மோசமான நோயில் லைலா? சிரிச்சி சிரிச்சி பேசுவாங்களே? இதுதான் காரணமா? ஆடிப்போன நடிகர் விக்ரம்: பிரபலம்
சென்னை: அழுகையை எப்போதுமே அடக்கி வைக்கக்கூடாது, உடனே அழுதுவிட வேண்டும் என்பார்கள். அதுபோலத்தான் சிரிப்பும்... இதற்கு மருத்துவர்கள்தான் ஆலோசனை தரணும்.. அதேசமயம், இதை மருத்துவர்களாலும் கண்டுபிடிப்பது கடினமானது. சில நடிகைகளை பார்த்தால், எந்த காலத்திலும் வெறுப்பு வராது. அப்படிப்பட்ட நடிகைதான் லைலா" என கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.
90களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில், உச்சத்தில் திகழ்ந்த நடிகைகளில் ஒருவர் லைலா. இந்தியில் நடிகையாக அறிமுகமான லைலா, மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்தார். தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கள்ளழகர் படத்தில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து, பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
பிறகு, திருமணமாகி செட்டிலாகிவிட்ட லைலா, சர்தார் திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க துவங்கினார். சமீபத்தில் விஜய்யின் goat திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில், சிரிப்பு நோயால் அவதிப்படுவதாக லைலா கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

சிரிப்பு நோயால் பாதிப்பு
அதில், "நான் சிரிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னால் சிரிப்பதை நிறுத்தவே முடியாது. அப்படி நிறுத்த முயன்றால் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விடும்" என்று கூறியிருந்தது பலருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
இந்நிலையில், AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "எந்த நடிகையையும் கிசுகிசுவில் விட்டுவைப்பதில்லை...அப்படித்தான் லைலா மீதும் அன்று கிசுகிசுக்கள் வரவே செய்தன.. ஒரே நடிகருடன் 2, 3 படங்கள் நடித்துவிட்டால், உடனே இணைத்து பேசிவிடுவார்கள்.
காதல் திருமணம்
ஆனால், தான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே, ஈரான் நாட்டை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்த லைலா, 2006-ல் அவரை திருமணம் செய்து கொண்டார்.. அதற்கு பிறகு, லைலா சினிமாவில் நடிக்கவில்லை..
திரையுலகில், சில நடிகைகள் இல்லாத வெற்றிடத்தை, வேறு நடிகைகள் நிரப்பிவிடுவார்கள். உதாரணத்துக்கு கிளாமராக நடிப்பதற்கு, இன்னொரு கிளாமர் நடிகைகள் வந்துவிடுவார்கள். ஆனால் லைலாவின் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியவில்லை.. லைலாவின் சிரிப்பு, லைலாவின் கன்னக்குழி, இதற்கெல்லாம் வேறு நடிகை யாரும் மாற்று கிடையாது.
ரீ என்ட்ரி லைலா
லைலா எங்கே போய்விட்டார் என்று பலரும் கேட்டுக் கொண்டேயிருந்தனர். இதற்கு பிறகுதான், கார்த்தி நடித்த சர்தார் படத்தில் ரீ-என்ட்ரி தந்தார்.. விஜய்யின் கோட் படத்திலும் நடித்தார்.. நீண்ட இடைவெளிக்கு பிறகே தன்னுடைய கால கட்ட நடிகையான சினேகாவுடன் சேர்ந்து நடித்தது லைலாவுக்கும் சந்தோஷம்தான்.
சட்டம் என்ற படத்தின் ஆடியோ ரிலீஸில் லைலா பேசும்போது, தனக்கு சிரிப்பு நோய் இருப்பதாக கூறியிருக்கிறார். அரிய வகையான இந்த சிரிப்பு நோய், ஆயிரத்தில் ஒருத்தருக்குகூட இருக்காது. அந்த அளவுக்கு அரியவகையானது. ஆனால், இதை நோய் என்று சொல்ல முடியாது.. நரம்புகளை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும்..
விக்ரம் சேலஞச்
பிதாமகன் படத்தின் ஷூட்டிங்கில், லைலா எந்நேரமும் சிரித்து கொண்டிருப்பதை விக்ரம் கவனித்துள்ளார்.. உடனே லைலாவிடம், எப்போதும் சிரித்து கொண்டே இருக்கிறாயே? நார்மலாக சிரிக்காமல், 30 செகண்ட் இருக்க முடியுமா? என்று சேலஞ்ச் செய்தாராம் விக்ரம்.
இதைக்கேட்ட லைலா, தன்னால் முடியும் என்று சொல்லிவிட்டு 30 நொடிகள் சிரிக்காமல், அந்த சிரிப்பை கட்டப்படுத்தினாராம். ஆனால், கண்ணிலிருந்து தண்ணீர் தாரை தாரையாக கொட்டியிருக்கிறது. இதனால், மேக்கப் முழுவதும் கலைந்துவிட்டதாம். லைலாவின் கண்களிலிருந்து தண்ணீர் கொட்டுவதை பார்த்து விக்ரம் அதிர்ச்சியடைந்துவிட்டாராம்.
அழுகையை எப்போதுமே அடக்கி வைக்கக்கூடாது, உடனே அழுதுவிட வேண்டும் என்பார்கள். அதுபோலத்தான் சிரிப்பும்... இதற்கு மருத்துவர்கள்தான் ஆலோசனை தரணும்.. அதேசமயம், இதை மருத்துவர்களாலும் கண்டுபிடிப்பது கடினமானது. சில நடிகைகளை பார்த்தால், எந்த காலத்திலும் வெறுப்பு வராது. அப்படிப்பட்ட நடிகைதான் லைலா" என கூறியிருக்கிறார் பாலாஜி பிரபு.
யார் யாரை தாக்கும்
பொதுவாக இந்த சிரிப்பு நோய் என்பது, உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளின் காரணமாக, தன்னிச்சையாக, காரணமின்றி சிரிப்பது, அழுவது அல்லது சிரிக்க வேண்டிய அழவேண்டிய நேரங்களில் அளவுக்கு அதிகமாக செய்வதாகும்.. இந்நோய் பெரும்பாலும் பக்கவாதம், அல்சீமர், பார்கின்சன்ஸ், மூளையில் காயம் உள்ளவர்களை தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications