இன்றைய குழந்தைகள் ஹைபிரிட் குழந்தைகளா இருக்காங்க... கோவை சரளா
சென்னை: இன்றைய குழந்தைகள் ஹைபிரிட் குழந்தைகளா இருக்காங்க. அது சந்தோஷமா இருந்தாலும் யதார்த்தத்தை இழந்து விடுவாங்களோன்னு கவலையா இருக்கு என்று கூறி இருக்கார் கோவை சரளா.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சன் டிவியின் முக நூல் பக்கத்தில் நடிகை கோவை சரளா சில விஷயங்களைக் கூறி இருக்கார்.
அப்போதுதான் இன்றைய குழந்தைகள் நம்மைவிட பல மடங்கு புத்திசாலிகளாக எல்லா விஷயங்களும் தெரிந்த குழந்தைகளாக இருக்கின்றனர் என்று சொன்னார்.

கோலி பம்பரம்
சின்ன வயசில் நான் ரொம்ப யதார்த்தமா வாழ்ந்து இருக்கேன். இன்னிக்கு வரைக்கும் அப்படி வாழ முடியலைன்னு ஏங்கித் தவிச்சு ,எப்படி யதார்த்தமா வாழறதுன்னு அந்த வாழக்கையைத் தேடிகிட்டு இருக்கேன்னு சொன்னார். சின்ன வயசில் பம்பரம் கோலி விளையாடறது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

நம்மை விட
இன்றைய குழந்தைகள் நம்மை விட புத்திசாலிகளா நிறைய விஷயம் தெரிஞ்சவங்களா இருக்காங்க. அவங்களுக்கு நாம ஒன்னும் கத்துக்க கொடுக்க வேண்டியதில்லை.அவங்ககிட்டே இருந்துதான் நாம நிறைய கத்துக்கணும். அறிவில் ஹைபிரிட் குழந்தைகளா இருக்காங்க. அதனால் எங்கே குழந்தைகளுக்கான யதார்த்தத்தை இழந்துருவங்களோன்னு எனக்கு வருத்தமா கூட இருக்கு என்றார்.

கப்பக்கிழங்கு கமர்கட்
எனக்கு சின்ன வயசில் சாப்பாடு பிரியாணி இதெல்லாம் ரொம்ப பிடிக்காது. நொறுக்குத் தீனி சாக்லேட்ஸ், கமர்கட், கப்பக்கிழங்கு அதாவது குச்சி கிழங்கு எனக்கு ரொம்ப பிடிக்கும், இன்னிக்கு வரைக்கும் அதை விரும்பி சாப்பிடுவேன், குழந்தைகளுக்கு பிடித்ததை சாப்பிட கொடுங்க.பிடிக்காததை திணிக்காதீங்க.

விருப்பம் முக்கியம்
குழந்தைகள் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது ரொம்ப அவசியம்.என்னை என் விருப்பத்துக்கு என் வீட்டில் விட்டதால்தான் இன்னிக்கு கோவை சரளாவா உங்கள் முன் இருக்கிறேன்.அதே மாதிரி படி படின்னு ரொம்ப ஓவர் லோட் கொடுக்காதீங்க என்றும் கூறி இருக்கார் கோவை சரளா.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications