தூத்துக்குடி கொத்தனாரு.. அந்த பாட்டை கேட்டு ஆடிப்போயிட்டேன்.. வாவ் பிரதீப் ரங்கநாதன்: நிழல்கள் ரவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழில் ஏராளமான இளம் டைரக்டர்கள் தற்போது வந்துள்ளார்கள்.. அனைவருமே அசத்துகிறார்கள்.. சமீபத்தில் டிராகன் படம் செய்த பிரதீப் ரங்கநாதன் பின்னிட்டாரு.. இன்னும் இதுபோல ஏராளமான இளம் இயக்குனர்கள் தமிழில் வரவேண்டும். இது சினிமாவை மேலும் ஆரோக்கியப்படுத்தும் என்று பிரபல நடிகர் நிழல்கள் ரவி, பெருமைபட பேசியிருக்கிறார்.

Better today என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த நடிகர் நிழல்கள் ரவி பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், சினிமா சம்பந்தமான பல்வேறு விஷயங்கள் குறித்து ஜாலியாக பேசியிருக்கிறார். அதன் சுருக்கம்தான் இது:

Thoothukudi Kothanar Actress Nizhalgal Ravi Pradeep ranganathan


ஜாக்கிசான் ஸ்டைல்

"எனக்கு ஜாக்கிசான் கூட நடிக்கணும்னு ஆசை.. சின்ன வயசிலிருந்தே அவருடைய படங்களை பார்த்து வந்திருக்கிறேன். அவருடைய ஸ்டைல், ஸ்பீடு, போஸ், கேஷூவலாக சண்டை போடுவது, அதிலும் டூப்பே இல்லாமல் சண்டை போடுவது இதெல்லாம் சான்ஸே இல்லை.. அதனால், அவருடன் ஒரு படமாவது நடிச்சிடணும்னு ஆசை.

இப்போது தமிழில் ஏராளமான இளம் டைரக்டர்கள் வந்துள்ளார்கள்.. அனைவருமே அசத்துகிறார்கள்.. சமீபத்தில் டிராகன் படம் செய்த பிரதீப் ரங்கநாதன் பின்னிட்டாரு..

கேஷூவல் நடிப்பு - ஸ்மார்ட்

தனுஷ், சிவகார்த்திகேயன் எல்லாருமே கேஷூவலாக நடிக்கிறாங்க.. பிச்சு உதறாங்க.. அமரன் படம் 3 முறை பார்த்தேன்.. குடும்பஸ்தன், லப்பர் பந்து இப்படி நிறைய படங்களை நிறைய முறை பார்த்தேன்.. இவர்கள் எல்லாருமே மேலே போயிட்டே இருப்பாங்க.. இதுபோல், இன்னும் நிறைய இளம் இயக்குனர்கள் வரணும்.. அவர்களுடன் நானும் நடிக்கணும்ன்னு ஆசை.

எனக்கு மட்டும் டைம் டிராவல் செய்யக்கூடிய வாய்ப்பு வந்தால், எம்ஜிஆர் காலத்துக்கு சென்றுவிட ஆசை.. அதிலும் அவருடன் சேர்ந்து பல்லாண்டு வாழ்க என்ற படத்தில் நடித்துவிடணும்னு ஆசை.. எம்ஜிஆர் என்றாலே கொடைவள்ளல். தர்மம் தலைகாக்கும், தக்க சமயத்தில் உயிர்காக்கும்.. எப்பேர்ப்பட்ட வரிகள் பாருங்க.. எம்ஜிஆரின் ஒவ்வொரு பாட்டுக்களும் நம்மை நல்வழிப்படுத்தக்கூடியவை.. ஊக்கப்படுத்தக்கூடியவை.

தூத்துக்குடி கொத்தனாரு

இப்ப சமீபத்தில் தூத்துக்குடி பாட்டு கேட்டு ஆடிப்போயிட்டேன்.. இப்படியெல்லாம்கூட பாடல் வரிகளை எழுதலாமா? என்று மிரண்டுட்டேன்.. தமிழை பற்றி நல்லா சொல்லியிருக்காங்க. தூத்துக்குடி ஊர் பிடிக்கும். ஆனால், அந்த பாடல்தான்.. இளைஞர்களுக்கு இந்த பாட்டு ஜாலியாக இருந்தாலும், சீரியஸாக பார்க்கும்போது, இவையெல்லாம் வருங்கால இளைஞர்களை கெடுத்துவிடும்.

90கள் காலகட்ட சினிமாவுக்கும், இப்போதுள்ள சினிமாவுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம், அன்று ஃபிலிம் இருந்தது, இன்று டிஜிட்டலில் உள்ளது.. இப்போதுள்ள லைட்ஸ் எல்லாமே வித்தியாசமாக இருக்கு..

கார்த்தி நடித்த சர்தார், படத்தில் நானும் நடிச்சிருக்கேன்.. ஆர்ட் டைரக்டர்கள் எல்லாம் கற்பனைகளையும் தாண்டி இருக்கிறார்கள்.. இப்போதைய கதைக்களமும் வித்தியாசமாக இருக்கிறது. டிராகன் படத்தை பார்த்தாலே, படத்தின் கதை சொல்லும் விதமும், கதைக்களமும் அருமையாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+