டாப் நடிகர் ஜெய்சங்கரை மிரட்டினாரா? சக்ஸஸ் "ஜெய் ஜோடி".. இவரே நிஜ கொடை வள்ளல்: ரகசியம் சொன்ன பிரபலம்
சென்னை: திமுகவில் உறுப்பினராக இருந்தவர் நடிகர் ஜெய்சங்கர். ஆனால் கட்சி, பதவி என அரசியலில் ஆர்வத்தை காட்டவில்லை,. "அண்ணே" என்ற கும்பிடு போட்டு பேசும் கோடம்பாக்கத்து மொழியை, "ஹாய்" என்று கூப்பிடும் நட்பு ஸ்டைலை கொண்டுவந்தது ஜெய்சங்கர்தான்.. அனைவரிடமும் நட்பாக பழகுவார்.. பந்தாவே இல்லாதவர்" என்று டாக்டர் காந்தராஜ் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
Whistle Plus என்ற யூடியூப் சேனலுக்கு , மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் பேட்டி ஒன்றை தந்துள்ளார். அதில், "பாலும் பழமும் படத்தில் சிவாஜி டாக்டர் ரோலில் நடித்திருந்தார். கதாநாயகி சாந்தியாக நடித்த சரோஜாதேவிக்கு கேன்சர் வந்துவிட்டது.. இதுதான் படத்தின் கதை..

சாந்தி சாந்தி... சாந்தி
இதுக்கு 3வது ரீல் முதல் கடைசி ரீல் வரை , படம் முழுக்க சாந்தி சாந்தின்னு ஒரு டாக்டர் பாடி அலைஞ்சிட்டு இருந்தார். எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன், இதற்கொரு மருத்துவம் கண்டேனா என்று, ஒரு டாக்டர் என்பதை பாடிட்டு இருந்தார். ஆனால், பாடல்களுக்காகவே அந்த படம் ஓடியது.. படத்தை பார்த்ததுமே என் நண்பர்கள் எல்லாம், என்ன படம் இப்படி இருக்கே? என்று கிண்டலடித்தார்கள்..
தாய் சொல்லை தட்டாதே படத்தில் பொட்டல் வெயிலில் தலையில் தொப்பி, கூலிங் கிளாஸ், வுல்லன் கோட் சூட் கால் வரை போட்டுக் கொண்டு, சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய் என்று எம்ஜிஆர் பாடினார்.
அம்மா பாசம், ஆயா பாசம்
இப்படியெல்லாம் மக்கள் படங்களை பார்த்து கொண்டிருந்த நேரத்தில்தான், இளமையாக, சுருட்டை முடியும் இல்லாமல், காலேஜ் மாணவர்களை போல நடிகர்கள் வர துவங்கினார்கள்.. ஸ்டைலாக இருந்தார்கள்.. அவர்களது படங்களும் ஓட ஆரம்பித்தது. முக்கியமாக, அவர்களின் படங்களில் தாய் பாசம், தந்தை பாசம், அக்கா பாசம், ஆயா பாசம் இதெல்லாம் இருக்காது.
எல்லாமே ஈஸிகோயிங் படங்கள்தான்.. இளைஞர்களின் பிரச்சனைகளை சொல்லும் படங்களாக இருந்தன. ஜேம்ஸ் பாண்டு ஸ்டைலில் படங்களும் வர ஆரம்பித்தன. இதுபோன்ற படங்களில் நடித்தவர்கள்தான், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஏவிஎம் ராஜன். இதில், முத்துராமன், சிவக்குமார் பெரிதாக வந்திருக்க வேண்டியவர்கள். முத்துராமன் போல, ஒரு பன்முக நடிகரை பார்க்க முடியாது..
அதேபோல., ஜெய்சங்கரின் வளர்ச்சியையும் பலரும் தடுத்துவிட்டடார்கள். ஜெய்சங்கரை எம்ஜிஆர் தன்னுடைய படங்களில் நடிக்க வைக்கவில்லை. ஆனால், சிவாஜியும், ஜெமினியும் ஜெய்சங்கரை தங்கள் படங்களில் நடிக்க வைத்தார்கள்.. அதிலும் ஜெய்சங்கர் மீது ஜெமினிக்கு தனி பிரியம் உண்டு..
நிஜமான கொடைவள்ளல் - ஜெய்சங்கர்
பல தயாரிப்பாளர்களை வாழ வைத்தவர் ஜெய்சங்கர்.. பணப்பற்றாக்குறையால் தயாரிப்பாளர்கள் யாராவது இருந்தால், அவர்களிடம் 2 லட்சம் தந்து, "இந்தாங்க, இதை வைத்து படம் முடியுங்க.. படம் வெற்றி அடைந்தால், இதை திருப்பி தாங்க" என்று உதவி செய்தவர் ஜெய்சங்கர்,
அதிலும் வெளியில் யாருக்கும் சொல்லாமலே உதவிகளை செய்தவர் ஜெய்சங்கர்.. மற்றவர்கள் எல்லாம், பத்திரிகையாளர்களை கூப்பிட்டு வைத்து கொண்டு, போட்டோவுக்கு போஸ் தந்து, 'கொடை வள்ளல்' என்று பெயர் போட்டுக் கொண்டவர்கள். ஆனால், அப்படி எந்த செயலையும் ஜெய்சங்கர் செய்ததில்லை.
ஜெய ஜோடி ஹிட் படங்கள்
ஜெயலலிதா, ஜெய்சங்கருடன் நடித்த படங்கள் எல்லாமே ஹிட்.. நீ, யார் நீ, முத்துச்சிப்பி என வரிசையாக பல படங்கள் சூப்பராக ஓடியது.. தினத்தந்தியில் "ஜெயா ஜோடி" என்றுதான் இருவரின் பெயரையும் பொதுவாக போடுவார்கள்.. ஜெய்சங்கரின் பெயரைகூட போட தனியாக மாட்டர்கள்..
"ஜெய ஜோடி இந்த படத்திலும் வழக்கம்போல அபாரமாக நடித்திருந்தார்கள்.. ஜெமினி-சாவித்திரிக்கு பிறகு அற்புதமான ஜோடி கிடைத்தது" என்றுதான் அன்று எல்லாருமே பத்திரிகைகளில் விமர்சனம் எழுதினார்கள்.
இருவரும் நெருங்கி பழகியது எல்லாருக்குமே தெரிந்த விஷயம்தான்.. அன்று முரசொலியில் கட்டம் கட்டியே அதை எழுதினார்கள்.. கோமளவள்ளி என்பது ஜெயலலிதாவின் இயற்பெயர்.. ஜெயலலிதாவின் அம்மாதான் அவரை அம்மு என்று செல்லமாக கூப்பிட்டார். அதுபோல, அம்மு என்று ஒருசிலர்தான் ஜெயலலிதாவை சினிமாவில் உரிமையாக கூப்பிடுவார்கள். அப்படியெல்லாம் அவரை கூப்பிட்டு வந்ததுதான் அந்த தகராறுகள் எல்லாம்.
அண்ணே போய் ஹாய் வந்தது
எம்ஜிஆரிடம் ஒரு பழக்கம் இருந்தது. தன்னை கண்டு யாராவது பயந்துவிட்டால், அவர்களை அதற்கு பிறகு கண்டுக்கவே மாட்டார். ஜெய்சங்கர், ரஜினி இவர்கள் இருவருக்கும் அதுதான் நடந்தது.
திமுகவில் உறுப்பினராக இருந்தவர் ஜெய்சங்கர். ஆனால் கட்சி, பதவி என அரசியலில் ஆர்வத்தை காட்டவில்லை,. "அண்ணே" என்ற கும்பிடு போட்டு பேசும் கோடம்பாக்கத்து மொழியை, "ஹாய்" என்று கூப்பிடும் நட்பு ஸ்டைலை கொண்டுவந்தது ஜெய்சங்கர்தான்.. அனைவரிடமும் நட்பாக பழகுவார்.. பந்தாவே இல்லாதவர்" என்று தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications