சோனியா அகர்வால் டூ சைத்ரா வரை! டாப் குக் டூப்பு குக் டைட்டில் வின்னருக்கு எத்தனை லட்சம் பரிசு?
சென்னை: சன் டிவியில் வெங்கடேஷ் பட் நடுவராக இருந்து நடத்தும் டாப் குக்கு டூப் குக்கு எனும் சமையல் நிகழ்ச்சி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிலையில் அந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடு இன்று தொடங்கியது.
விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 5யிலிருந்து வெங்கடேஷ் பட் விலகினார். இதைத் தொடர்ந்து ரசிகர்கள் பட் சார் இல்லாமல் குக் வித் கோமாளியை எப்படி பார்ப்பது என கேள்வி எழுப்பினர். இந்த நிலையில்தான் பட், சன் டிவியில் வேறொரு நிகழ்ச்சியில் கமிட் ஆனது தெரிய வந்தது. அதற்கான புரோமோக்களை ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்து வந்தார்.

டாப் குக்கு டூப்பு குக்கு என்ற பெயர் கொண்ட அந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்தான் நடுவர். இவருடன் ஜி.பி.முத்து, மோனிஷா, பரத், தீபா உள்ளிட்டோரும் சன் டிவிக்கு வந்துவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. இதில் ஸ்டென்ட் நடிகர் தீனா கலந்து கொள்ளும் ப்ரோமோ வெளியாகி சிரிப்பை வரவழைத்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் ஒரு ப்ரோமோ வெளியானது. அந்த ப்ரோமோவில் "இங்கு நான்தான் கிங்! நான் வச்சதுதான் சட்டம்" என வெங்கடேஷ் பட் சொன்னார். இந்த நிகழ்ச்சி வாரந்தோறும் பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அதன்படி இன்றைய தினம் இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடு தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் ஃபெப்சி விஜயன், சாய் தீனா, சோனியா அகர்வால், சுஜாதா சிவக்குமார், சிங்கம்புலி, ஐஸ்வர்யா தத்தா, ஷாலி நிவாகாஸ், நரேந்திர பிரசாத், சைத்ரா ரெட்டி ஆகிய 9 போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் தீபா சங்கர், அதிர்ச்சி அருண், பாரத் ராஜேஷ் , தீனா, மோனிஷா, ஜிபி முத்து, விஜய் , முகுந்த், சவுந்தர்யா, கதிர் ஆகிய 9 டூப்புகளும் இருக்கிறார்கள். 9 போட்டியாளர்களும் தலா 3 அணிகளாக பிரிக்கப்படுகிறார்கள். சமைப்பதற்காக 3 மென்டர் செஃப்கள் கொடுக்கப்படுகிறார்கள். இந்த ஷோ வரை அந்த 3 அணிகளுக்கும் சமையலுக்கு ஐடியாக்களையும் உதவிகளையும் செய்வர்.
இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வெல்லும் போட்டியாளருக்கு ரூ 20 லட்சம் பரிசு! அதற்கு முன்னதாக விஜய் டிவியிலிருந்து வெங்கடேஷ் பட் ஏன் விலகினார் என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்த நிலையில், தன்னை விஜய் டிவிக்கு கொண்டு வந்ததே மீடியா மேசன்ஸ் நிறுவனம்தான். அவர்கள் வெளியேறியதால் தானும் வெளியேறியதாக பட் அண்மையில் கொடுத்த போட்டிகளில் தெரிவித்துள்ளார்.
யார் இந்த வெங்கடேஷ் பட்?: அக்கார்டு ஹோட்டலில் சிஇஓவாக இருப்பவர் வெங்கடேஷ் பட். இவர் விஜய் டிவியில் சமையல் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதயம் தொட்ட சமையல் நிகழ்ச்சி மூலமும் பிரபலமடைந்தார். தனது யூடியூப் சேனலில் நிறைய எளிய சமையல் குறிப்புகளை கொடுத்து வருகிறார். இவர் அசைவ உணவை உண்ண மாட்டார். ஆனால் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் சமைக்கும் அசைவ உணவை நுகர்ந்து பார்த்தே அதில் உள்ள நிறை குறைகளை சொல்லிவிடுவார். இவர் ஆசான் மெமோரியலில் கேட்டரிங் படித்தவர். பிறகு சிங்கப்பூரில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்திருந்தார்.
1994 ஆம் ஆண்டு ஹோட்டல் சோழா ஷெரட்டனில் பட் , தனது பணியை தொடங்கினாரம். இதையடுத்து பெங்களூரில் உள்ள லீலா பேலஸில் 2001 ஆம் ஆண்டு பணியாற்றினார். இதையடுத்து ஊட்டி, புதுவையில் உள்ள அக்கார்டு மெட்ரோபாலிட்டனில் பட் தற்போது சிஇஓவாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் செஃப் தாமோதரனுடன் இணைந்து குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியின் நடுவராக கலந்து கொண்டார்.
இதுவரை 4 சீசன்களை கடந்துள்ளது இந்த நிகழ்ச்சி. இதில் புகழ், பாலாவுடன் வெங்கடேஷ் பட் அடிக்கும் லூட்டியை பார்த்தால் சிரிப்பு சிரிப்பாக வரும். அதே நேரத்தில் தனது பணியிலும் கவனமாக இருந்து நடுவராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications