Thug Life Box Office: கமல் ஹாசனுக்கு பெருத்த நஷ்டம்.. ஃபிளாப் ஆகிறது 'தக் லைஃப்'.. பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் எவ்வளவு?
சென்னை: கமல் ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் இணைந்து உருவாக்கிய 'தக் லைஃப்' திரைப்படம், அதன் முதல் வார இறுதியில் ₹36.52 கோடி வசூல் செய்துள்ளது. ஆனால், இது சமீபத்திய காலங்களில் வெளியான கமல் ஹாசனின் படங்களின் தொடக்க வசூலுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.

'தக் லைஃப்' வசூல் விவரம்
படத்தின் தயாரிப்பு தரப்பு வட்டார தகவலின்படி, 'தக் லைஃப்' நான்கு நாள் வார இறுதியில் ₹36.52 கோடி நிகர வசூலை ஈட்டியுள்ளது. கலவையான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில், வார நாட்களில் படத்தின் வசூல் நிலைமை எப்படி இருக்கும் என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும்.
ஜூன் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, கேங்ஸ்டர் கதையாக உருவாகியுள்ள 'தக் லைஃப்', இந்தியாவில் ₹6.12 கோடி வசூலித்தது. இதில் தமிழ் பதிப்பு முக்கிய பங்கு வகித்தது. சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் அதிக வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் முறையே ₹7.75 கோடி மற்றும் ₹6.12 கோடி மட்டுமே ஈட்டியது. கர்நாடக ரிலீஸ் இல்லை என்பதால் அங்கிருந்து வர வேண்டிய சுமார் தின வசூல் 5 கோடி ரூபாய் வரவில்லை.
கமல் ஹாசன் மற்றும் மணிரத்னம் போன்ற பிரபலங்களின் பெயர்கள் இணைந்துள்ள இப்படத்தின் வசூல் பலருக்கு திருப்திகரமாக இல்லை என்று கருத்துகள் எழுந்துள்ளன.
இந்தியாவில் 'தக் லைஃப்' படத்தின் நாள் வாரியான வசூல் விவரம்:
நாள் 1: ₹15.5 கோடி
நாள் 2: ₹7.15 கோடி
நாள் 3: ₹7.75 கோடி
நாள் 4: ₹6.12 கோடி
மொத்தம்: ₹36.52 கோடி
முந்தைய படங்களுடன் ஒப்பீடு
கமல் ஹாசனின் முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில், 'தக் லைஃப்' கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியான படங்களில் குறைந்த தொடக்க வசூலை பெற்றதாக கருதப்படுகிறது. இதற்கு முன் வெளியான 'இந்தியன் 2' மூன்று நாள் வார இறுதியில் ₹69.15 கோடி வசூலித்தது. அதேபோல், 2022ல் வெளியான 'விக்ரம்' திரைப்படம் முதல் மூன்று நாட்களில் ₹110.8 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
'தக் லைஃப்' திரைப்படத்திற்கு விமர்சகர்களிடமும் பார்வையாளர்களிடமும் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. வார நாட்களில் படத்தின் வேகம் குறைந்ததால், தயாரிப்பாளர் கமல் ஹாசனுக்கு நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார், ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.
'தக் லைஃப்' எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்றாலும், வருங்காலத்தில் வசூலில் முன்னேற்றம் ஏற்படும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மோசமான விமர்சனம்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம் வெளியானதிலிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தின் விஷுவல் மற்றும் நடிகர்களின் நடிப்பு பாராட்டப்பட்டாலும், ட்விட்டர் விமர்சனம் உள்ளிட்ட சமூக வலைத்தள விமர்சனங்களில் ஒரு சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மெதுவான திரைக்கதை - விமர்சனங்கள்
குறிப்பாக, படத்தின் முதல் பாதி மிகவும் மெதுவாக நகர்வதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். கதையைச் சொல்ல அதிக நேரம் எடுத்துக் கொண்டதாகவும், தொய்வான திரைக்கதை அனுபவத்தைக் கொடுத்ததாகவும் சிலர் கூறியுள்ளனர். இடைவேளைக்குப் பிறகு வேகம் எடுத்தாலும், அது போதுமானதாக இல்லை என்று அவர்கள் கருதுகின்றனர்.
திரைக்கதையில் ஆழம் மற்றும் உணர்வுப்பூர்வமான இணைப்பு இல்லை என்று எக்ஸ் - ட்விட்டர் பயனர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். "சிறந்த நடிகர்கள், சிறந்த விஷுவல், ஆனால் கதை எங்கே?" என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சிலர், கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், ஸ்டைல் மற்றும் நடிகர்களின் நட்சத்திர அந்தஸ்தை மட்டுமே நம்பியிருப்பதாகக் குறை கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications