சினேகனுக்கு பிறந்தநாள்! கன்னிகா கொடுத்த சூப்பர் பரிசு! ரொம்ப வருஷமா காத்திருந்திருப்பார் போல!
சென்னை: கவிஞர் சினேகன் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் அவருக்கு அவருடைய மனைவி கன்னிகா கொடுத்த பரிசுதான் தற்போது டிரென்டாகி வருகிறது. இன்னும் சொல்ல போனால் பாராட்டுகளையும் கொடுக்கிறது.
கவிஞர், நடிகர், அரசியல்வாதி, சிறந்த பேச்சாளர், பண்பாளர் என்ற பலமுகங்களை கொண்ட சினேகனுக்கு இன்று 46 ஆவது பிறந்தநாள். தமிழ் சினிமாவில் எத்தனையோ முன்னணி நடிகர்களுக்கு வெற்றி பாடலஸ்களை எழுதி கொடுத்துள்ளார்.

இவர் புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கினார். அன்று தொடங்கிய இவருடைய பாடல் சூரரைப் போற்று படத்தில் வரும் காட்டு பயலே என்ற பாடல் வரை பரந்து விரிந்துள்ளது.
இந்த கவிஞர் எந்த காலத்திற்கும் ஏற்ற வகையில் எழுதுபவர் என்ற பெயர் பெற்றுள்ளார். இயக்குநர் சேரனின் பாண்டவர் பூமி படத்தில் இவர் எழுதிய பாடல் இவருக்கு திருப்புமுனையை கொடுத்தது. தோழா தோழா , அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் ஆகிய பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன.
இவர் இயக்குநர் அமீர் நடித்துள்ள யோகி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அது போல் உயர்திரு 420 என்ற திரைப்படத்திலும் கதாநாயகனாக தனது பாதையை தொடங்கினார். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 1 இல் இவர் கலந்து கொண்டார். அங்கு பலரது மனங்களை வென்று ரன்னராக வென்றார் கவிஞர் சினேகன்.
சினிமா, இலக்கியம் என்று மட்டும் இல்லாமல் அரசியலிலும் தனது கால் தடத்தை பதித்தார். 2019ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டார். அது போல் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இவ்வாறு பல பரிமானங்களை கொண்ட சினேகனுக்கு இன்று 46 ஆவது பிறந்தநாள். அவருக்கு ரசிகர்கள், திரைத்துறையினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சினேகனின் மனைவி கன்னிகா அவருடைய கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி ஒரு பரிசையும் கொடுத்துள்ளார்.
இதுகுறித்த வீடியோவில் சினேகனை படுக்கை அறையில் இருந்து கன்னிகா அழைத்து வருகிறார். அங்கு வாங்கி வைத்திருந்த பரிசை திறந்து பார்க்க சொல்கிறார். இதை எடுத்து பார்த்ததும் சினேகனுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! அது சினேகன் நீண்ட நாளாக வாங்க வேண்டும் என்ற பட்டியலில் இருந்த பொருளாக இருக்கும் போல!
ஃபூட் மசாஜர்! அரசியலில் இருக்கும் சினேகன் நீண்ட நேரம் நின்றுக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும். அது போல் பாடலை எழுதுவதற்கு அவருடைய மைன்ட் ரிலாக்ஸாக இருந்தால்தான் கற்பனையில் ஆயிரம் வார்த்தைகள் உதிக்கும். எனவே அதற்கு நம் உடல் உறுப்புகளின் முடிவு கால் அடி பாதத்தில் கிடப்பதால் அங்கு மசாஜ் செய்யும் போது புத்துணர்ச்சி கிடைக்கும். இந்த பொருளின் விலை ரூ 5000 முதல் ரூ 6000 வரை இருக்கலாம் என தெரிகிறது.
பிறந்தநாள் என்றால் சர்ட், பேன்ட், புடவை என்றில்லாமல் அந்த நபருக்கு எது பயனுள்ளதாக அமையுமோ அதை வாங்கித் தர வேண்டும். அது போல் கன்னிகா வாங்கித் தந்ததில் அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. சினேகனும் தனது கால்களுக்கு மசாஜ் செய்து மகிழ்ந்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications