Kanmani Serial: பாரதிராஜா படத்தின் பனிஷ்மென்ட் மாதிரி இருக்குதே...!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் கடந்த ஒரு வாரமாகவே அதிரடி காட்சிகள்தான்..லேடீஸ் ஆக்ஷன் சீரியல் மாதிரி ஆகிப் போச்சு. வளர்மதிதான் ஆக்ஷன் ஸ்டார்.
இயக்குநர் பாரதிராஜா படமான கிழக்கே போகும் ரயிலில் சுதாகரை கழுதை மேல உட்கார வச்சு பனிஷ்மென்ட் கொடுப்பது போல, இங்கே சவுந்தர்யாவின் மேல் சாணித் தண்ணியை கரைச்சு ஊத்துவாங்களாம்.
அப்பாவை சவுந்தர்யா துப்பறியும் வேலைக்கு யூஸ் செய்துக்கொண்டாள் என்று செம டோஸ் விடுகிறாள் வளர்மதி. நல்ல வில்லின்னு சொல்ற அளவுக்கு பார்க்கவே பக்குன்னு இருக்கு.

சாணித் தண்ணீர்
இன்னும் 24 மணி நேரத்துக்குள்ள என் அம்மாதான் உங்க அப்பாவை கொலை செய்தாங்கன்னு நிரூபி. அப்படி நிரூபிக்க முடியலேன்னா சாணித் தண்ணியை கரைச்சு சவுந்தர்யாவை உட்கார வச்சு தலைமேல் ஊத்தி தொடப்பம், செருப்பால அடிப்போம்னு சவால் விடறாங்க. சவுந்தர்யா விக்கித்து நிற்க, கண்ணன் சவாலை ஏத்துக்கறான்.

துப்பு கிடைக்கலை
நேரம் போக போக ஒரு துப்பும் கிடைக்கவில்லை. வளர்மதியின் அப்பா ராஜதுரை, உனக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் என்கிட்டே கேளு கண்ணா நான் செய்யறேன்னு சொல்றார் . உடனே அவர் பாக்கெட்டில் ஸ்பை கேமிரா வச்சு வீட்டுக்கு போயி கிருஷ்ணவேணி கிட்டே ஏதாவது பேசி உண்மையை வாங்குங்க மாமான்னு அனுப்பி வைக்கறாங்க.

கிருஷ்ணவேணி உளறல்
கிருஷ்ணவேணி புருஷனிடம் உண்மையை உளற ஆரம்பிக்கும் சமயம்.. அம்மா போன் என்று சொல்லிக்கொண்டே வந்த வளர்மதி போனில் சிக்னல் இல்லை என்றதும் உஷாராகி விடுகிறாள். என்னமோ இங்கே மட்டும் சிக்னல் இல்லை என்று அவள் துப்பறிய ஆரம்பிக்க வியர்த்து விறுவிறுத்து மகளுக்கு பயந்து நிற்கிறார் ராஜதுரை.

ஸ்பை கேமிரா
ஸ்பை கேமிராவை கண்டுபிடிச்சுட்டா வளர்மதி, சவுந்தர்யாவை கூப்பிட்டு, வெட்கமா இல்லை.. சாணித் தண்ணி ஊத்துவோம்னு பயந்துகிட்டு இந்த வேலையைப் பார்த்து இருக்கியா.. அதுக்கு தூக்குல தொங்கலாம்டி என்று பேசுகிறாள். வளர்மதியின் அப்பா ராஜதுரை கூட பெண் வளர்மதிடம் பயப்படுகிறார். அந்த அளவுக்கு ரொம்ப போல்டான வளர்மதி...தெளிவான வில்லத்தனம்.

பாரதிராஜா படம்
பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தில் சுதாகருக்கு மொட்டை அடிச்சு, கரும் புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல உட்கார வச்சு ஊர்கோலம் அழைச்சுட்டு போவாங்க. இது போல இருக்குது கண்மணி சீரியலில் சாணித் தண்ணியை கரைச்சு வச்சு இருக்கோம்..தொடப்பமும் இருக்கு...உங்க பொண்ணு சவுந்தர்யா எங்கேன்னு வளர்மதி கேட்பது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications