மக்களே...இந்த வாரம் வைகைப் புயல் வடிவேலு வாரம்...!
சென்னை: கோடை விடுமுறை என்று சொல்வதா... கோவிட் 19 தொற்று 3வது லாக்டவுன் நீடிக்கிறது என்று சொல்வதா என்று குழப்பம் இருந்தாலும், விடுமுறை போலத்தான் லாக்டவுன் காலத்தை பிள்ளைகள் என்ஜாய் செய்கிறார்கள்.
Recommended Video
தொலைக் காட்சிகளில் தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை சலிக்க சலிக்க பார்த்துவிட்டு, அடுத்து என்ன பார்க்கலாம் என்று சானல்களை மாற்றியும்...ஓடிடி தளங்களில் பிடித்ததை பார்த்தும் பொழுதைக் கழிக்கின்றனர்.
அப்படித்தான் இந்த வாரம் முழுக்க இரவில் குலுங்கி குலுங்கி சிரிக்க வைகைப் புயல் வடிவேலுவின் படத்தை ஒளிபரப்ப இருக்கிறது சன் டிவி. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு சன் டிவியில் வடிவேலு படங்கள் ஒன்லி!

திங்கள் வின்னர்
சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடித்து இருக்கும் வின்னர் படத்தை திங்கள் கிழமை சன் டிவி ஒளிபரப்புகிறது. பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்.. இந்த கோட்டைத் தாண்டி நீயும் வரக் கூடாது.. நானும் வர மாட்டேன்...என்று கிளம்பும் வடிவேலு திரும்பி என்று சொல்லிவிட்டு கிளம்ப..ரியாஸ்கான் திரும்பி என்று கேட்டு வடிவேலுவை ஆக்ரோஷமாகத் திருப்ப வர மாட்டேன்னு சொல்ல வந்தேன்னு வடிவேலு சொல்வது..இப்படி செம காமெடிகள் இந்த படத்தில் இருக்கும்.

மனதை திருடிவிட்டாய்
மனதை திருடிவிட்டாய் படத்தில் கதாநாயகன் பிரபுதேவாவுடன் சேர்ந்து மட்டும் இல்லாமல், சின்ன கலைவாணர் விவேக்குடன் சேர்ந்தும் காமெடி செய்து இருப்பார்.சிங் இன் த ரெய்ன்..என்று வடிவேலு பாடுவது...கேன்டீனில் வேலை செய்யும் விவேக்குடன் மோதுவது என்று அனைத்து நகைச்சுவை காட்சிகளும் சூப்பராக இருக்கும்.

வெற்றி கொடி கட்டு
வெளிநாட்டுக்கு போயிட்டு வந்து துபாய்ல ஒட்டக பாலில்தான் டீ போடறான்.. உன்கிட்ட அந்த பால் இருக்கான்னு டீக்கடைக்காரனை கலாய்ப்பது... பார்த்திபனை பார்த்து பயந்து ஓடுவது என்று இருந்தாலும், பார்த்திபன் வளர சூரிட்டி கை எழுத்து போடுவது என்று குணச்சித்திர கேரக்டராகவும் அந்த படத்தில் வடிவேலு நடித்து இருப்பார்.

எங்கள் அண்ணா
எங்கள் அண்ணா வடிவேலு காமெடி ஒருபக்கம். நமீதாவின் அழகு காதல் ஒரு பக்கம், ஸ்வர்ணமால்யா துரும்பாக இளைத்து இந்த படத்தில் நடித்தது என்று ஒரு பக்கம் இருந்தாலும்...நம்ம கேப்டன் செமயா நடிச்சு இருப்பார்.வாவ் வாவ் என்று கேப்டன் விஜயகாந்த் நடிப்பை வாயை பிளந்து பார்க்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications