Top 5 Tv Programmes: டிவின்னா சன்னு.. மூவின்னா லோக்கல்.. அள்ளிக் கொடுத்த டிஆர்பி.. அதிரடி வாரம்!
சென்னை: டிவி, சினிமான்னா அது சன் டிவியாகத்தான் இருக்கிறது எப்போதுமே முதலிடத்தில். இதோ கடந்த ஒரு வாரத்தில் டிவி சினிமாக்களிலேயே சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் லோக்கல் படம்தான் டிஆர்பியில் அள்ளிக் கட்டியுள்ளது.
டிவின்னாலே எல்லாமே டிஆர்பிதான்.. டிஆர்பிக்காக பல சீரியல்களையே தூக்கிப் போட்ட சேனல்கள் உள்ளன. குறிப்பாக சன் டிவியில் தரமான சீரியல்களுக்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். சரியாக ஓடலையா.. தூக்கிப் போட்டு விட்டு போய்க் கொண்டே இருப்பார்கள்.
ஆனானப்பட்ட ராதிகாவுக்கே கடுக்காய் கொடுத்தது சன் டிவி. சீரியல் தொய்வடைந்த காரணத்தால் ராதிகாவின் சீரியலேயே முக்கியத்துவம் இல்லாத ஸ்லாட்டுக்கு மாற்று மூடு விழா கண்டனர்.

டாப் டிவி
சரி அது இருக்கட்டும்.. கடந்த வாரத்தில் எந்த டிவி நிகழ்ச்சி டாப் என்று பார்த்தால் டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது மிஸ்டர் லோக்கல் படம்தான். சன் டிவியில் செப்டம்பர் 2ம் தேதி ஒளிபரப்பான படம் இது. சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த படம். தியேட்டரை விட டிவியில் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

நம்ம வீட்டுப்பிள்ளை
இப்படித்தான் முன்பு தியேட்டர்களில் சரியாக போகாத சீமராஜா படம் டிவியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் தமிழக குடும்பங்களில் நம்ம வீட்டுப் பிள்ளையாக நிரந்தரமாக சிவகார்த்திகேயன் இடம் பிடித்திருப்பது ருசுவாகியுள்ளது.

நாயகி சீரியல்
டிஆர்பியில் அடுத்த இடமும் சன் டிவிக்குத்தான். சன் டிவியில் வெளியாகும் நாயகி சீரியலுக்குத்தான் இந்த இடம் கிடைத்திருக்குது. நாயகி சீரியல் சன் டிவியில் வெளியாகி மக்களிடையே பிரபலமான தொடராக விளங்கி வருகிறது.

ஜீ தி செம்பருத்தி
3 வது இடத்தில் சன் டிவியில் வெளியான கருப்பன் படம் உள்ளது. விஜய் சேதுபதி நடித்த படம்தான் கருப்பன். 4 வது இடத்தில் ஜீ தமிழ் டிவி வருகிறது. இந்த டிவியில் வெளியாகி வரும் செம்பருத்தி தொடருக்கு இந்த இடம் கிடைத்துள்ளது.

5 வது 3 வது
5வது இடம் சன் டிவிக்கே போயுள்ளது. அதில் வெளியாகி ஹிட்டடித்துள்ள ரோஜா தொடர் டாப் 5 ல் உள்ளது. ரோஜா தொடரின் ரொமான்ஸ் காட்சிகள் ரொம்ப பிரசித்தமானவை. இடையில் சற்று தொய்வடைந்திருந்த ரோஜா தற்போது மீண்டும் களை கட்ட ஆரம்பித்துள்ளது.
இது கடந்த வார நிலவரம். இந்த வார நிலவரம் நாளை தெரியும்.. நாளை மீண்டும் சந்திக்கலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications