர வாய்ப்பு இருக்கு. காமெடி நல்லா வருது இந்த பொண்ணுக்கு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+