Diwali OTT: தீபாவளிக்கு ஓடிடி-யில் ரிலீசாகும் டாப் 10 திரைப்படங்கள் இவைதான்!
சென்னை: தீபாவளியை முன்னிட்டு, இந்த வாரம், பல சுவாரஸ்யமான திரைப்படங்கள் பல்வேறு OTT களில் வெளியாக உள்ளன. க்ரிப்பான த்ரில்லர் முதல், காமெடி வரை பல்வேறு ஜானர் திரைப்படங்கள் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற தளங்களில் வெளியாக உள்ளன.
அதில் தமிழ் திரைப்படங்களும் பல உள்ளன. அவற்றில் பல ஹிட் அடித்தவை. அல்லது பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கிய படங்களாகும்.
ரைட்டு.. அக்டோபர் 28 இன்று முதல் நவம்பர் 3, 2024 வரையிலான வாரத்திற்கான டாப் 10 OTT ரிலீஸ்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
1. தங்கலான்
- வெளியீட்டு தேதி: அக்டோபர் 28, 2024
- தளம்: நெட்பிளிக்ஸ்

பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள இந்த தமிழ் படம் சமூக நீதி கருத்துகளை தூவிச் செல்கிறது. வரலாற்றுப் பின்னணியில் அமைக்கப்பட்ட இது, ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடும் ஒரு மனிதனின் பயணத்தையும், வாழ்க்கை முறையையும் காட்டுகிறது. வெளியாகும் முன்பிருந்தே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தங்கலான் ஆகும்.
2. அஞ்சாமை
- வெளியீட்டு தேதி: அக்டோபர் 29, 2024
- தளம்: பிரைம் வீடியோ

அஞ்சாமை என்பது மனித உறவுகளின் சிக்கல்களை ஆராயும் க்ரிப்பான த்ரில்லர் கதையாகும். விதார்த் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம், சிறப்பான நடிப்பு மற்றும் ஈர்க்கக்கூடிய கதைக்களத்துடன் கட்டிப்போடும் என்று நம்பலாம்.
3. லப்பர் பந்து
- வெளியீட்டு தேதி: அக்டோபர் 31, 2024
- தளம்: டிஸ்னி+ ஹாட்ஸ்டார்

லப்பர் பந்து திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்கில் வெளியானதிலிருந்து வரவேற்பு அலைகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இப்படம் கிராமப்புற கிரிக்கெட் பொழுதுபோக்கை காதல், நகைச்சுவை, மோதல் என்ற பல உணர்வுகளோடு சொல்கிறது. படத்தின் எழுத்து மற்றும் நடிப்பு, குறிப்பாக ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷின் நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற இப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.
4. காளிதாசா
- வெளியீட்டு தேதி: நவம்பர் 1, 2024
- தளம்: நெட்பிளிக்ஸ்
காளிதாசா என்பது புராணக்கதையை நவீன கதைசொல்லலுடன் இணைக்கும் ஒரு கற்பனைக் கதையாகும். சிறப்பான காட்சிகள் மற்றும் ஈர்க்கக்கூடிய கதைக்களம் கொண்ட படமாகும்.
5. வெண்ணிலா
- வெளியீட்டு தேதி: நவம்பர் 2, 2024
- தளம்: ZEE5
இந்த காதல் நகைச்சுவை ஜானர் படம், இப்போதைய காலத்தில் காதலின் சோதனைகள் மற்றும் கஷ்டங்களை சவால்களை மையமாகக் கொண்டுள்ளது.
6. கன்னி மாடம்
- வெளியீட்டு தேதி: நவம்பர் 2, 2024
- தளம்: SonyLIV

கன்னி மாடம் என்பது தலைமுறை மோதல்கள் மற்றும் நவீன சமூகத்தில் பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை அலசும் ஒரு குடும்பப் படமாகும்.
7. ஒரு நாள் கூத்து
- வெளியீட்டு தேதி: நவம்பர் 3, 2024
- தளம்: டிஸ்னி+ ஹாட்ஸ்டார்
திருமணம் நடத்தி வைக்கும் தொழில் செய்பவரின் வாழ்க்கை கதையை பின்தொடர்கிறது இந்த படம். காமெடி கலந்து தரப்பட்டுள்ளது. அதேநேரம், தனிப்பட்ட மற்றும் தொழில்முறை சவால்களையும் காட்டுகிறது.
8. புத்தம் புது காலை விடியாதா
- வெளியீட்டு தேதி: நவம்பர் 3, 2024
- தளம்: Amazon Prime Video

புகழ்பெற்ற சீரிசின் தொடர்ச்சியாக இந்த படம் வெளியாகியுள்ளது. வெவ்வேறு சூழல்களில் காதல் மற்றும் உறவுகளை ஆராயும் பல்வேறு கதைகளை ஒன்றிணைக்கிறது.
9. மித்யா தி டார்கர் சாப்டர்
- வெளியீட்டு தேதி: நவம்பர் 1, 2024
- தளம்: ZEE5

ஹூமா குரேஷி, அவந்திகா தாசானி மற்றும் நவீன் கஸ்தூரியா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'மித்யா தி டார்கர் சாப்டர்' தொடர் நவம்பர் 1 அன்று ZEE5 இல் வெளியாகிறது
10. கிஷ்கிந்தா காண்டம்
- வெளியீட்டு தேதி: நவம்பர் 1, 2024
- தளம்: டிஸ்னி+ ஹாட்ஸ்டார்

ஒரு திருமணமான தம்பதியினரும், வனத்துறை அதிகாரிகளும், ஒரு கிராமத்தில் குரங்குகள் ஏற்படுத்தும் குழப்பத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க போராடும் கதை. இந்த படம் நவம்பர் 1 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. ஆசிஃப் அலி, விஜயராகவன், அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications